நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 06

இஸ்ராயேலர் திரும்பவும் பிரமாணிக்கந் தப்பினதால் மதியானித்தருக்குக் கையளிக்கப்பட்டதும், -- சேதெயோன் வரலாறும்.

1. இஸ்ராயேல் மக்கள் கர்த்தர் சமுகத்தில் கெடுதியைச் செய்தார்கள்; அவரும் அவர்களை மதியானித்தர் கையில் ஏழு வருஷ காலம் விட்டுவிட்டார்.

2. அவர்களால் வெகு துன்பத்தையடைந் தார்கள்; அதினால் அவர்களை எதிர்க்க வேண்டி மலைகளில் கெபிகளைச் செய்து பல மான விடங்களைத் தேடிக்கொண்டார்கள்.

3. இஸ்ராயேலர் விதைவிதைத்தபிறகு மதி யானித்தரும், அமலேசித்தரும், கீழ்த்திசை மற்ற ஜாதியரும் அவர்களிருந்த ஸ்தலம் ஏறினார்கள்.

4. அவ்விடத்திலேயே தங்கள் கூடாரங் களை அடித்துக் காஜாவரைக்கும் பயிர்களை யயல்லாம் அழித்தார்கள்: இஸ்ராயேல் ஜீவ னத்துக்கு வேண்டிய ஆடுகளையும், மாடுகளையும், கழுதைகளையும் யாதொன்றும் விட்டவர்களல்ல.

5. ஏனென்றால் அவர்கள் தங்கள் கூடாரங் களோடும், மிருகஜீவன்களோடும் வருவார் கள். அப்போது மனிதரும் ஒட்டகங்களுங் கணக்கற்றவர்களாய் வந்திறங்கி வெட்டுக் கிளிகளைப்போல சகலத்தையும் நிரப்பித் தங்கள் கைகளிற் சிக்கின சகலமும் நிர்முலம் பண்ணினார்கள்.

6. மதியானித்தருக்கு முன்பாக இஸ்ரா யேலர் மிகவுந் தாழ்த்தப்பட்டார்கள்.

7. ஆனதால் மதியானித்தரை எதிர்க்க ஆண்டவரை ஒத்தாசை கேட்டு மன்றாடி னார்கள்.

8. அவராவெனில் அவர்களிடந் தீர்க்கத்தரி சையான ஒரு புருஷனை அனுப்பி சொல்லு வித்ததாவது: இஸ்ராயேல் கர்த்தரான சர்வே சுரன் சொல்லுவது: நாம் உங்களை எஜிப்தி னின்று இறங்கச்செய்து அடிமை ஸ்தலத்தி னின்று மீட்டோம்.

9. எஜிப்த்தியருடையவும், உங்களை வரவித்த சகல சத்துராதிகளுடையவும் கையி னின்று உங்களை இரட்சித்தோம். நீங்கள் பிரவேசிக்கையில் அவர்களைத் துரத்தி அவர் கள் தேசங்களை உங்களுக்கு கையளித்தோம்.

10. நாம் உங்களுக்கு அறிவித்தது யாதெ னில்: நாம் உங்கள் ஆண்டவராகிய சர்வேசு ரன். நீங்கள் வசிக்கும் தேசத்தாராகிய அமோ றையருடைய தெய்வங்களுக்குப் பயப்பட வேண்டாமென்றோம். ஆயினும் நம்முடைய வார்த்தைகளை நீங்கள் கேட்டீர்களில்லை என்றறிவித்தார்.

11. பிறகு ஆண்டவருடைய சம்மனசான வர் வந்து எஸ்ரி குடும்பத்தலைவனான ஜோவாசுக்குச் சொந்தமான எப்பிராவிலி ருந்த கர்வாலி மரத்தடியில் உட்கார்ந்தார். ஜோவாசுடைய குமாரன் சேதெயோன் மதியானித்தருக்குத் தப்பித்தோட கோதுமை யை அடித்துச் சேர்க்கையில்,

12. ஆண்டவருடைய சம்மனசானவர் அவனுக்குத் தோன்றிச் சொன்னதாவது: ஆண்டவர் உன்னோடிருக்கக்கடவாராக, மனிதரில் மிகப் பலவானே என்றார். 

13. அவரை நோக்கிச் சேதெயோன்: ஆண்டவனே! ஆண்டவர் எங்களோடிருப்பாரேயானால் எங்களைத் தின்மைகள் பீடிப்பானேன். ஆண்டவர் எங்களை எஜிப்த் தினின்று இரட்சித்தாரென்று எங்கள் பிதாக் கள் சொன்னதும், சொல்லுவித்த மற்ற அதிசயங்களும் எங்கே? இப்போதோ ஆண்டக ளைக் கைவிட்டார், மதியானித்தருக்கு எங்வர் எங்களைக் கையளித்தார் என்றான்.

