அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 04

எலிசேயின் புதுமைகள்.

1. அப்போது தீர்க்கத்தரிசிகளில் ஒருவனுடைய மனைவி எலிசேயென்பவ ரிடம் வந்து பிரலாபித்து: உமதடியா னாகிய என் கணவன் இறந்துபோனார்; அவர் (மெய்யான) தெய்வ பயமுடைய வர் என உமக்குத் தெரியம். இப்போதோ அவருடை கடன்காரன் என் இரண்டு மக்களையுந் தனக்கு அடிமைகளாக எடுத்துக் கொள்ள வந்திருக்கிறான் என்றனள்.

2. எலிசே அவளைப் பார்த்து: நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? உன் வீட்டில் உனக்கு என்ன இருக்கின்றது? சொல்லெனக் கேட்டான். அதற்கவள்: உமது அடியாளாகிய எனக்குத் தேகத் திலே பூசிக் கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் இருக்கிறதொழிய வீட்டில் வேறொன்றுங் கிடையாதென்றனள்.

3. எலிசே அவளை நோக்கி: நீ உன் சுற்றத்தார்கள் எல்லோரிடத்திலும் போய் அநேக வெறும் பாத்திரங்களைக் கடன் வாங்கி,

4. உன் விடுதிக்குள் நுழைந்து, உள்ளே நீயும் உன் பிள்ளைகளுமிருக்கக் கதவைப் பூட்டிக் கொண்டு, முன் சொல் லிய எல்லாப் பாத்திரங்களிலும் அந்த எண்ணெயை விடு; அவைகள் நிறைந்த பின்னர், அவைகளைப் பிரத்தியேகமாய் வைப்பாயாக என்றான்.

5. அவள் அவ்விதமே போய், தானும் தன் புத்திரரும் உள்ளிருக்கக் கதவைப் பூட்டிக் கொண்டு, அவளு டைய பிள்ளைகள் பாத்திரங்களை எடுத் துக் கொடுக்க, அவள் அவைகளில் எண்ணெயை ஊற்றிவந்தாள்.

6. எல்லாப் பாத்திரங்களும் நிறைந்த பின்பு அவள் தன் குமாரனைப் பார்த்து: இன்னும் ஒரு பாத்திரங் கொண்டுவா என்றான்; எண்ணெயும் நின்றுபோனது.

7. அவள் (புறப்பட்டுக்) கர்த்தரின் மனிதனுக்கு (நடந்ததைச்) சொன்னாள். அதற்கவன்: நீ போய் எண்ணெயை விற்று உன் கடன்காரனுக்குக் கொடுத்து, மீதத் தைக் கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் பிழைத்திருங்களென்றான்.

8. ஒருநாள் எலிசே என்பவன் சூனாம் பட்டணத்து வழியாய்ச் செல்ல, அவ்விடத்திய ஒரு பெருமாட்டி (தன் வீட்டில்) போஜனஞ் செய்ய அவனை அலட்டிக் கேட்டாள்; பிற்பாடு அவன் அவ்வழியே போகுந்தோறும் போசனஞ் செய்ய அவளிடத்திலேதான் வருவான்.

9. ஒருநாள் அவள் தன் புருஷனை நோக்கி: நம்மிடத்தில் அடிக்கடி வருகிற வர் ஆண்டவருடைய மனிதரும் அர்ச்சிய சிஷ்டவருமாயிருக்கின்றார் என, எனக்கு நன்றாய் விளங்குகிறது.

10. ஆதலால் அவர் நம்மிடத்தில் வரும்போதெல்லாம் அவர் நம் வீட்டில் இராத் தங்கத்தக்கதாக நாம் சிற்றறை ஒன்று அவருக்குச் சமைத்து, அதில் ஒரு கட்டில், ஒரு மேசை, ஒரு ஆசனப் பீடம், ஒரு தீபஸ்தலம்ப (முதலியன) முஸ்திப்புப் படுத்தி வைப்போமாக என்றாள்.

11. ஒருநாள் எலிசே (சூனாம்) பட்டணம் வந்தபோது அவ்வறையில் தங்கி அங்கு இளைப்பாறினான்

12. பின்பு அவன் தன் ஊழியன் ஜியேசி என்பவனை நோக்கி: அந்தச் சூனாமித்தாளைக் கூப்பிடு என்றான். ஜியேசி அவளை அழைக்க அவள் தீர்க்கத்தரிசியண்டை வந்து நின்றாள்.

