சக்காரியாஸ் ஆகமம் - அதிகாரம் 05

பறக்கும் புத்தகம்.

1. பின்பு யான் திரும்பி, கண்களை ஏறெடுத்து நோக்க: (ஆகாயத்தில்) பறந்து நிற்கும்புத்தகமொன்றைக் கண்டேன்.

2. வானவன்: நீ எது காணுகின்றனை என என்னை வினாவினான்; நான்: பறக்கும் புத்தகமொன்றைக் காண்கி றேன்; அதுக்கு இருபது முழ நீளமும், பத்து முழ அகலமும் (இருக்கலாம்) என்றேன்.

3. அவன் என்னை நோக்கி: அஃது சர்வ புவன பரப்பின்மீது உலவி வருஞ் சாபத் (தண்டனை)யாகும்; கள்வனெவ னும் அதில் வரையப்பட்டுள்ளபடி தீர்மானிக்கப்படுவன்; (பொய்ச்) சத்தியங் கூறுவானெல்லாம் அங்ஙனமே அதினால் தீர்ப்படைவன்.

4. அதனை வெளிக் கிளப்புவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; அஃது கள்வன் வீட்டிலும் நமது நாமத்தின்மீது அநுத்தமாய்ச் சத்தியங் கூறுவான் வீட்டிலும் புகுந்து, அதன் மரங்களையும், கற்களையுஞ் சிதைக்குந் தனையும் அவன் வீட்டு நடுத்தங்கி நிற்கு மாமே.

5. என்னிடத்தில் சம்பாஷித்திலங் கிய வானவன் வெளியில் போந்தனன்; பின்னும் அவன் என்னைப் பார்த்து: உன் கண்களை மேல்நோக்கி, புறப்பாடாகு மிஃது யாதெனப் பார் என்றனன்.

6. இஃதென்னை என யான் அவ னைக் கேட்க, அவன்: இஃது (இஸ்றா யேல் நாட்டினின்று) செல்லும் ஓர் கைப் பிடி சால் என்றான்; பின் அவன்: புவன மெங்ஙனம் அவர்களிடத்தில் பார்வை யாயிருப்பது இஃதேயாமென்று உரைத் தனன்.

* 6-ம் வசனம். சால்--3 மரக்கால் கொண்ட ஓர் அளவு.

7. இதோ பெரும் பார வங்கத்தைக் கொணர்ந்து வருதலையும், கைப்பிடி சால் பேரில் ஓர் பெண் உட்கார்ந்திருத் தலையுங் கண்டேன்.

8. அப்போது அவன்: அது (யூதரின்) பக்திகேடாகும் எனச் செப்பி, அப்பெண் ணைக் கைப்பிடிசாலின் உட்பாகத்தில் தள்ளி வங்க பாளத்தால் அதன் வாயைப் பொத்தினன்.

9. பின்னும் என் கண்களை ஏறெ டுத்துப் பார்க்க: இதோ காற்று கொண்ட இறக்கைகளையுடைய இரு பெண்க ளைக் கண்டேன்; அவர்களுக்குப் பருந்து செட்டைகளைப் போல சிறகுகளுமிருந் தன; கைப்பிடிசாலை அவர்கள் தூக்கினர்.

10. அப்போது யான் என்னிடமாய்ச் சம்பாஷித்திலங்கிய வானவனைப் பார் த்து: இவர்கள் இச்சாலை எங்கு கொண்டு போகின்றனர் எனக் கேட்டேன்.

11. அவன் என்னை நோக்கி: சென்னா காரில் அதற்கு ஓர் வீடு சமைக்கப்படும் பொருட்டும், அங்குதானே சாகை இருத் தப் பெற்று, நிலை ஸ்தாபகமாகும் பொருட்டுமேயென விடை தந்தனன்.

* 11-ம் வசனம். வீடு--பாபிலோன்.