14. ஆண்டவர் அவனை பார்த்து சொன் னது: நீ உன் தைரியத்தை விடாமல் போய் மதியானித்தர் கைகளினின்று இஸ்ராயேலை மீட்பாய், நாமே உன்னை அனுப்பினோ மென்றறிந்துகொள என்றார்.

15. ஆனால் அவன்: ஆண்டவரே நான் இஸ்ராயேலை எப்படி மீட்பேன்? மனாசே வம்சத்தில் என் குடும்பமோ மிகத் தாழ்ந்தது: நானோ என் தகப்பன் வீட்டில் மிகச் சிறிய வன் என்றான்.

16. அதற்கு ஆண்டவர்: நாம் உன்னோடி ருப்போம், மதியானித்தரெல்லாரையும் ஒரு மனிதனைப்போல் முறியடிப்பாய் என்றார்.

17. அவனோ: நான் உம்மிடத்தில் தயவ டைந்தது உண்மையானயால் நீர்தான் என்னி டம் பேசுகிறதாக அடையாளங் காண்பியும்.

18. நான் போய் பலி கொண்டு வந்து உமக்கு ஒப்புக்கொடுக்கிறவரைக்கும் இவ்வி டம் விட்டகலாதேயும் என்றான். அவரும் மறுமொழியாக: உன் வருகைக்குக் காத்திருப் போமென்றார்.

19. சேதெயோனும் போய் ஆட்டுக்குட்டி சமைத்து, ஒரு படி கோதுமை அரைத்துப் புளிப்பில்லாத அடை சுட்டு, கறியை ஒரு கூடையிலும் கறிச்சாற்றை ஒரு பானையிலும் வைத்து எல்லாம் (மேற்படி) கர்வாலி மரத்த டியில் கொண்டுவந்து ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தான்.

20. ஆண்டவருடைய சம்மனசானவர் அவனை நோக்கி: நீ கறியையும், அடையையும் எடுத்து அந்தக் கல்லின்மேல் வைத்து சாற்றை அதுகளின்மேல் ஊற்றென்றார். அவன் அப் படியே செய்தபோது,

21. ஆண்டவருடைய சம்மனசானவர் தம் முடைய கையிலேந்திய கோலை நீட்டி கறியை யும் அடையையும் தொடவே கல்லினின்று அக்கினி எழும்பிக் கறியையும், அடையையும் சுட்டெரித்துப் பட்சித்தது. ஆண்டவருடைய சம்மனசானவரோ அவன் கண்களினின்று மறைந்தார்.

22. சேதெயோன் ஆண்டவருடைய சம்ம சுதானென்று கண்டு ஐயோ! என் கர்த்தராகிய சர்வேசுரா ! ஆண்டவருடைய சம்மனசான வரையல்லோ நான் முகமுகமாய்க் கண்டே னென்றான்.

23. ஆண்டவர் அவனை நோக்கி; உனக்குச் சமாதானமுண்டாகக்கடவது; பயப்படாதே சாகமாட்டாய் என்றார்.

24. ஆகையால் சேதெயோன் அவ்விடத் திலேயே ஆண்டவருக்குப் பலபீடத்தை ஏற்ப டுத்தி அதை ஆண்டவருடைய சமாதானம் என்றழைத்தான். இன்றுவரைக்கும் அப்படி யே வழங்கிவருகிறது. அவன் எஸ்ரி வம்சத்துக் குரித்தான எபிராவில் இன்னுமிருக்கிற போதே,

25. அந்த இராத்திரி ஆண்டவர் அவனை நோக்கி: உன் தகப்பனுடைய எருதையும் ஏழு வருஷத்து மற்றோர் எருதையும் பிடித்துக் கொண்டு உன் தகப்பனுக்குச் சொந்தமான பாவால் பீடத்தை உடைத்து அதைச் சுற்றி யிருக்கும் மரத்தையும் அடியோடு வெட்டி விடு.

26. முன் நீ பலியிட்ட இந்தக் கல்லின் உச்சியில் உன் ஆண்டவராகிய சர்வேசுர னுக்கு ஒரு பலிபீடத்தை ஏற்படுத்தி, இரண் டாவது பிடித்த எருதைக் கொண்டுவந்து நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளை அடுக்கி தகனப் பலியிடென்றார்.