13. அப்போது எலிசே தன் ஊழிய னைப் பார்த்து: நீ அவளோடு பேசிச் சொல்வதாவது: அம்மாள் நீர் எங்களுக்கு எல்லாவித உபசாரங்களையும் சிரத்தை யோடு செய்தீர்; ஆதலின் உமக்கு நான் என்ன செய்யவேண்டும்? அரசரிடத்தி லாகிலும், படைத் தலைவரிடத்திலென கிலும் (சிபாரிசு) பேசும்படியான யாதாமொரு விஷயம் உமக்குண்டா வென்று கேள் என்றான். அதற்கவள்: என்னுடைய ஜனத்தின் நடுவே அமரிக் கையாய் சீவித்திருக்கிறேன் என்றாள்.

14. பின்னும் (அவர்) ஜியேசியைப் பார்த்து: நான் அவளுக்கு இஷ்டப் பூர்த்தி செய்ய நான் எஃது செய்யவேண் டும்? எனக் கேளென்றான். அதற்கு ஜியேசி: கேட்கவும் வேண்டுமோ? அவளுக்குப் புத்திரபாக்கியமில்லை. அவ ளுடைய பத்தாவோ வயோதிபனா யிருக்கின்றார் என்றான்.

15. அப்போது (எலிசே) அந்தச் சீமாட் டியைத் தன் அண்டையில் வரும்படி ஜியேசிக்குக் கட்டளையிட்டான்; அவள் அழைக்கப்பட்டு வந்து கதவுக்கு நேராக நின்றாள்.

16. எலிசே அவளைப் பார்த்து: (வருகிற வருஷம்) இதே காலத்தில் இதே நேரத்தில் ஆண்டவர் உனக்குச் சீவனைக் கடாட்சிக்கும் பட்சத்தில், நீர் கற்பந் தரித்திருப்பீர் என்றான். அதற்கவள்: ஆண்டவனே! கர்த்தரின் மனிதரே உம்மை மன்றாடுகிறேன், உமதடியா ளுக்கு (அசம்பவமான காரியத்தைச் சொல்லிப்) பொய்சொல்ல வேண்டாம் என்றாள்.

17. (பின்பு) அந்த ஸ்திரீயானவள் எலிசே என்பவர் நிர்ணயித்த காலத் திலும் மணி நேரத்திலும் கற்பவதியாகிப் பின்பு ஒரு புத்திரனைப் பெற்றாள்.

18. பாலன் வளர்ந்தான்; ஒரு நாள் அறுப்பு அறுக்கிறவர்களோடிருந்த தன் தகப்பனண்டை போயிருக்கும்போது,

19. (திடீரென) தகப்பனைப் பார்த்து: எனக்குத் தலைநோகிறது, தலை இடிக் கிறதென்றனன்; தகப்பன் தன் ஒரு ஊழியனைப் பார்த்து: நீ (இக் குழந் தையை) தூக்கிக் கொண்டு போய், அதன் தாயிடத்தில் விட்டுவிடு என்றான்.

20. அவன் அப்படியே பிள்ளையைத் தூக்கிக் கொண்டுபோய்த் தாயிடத்தில் கொடுத்தான்; அவள் (குழந்தையை) மத்தியானம் வரையில் மடிமேல் வளர்த்தி வைத்திருக்கக் குழந்தை இறந்து போயிற்று.

21. பின்னர் அவள் கர்த்தருடைய மனிதனின் அறைக்குப் போய், அவரு டைய கட்டிலின்மேல் குழந்தையை வளர்த்தி வைத்து, கதவைப் பூட்டி வெளியே வந்து,

22. தன் கணவனைக் கூப்பிட்டு: கர்த் தரின் மனிதரிடம் நான் அவசரமாய்ப் போய்த் திரும்பி வர வேண்டும். ஆதலால் பெட்டைக் கழுதையை முஸ்திப்புப் படுத்தி என்னோடு ஒரு வேலைக்காரனை யும் அனுப்பும்படி மெத்தவுங் கேட்டுக் கொள்ளுகிறேன் என்றாள்.

23. அதற்கவன் நீ அவரண்டை போக வேண்டிய நிமித்தம் யாது? இன்று மாதம் முதல்தேதியுமல்ல, சனிவாரமுமல்லவே என்றான். அவள் மறுமொழியாக: நான் போகவேண்டியிருக்கிறது, எனச் சொன் னாள்.

