உபாகமம் - அதிகாரம் 05

ஒரேபிலே தேவன் பண்ணின உடன்படிக்கையும்--பத்துக் கற்பனைகள்-சனங்கள் வேண்டுதல் செய்தபடி மோயீசன் தேவனிடத்தில் நியாயப் பிரமாணம் பெற்றதும்.

1. ஆகையால் மோயீசன் இஸ்றாயேல் எல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: இஸ்றாயேலியரே! நான் இன்று உங்கள் காது கேட்கச் செல்லப் போகிற இரீதி சடங்குகளையும், நீதி முறைமைகளையும் கேளுங்கள். அவற்றைக் கற்றுக் கொண்டு கிரியையினால் நிறைவேற்றுங்கள்.

2.  நமது தேவனாகிய கர்த்தர் ஒரேபிலே நம்மோடு உடன்படிக்கையைப் பண்ணினார்.

3. அவர் நம்முடைய பிதாக்களோடு அதைப் பண்ணாமல் இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்முடன்தானே அந்த உடன்படிக்கையைப் பண்ணினார்.

4. மலையிலே அக்கினி நடுவினின்று நம்மோடு முகமுகமாய்ப் பேசிக்கொண்டருளினார்.

5. அவருடைய வாக்கியங்களை உங்களுக்கு அறிவிக்கும்படி அக்காலத்தில் நானே கர்த்தருக்கும் உங்களுக்கும் துபாசியும் மத்தியஸ்தனுமாயிருந்தேன். ஏனென்றால், நீங்கள் அக்கினிக்குப் பயந்தவர்களாய் மலையில் ஏறினீர்கள் இல்லை. அப்போது அவர் வசனித்தது என்னவெனில்:

6. உன்னை எஜிப்து தேசமாகிய அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படச் செய்த தேவனாகிய கர்த்தர் நாமே.

7. நமக்கு முன்பாக அந்நிய தேவர்கள் உனக்கில்லாதிருப்பதாக்.

8. மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாகியிருக்கிறவைகளுக்கு ஒப்பாக ஒரு விக்கிரகத்தையாகிலும் ஒரு சுரூபத்தையயன்கிலும் உனக்குச் செய்யாதே.

9. அவற்றைஆதரிக்கவும் கும்பிடவும் துணியாதே. ஏனென்றால் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நாம் எரிச்சலுள்ள தேவனாயிருந்து நம்மைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தை மூன்றாம் நான்காம் தலைமுறை பரியந்தம் அவர்களுடைய புத்திரர்களிடத்தில் திருப்பிச் சாட்டுகிறவரும்,

10. நம்மிடத்தில் அன்புகூர்ந்து என் கற்பனைகளைக் காத்திருப்போர்களுக்கோ அநேகமாயிரந் தலைமுறைகள் மட்டும் இரக்கம் செய்கிறவருமாயிருக்கிறோம்.

11. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வியர்த்தமாய்ச் சுவீகரியாதே. ஏனெனில் வீணான காரியத்திற்காக அவருடைய நாமத்தைச் சுவீகரித்திருப்பவன் தண்டனைப் படாதிரான்.

12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்தபடியே சாபத் நாளை அர்ச்சிக்கத் தக்கதாக நினைக்கக் கடவாய்.

13. ஆறு நாளும் உழைத்து உன் வேலை யயல்லாஞ் செய்வாய்.

14. ஏழாம் நாளோ சாபத், அதாவது: உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாளாமே ; அதிலே நீயானாலும், உன் குமாரன், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரன், உன் வேலைக்காரியானாலும், உன் மாடு உன் வேசரி உனக்கிருக்கிற வேறெந்த மிருகமானாலும், உன் வாசலினுள்ளிருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையுஞ் செய்ய வேண்டாம். நீ இளைப்பாறுவது போல் உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும்.

15. நீயும் எஜிப்த்திலே அடிமையாயிருந்தாயயன்றும், அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வல்ல கரத்தாலும் ஓங்கிய புயத்தாலும் புறப்படப் பண்ணினாரென்றும் நினைத்துக்கொள். அதுபற்றித்தானே சாபத் நாளை அநுசரிக்கும்படி உனக்குக் கற்பித்தார்.

16.  உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அளிக்கப் போகிற தேசத்தில் நீ வெகுகாலமாயுஞ் சுகமாயுஞ் சீவித்திருக்கத் தக்கதாகக் கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே உன் பிதாவையும் மாதாவையுஞ் சங்கித்திருக்கக் கடவாய்.

