அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 05

உடன்படிக்கைப் பெட்டகத்தைப் பிலிஸ்தியர் கைப்பற்றியது.

1. பிலிஸ்தியரோ தேவனுடைய பெட்டகத்தை எடுத்துக் கொண்டு சனுகு பாறையினின்று அசோத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

2. பிலிஸ்தியர் தேவனுடைய பெட்டகத்தை எடுத்துக் கொண்டு தாகோன் ஆலயத்தில் அதை நுழைவித்து தாகோன் அருகில் ஸ்தாபித்தார்கள்.

3. அசோத்தியர் மறுநாள் அதி காலமே எழுந்தபோது இதோ தாகோன், ஆண்டவருடைய பெட்டகத்தின் முன் பாக குப்புற விழுந்து கிடந்தது. தாகோ னைத் தூக்கி அதின் ஸ்தானத்தில் வைத் தார்கள்.

4. மறுபடியும் மறுநாள் காலையில் எழுந்தபோது தாகோன் ஆண்டவ ருடைய பெட்டகத்தின் முன் முகந் தரையில்பட விழுந்திருப்பதைக் கண் டார்கள். தாகோன் தலையும் அதின் கரங்களின் இரு குடங்கைகளும் வாசற் படியில் வெட்டுண்டிருந்தன. 

5. தாகோனின் முண்டம் மாத்திரந் தன் ஸ்தானத்திலிருந்தது. அந்தக் காரணத்தைப் பற்றி இந்நாள் பரியந்தந் தாகோன் குருக்களும், அதின் ஆலயத்தில் நுழைபவர்களெல்லோரும் அசோத் திலுள்ள அந்தத் தாகோன் ஆலயத்து வாசற்படியை மிதிக்கிறதில்லை.

6. கொஞ்சத்துக்குள்ளே ஆண்டவ ருடைய கைப்பாரம் அசோத்தியர்மேல் சுமந்தது. அவர் அவர்களைத் தண்டித் தார். அசோத்திலும் அதின் எல்லை களிலும் இருந்தோருக்கு இரகசியவிடத் தில் வியாதியை அனுப்பினார். அன்றியும் அத்தேச நடுவில் நாட்டிலும் வயலிலு மிருந்தவர்கள் கலங்கத்தக்கதாக எலிகள் வெகுவாய்ப் புறப்பட்டு லாசடை பண்ணின. ஊரில் சாவின் குழப்பம் மிகுதியாயிருந்தது.

7. அசோத் மனிதர்கள் இந்தத் துன்பத்தைப் பார்த்துச் சொன்னதாவது: இஸ்றாயேல் தேவனுடைய பெட்டகம் நம்மிடத்திலிருக்கலாகாது. ஏனெனில் அவருடைய கைப்பாரம் நமது பேரிலும் நமது தேவனான தாகோன் பேரிலும் மகா கொடுமையாயிருக்கின்றது.

8. பிலிஸ்தியர் ஆட்களை அனுப்பி, தங்கள் நாட்டதிபதிகளைக் கூட்டி இஸ் றாயேல் தேவனின் பெட்டகத்தை என்ன செய்யலாமென்றார்கள். இஸ்றாயேல் தேவனின் பெட்டகம் சுற்றுப் பிரகாரம் இங்கே வரட்டும் என்று ழேத் பட்டணத் தார் சொன்னார்கள். அந்தப்படியே இஸ்றாயேல் தேவனின் பெட்டகத்தைச் சுற்றுப் பிரகாரஞ் செய்தார்கள்.

9. அவர்கள் அதைச் சுற்றுப் பிரகாரஞ் செய்கையில் ஆண்டவருடையகை ஒவ்வொரு நாட்டிலும் வெகுபேரை மடியச் செய்தது. சிறுவன் துவக்கி பெரியவன் பரியந்தம் ஒவ்வெரு ஊர் மனிதனையுந் தண்டித்தார். அவர்கள் குடல்கள் வெளிப்பட்டுத் துர்க்கந்தம் வீசின; ழேத் பட்டணத்தார் ஆலோசனை பண்ணித் தங்களுக்குத் தோலாசனஞ் செய்து கொண்டார்கள்.

10. பிற்பாடு தேவனுடைய பெட் டகத்தை அக்கரோனுக்கு அனுப்பினார் கள். தேவனுடைய பெட்டகம் அக்கரோ னுக்கு வந்தபோது அக்கரோனித்தர்: எங்களையும் எங்கள் சனத்தையும் கொல்லத் தேவனுடைய பெட்டகத்தை எங்களிடம் கொண்டு வந்தார்களென்று சொல்லிக் கூவினார்கள்.

11. அப்பொழுது அவர்கள் பிலிஸ்திய ருடைய நாட்டதிபதிகளை வரவழைத் தார்கள். அவர்கள் வந்து கூட்டங்கூடி: இஸ்றாயேல் தேவனின் பெட்டகம் எங்களையும் எங்கள் சனத்தையுங் கொல் லாதபடி அதன் இருப்பிடத்துக்குப் போக விடுங்கள் என்றார்கள்.

12. உள்ளபடி ஒவ்வொரு ஊரிலுஞ் சாவின் பயங்கரமிருந்தது. தேவனுடைய கைப்பாரம் மிகக் கடூரமாயிருந்தது. சாகாத ஆண் பிள்ளைகள் சரீரத்துக் காணாவிடங்களில் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு நாட்டின் அழுகைச் சப்தம் வானமட்டும் எழும்பினது.