27. ஆகையால் சேதெயோன் தன் ஊழியரில் பத்துப்பேரைத் தெரிந்து கொண்டு ஆண்டவர் அவனுக்குக் கற்பித்தவண்ணஞ் செய்தான்; ஆனால் தன் தகப்பன் வீட்டா ருக்கும் அந்தப் பட்டணத்து மனிதருக்கும் பயந்து பகலிலொன்றுஞ் செய்யாமல் இரவில் அதைச் செய்து முடித்தான்.

28. மறுநாட் காலையில் அப்பட்டணத்து மனிதர் எழுந்தபோது பாவால் பீடம் அழிந்து மரம் வெட்டப்பட்டதைப் கண்டார்கள். பின்பு ஏற்படுத்தப்பட்ட பீடத்தின் மேல் மற் றோர் எருது வைக்கப்பட்டிருப்பதையுங் கண்டார்கள்.

29. அப்பொழுது அவர்கள் ஒருவருக் கொருவர் சொல்லிக்கொண்டது: இப்படிச் செய்தவன் யார் என்றார்கள். கேட்டு விசாரித் தபோது, ஜோவாசின் மகன் சேதெயோன் இவையயல்லாஞ் செய்தானென்று வெளிப் பட்டது.

30. அப்போது அவர்கள் ஜோவாசை நோக்கி: உன் மகனை இவ்விடங் கொண்டு வா, அவன் சாக வேண்டியது; ஏனென்றால் பாவால் பீடத்தை அழித்தான், தோப்பு மரங்களை வெட்டினான் என்றார்கள்.

31. அதற்கவன்: நீங்களோ பாவால் பழி யைச் சுமந்து அவனுக்காகச் சண்டைபோட வேண்டியவர்கள்? எவன் குற்றவாளியோ அவன் நாளைப்பொழுது விடியாமுன் மரிக் கட்டும். பாவாலே தான் செய்தானானால் அவனே பீடத்தை அழித்தவன்மேல் பழிவாங் கட்டும் என்றான்.

32. ஜோவாஸ் பாவாலே தன் பீடத்தை அழித்தவவன் மேல் பழிவாங்கட்டும் என்ற தால் அந்நாள்முதல் சேதெயோன் ஜேரொ பாவால் என்றழைக்கப்பட்டான்.

33. ஆகையால் மதியானித்தரும் அமாலே சித்தருங் கீழ்த்திசையார் யாவரும் ஒன்றுகூடி னார்கள்; யோர்தான் நதியைக் கடந்து ஜெஸ் றாயேல் கணவாயில் பாளையமிறங்கி னார்கள்.

34. அப்பொழுது சேதெயோன் ஆண்டவ ரால் ஏவப்பட்டு எக்காளத்தை ஊதி அபியே சர் குடும்பந் தன்னைப் பின்பற்றிவர அழைத் தான்.

35. மனாசே வம்சத்தார் எல்லோருக்குந் தூதாட்களனுப்ப அவர்களும் அவனைப் பின்பற்றினார்கள். வேறு தூதர் ஆசேர், சாபு லோன், நேப்தளியிடஞ் செல்லவே அவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

36. அப்போது சேதெயோன் ஆண்டவரை நோக்கி: நீர் சொன்னபிரகாரம் என்னைக் கொண்டு இஸ்ராயேலரை மீட்பீரேயானால்,

37. நான் இந்த ஆட்டு மயிரைக் களத்தில் போடுகிறேன். பனி மயிரிலேமாத்திரம் பெய்து பூமியயல்லாம் ஈரமில்லாதிருக் குமானால் நீர் சொல்லியபடி இஸ்ராயேலை என் கையால் மீட்பீரென்றறிவேன் என் றான். மீ 

38. அதே பிராகாரம் நடந்தது. அவன் இரவிலெழுந்திருந்து மயிரைப் பிழிந்து ஒரு பாத்திரம் நிறையப்பனிநீரால் நிரப்பினான்.

39. மறுபடியுஞ் சேதெயோன் சர்வேசு ரனை நோக்கி: ஆட்டு மயிரைக்கொண்டு இன்னமொரு அடையாளமுங் கேட்கத் துணிவே னேயானயால் ஆண்டவரே! நீர் என் மேற் கோபங் கொள்ளாதேயும், மயிர்மாத்திரங் காய்ந்திருக்கவும், பூமியயங்கும் பனியினால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன் என்றான்.

40. அன்றிரவில் அவன் கேட்டுக்கொண்ட பிரகாரமே சர்வேசுரன் செய்தார், ஆட்டுமயிர் காய்ந்திருக்கத் தரையில் மாத்திரம் பனி விழுந்திருந்தது.