17. கொலை செய்யாதிருப்பாயாக.

18.  விபச்சாரம் பண்ணாதிருப்பாயாக.

19. களவு செய்யாதிருப்பாயாக.

20 .உன் பிறனுக்கு விரோதமாய்ப் பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக.

21. உன் புறத்தியானுடைய மனைவியையும் வீடு நிலங்களையும், ஊழியன் ஊழியக் காரிகளையும், மாடு வேசரிகளையும், அவனுக்குடைத்தானவைகளில் யாதொன்றையும் அபேட்சியாதிருப்பாயாக என்றருளினார்.

22. இவ்வார்த்தைகளை ஆண்டவர் மலையிலே அக்கினி மேகம் காரிருள்களின் நடுவிலிருந்து உங்கள் சபையார் எல்லோ0 ரோடும் உரத்த சத்தமாய்ச் சொன்னாரேயயாழிய வேறொன்றையும் கூட்டிச் சொல்லவில்லை. மேலும் அந்த வார்த்தைகளை அவர் இரண்டு கற்பலகைகளிலும் எழுதி எனக்குத் தந்தருளினார்.

23. நீங்களோ அந்தகார நடுவினின்று உண்டாயின அவருடைய குரற் சப்தத்தையுங் கேட்டு, மலை எரிவதையும் கண்ட பின்னர், கோத்திராதிபதிகளும் வயது சென்றவர்களுமாகிய நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வந்து என்னை நோக்கி:

24. இதோ நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் மகத்துவத்தையும் காண்பித்திருக்கிறார். அக்கினி நடுவினின்று உண்டான அவருடைய குரல் சப்தத்தைக் கேட்டுக் கொண்டோம். தேவன் மனிதனோடு பேசியிருந்தும் மனிதன் உயிர் பிழைத்திருக்கிறதை இந்நாளிலே அறியலானோம்.

25. ஆகையால் நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிப்பானேன்? நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாக்கைக் கேட்போமாகில் சாவோமே!

26. மாம்சமுடைத்தானதெல்லாம் என்ன? அக்கினி நடுவினின்று பேசுகின்ற சீவியமுள்ள கர்வேசுரனுடைய குரலை நாங்கள் கேட்டது போல (மற்ற யாராவது) கேட்டுப் பிழைக்கக் கூடுமானதோ?

27. நாங்கள் கேட்கப் போவதை விட நீரே சமீபித்துப்போய் நம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்வதெல்லாம் கேட்டு, நீரே எங்களுக்குச் சொல்ல வேண்டும், நாங்கள்கேட்டு அதின்படியே செய்வோம் என்றீர்கள்.

28. ஆண்டவர் இதைக் கேட்டு என்னை நோக்கி: இவர்கள் உன்னோடு பேசுகையில் அவர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டோம். அவர்கள்சொன்னதெல்லாம் ந்னறாய்ச் சொன்னார்கள்.

29. அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் நன்றாகும் பொருட்டு அவர்கள் எக்காலமும் நமக்குப் பயந்து நம்முடைய சமஸ்த கற்பனைகளையும் அநுசரிப்பதற்கேற்ற மனது அவர்களுக்கு இருந்தாலே காரியம்!

30. நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லு;

31. நீயோவென்றால் இங்கே நம்மோடு நில்லு; நாம் அவர்களுக்குச் சுதந்தரமாய்க் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் அநுசரிக்க வேண்டிய சகல கற்பனைகளையும், இரீதி சடங்குகளையும், நீதி நியாயங்களையும் நாம் உனக்குச் சொல்லுவோம். அவைகளை நீ அவர்களுக்குப் போதிப்பாய் என்று திருவுளம்பற்றினார்.

32. ஆகையால் தேவனாகிய கர்த்தரானவர் உங்களுக்குக் கற்பித்தவைகளை நீங்கள் கைக்கொண்டு அந்தப் படி செய்யுங்கள். வலது புறத்திலாவது இடது புறத்திலாவது சாயாதீர்கள்!

33. ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த மார்க்கத்திலேயே நடவுங்கள். அப்போது சீவிப்பீர்கள். உங்களுக்கும் நன்றாக இருக்கும். நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே உங்கள் நாள்களும் நீளித்திருக்கும்.