24. அவள் கழுதைக்குச் சேணம் போடச் செய்து தன் ஊழியனை நோக்கி: வழியில் எனக்குத் தாமதமிராதபடிக்குக் கழுதையைச் சாக்கிரதையாய் ஓட்டி நடத்து; மேலும் நான் உனக்கு எதெதைக் கட்டளையிடுவேனோ அதைச் செய் வாய் என்றாக்கியாபித்தாள்.

25. இங்ஙனம் புறப்பட்டு கர்மேல் மலையின்கண் வீற்றிருந்த கர்த்தரின் மனிதனிடத்தில் வந்தாள். கர்த்தருடைய மனிதனானவன் அவள் தன்னிடத்தில் வருவதைக் கண்டு: “இதோ அந்தச் சூனா மித்தாள் வருகிறாள்” எனத் தன் ஊழிய னான ஜியேசிக்குச் சொல்லிப், பின்னும்:

26. நீ அவளுக்கு எதிர்கொண்டு போய் அவளைப் பார்த்து: நீயும் உன் கணவனும், உன் புத்திரனுஞ் சுகமாயிருக் கிறீர்களோவெனக் கேள் என்றான். அவள் மாறுத்தாரமாக: “சுகமாய்த் தானிருக்கிறோம்” என்றாள்.

27. பிறகு அவள் மலையின்மேல் கர்த்தரின் மனிதரணடை வந்து அவன் பாதத்தில் வீழந்தாள்; அவளை அப்புறப் படுத்த ஜியேசி சமீபித்து வந்தபோது, கர்த்தருடைய மனிதன் அவனை நோக்கி: அவளை விடு; அவள் ஆத்துமந் துக்க சாகரத்தில் அமிழ்ந்திருக்கிறது; ஆண்ட வர் எனக்கதை அறிவிக்காமல் மறைத்து விட்டாரே என்றான்.

28. அப்போது (சூனாமித்தாள்) அவனை நோக்கி: என் ஆண்டவரே, உம்மிடத்தில் நான் புத்திரபாக்கியங் கேட்டதுண்டா? மோசஞ் செய்ய வேண் டாமென்று நான் உமக்குச் சொல்லவில் லையா என்றாள்.

29. எலிசே ஜியேசியைப்பார்த்து: நீ உன் கச்சையை இடுப்பிலே கட்டி, என் (தடிக்) கோலைக் கையிலெடுத்துக் கொண்டு (இவள் வீட்டுக்குப்) போ. வழியில் யாரையாவது கண்டாலுஞ் சலாம்பண்ணாதே; உனக்கு யாராவது சலாஞ் செய்தாலும் மறுமொழி ஒன்றுஞ் சொல்லாதே; வீட்டுக்குள்ளே போய் என் (தடி) கோலைப் பிள்ளை யின் முகத்தின் மேல் வையென்றான்.

30. ஆனால் பிள்ளையின் தாயான வள் எலிசேயை நோக்கி: ஆண்டவ ருடைய ஜீவனாணை! உமதாத்துமா ஜீவ னாணை! நான் உம்மை விடமாட்டே னென்றாள். ஆதலால் எலிசே எழுந்து அவளைப் பின் சென்றான்.

31. ஜியேசி என்பவனோ இவர் களுக்கு முன் நடந்துபோய்த் தடிக் கோலைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்திருந்தான்; ஆனாலும் பிள்ளைக் குச் சொரணையில்லை, பேசவுமில்லை என்று கண்டு, திரும்பி எசமானனுக்கு எதிர் கொண்டுவந்து: “பிள்ளை உயிர்த் தெழவில்லை” என அறிவித்தான்.

32. எலிசே வீட்டுக்குள நுழைந்து, செத்த பிற்ளை தன் கட்டிலின்மேல் வளர்த்தப்பட்டிருப்பதைக் கண்டான்.

33 அப்பொழுது எலிசே தன் பிற காலே கதவைப் பூட்டி, ஆண்டவரை நோக்கிப் பிரார்த்தித்தான்.

34. பின்பு (கட்டிலின்) மேலேறி, தன் னைத்தானே பிள்ளையின்மீது வளர்த்தி வாயோடு வாயும், கண்ணோடு கண் ணும், கரங்களோடு கரங்களும் (பொருந்த) கிடந்தான். உடனே பிள் ளையின் தேகத்தில் சூடேறினது.

35. பின்பு இறங்கி அறையிலேயே அங்குமிங்கும் உலாவி, மறுபடியுங் (கட்டி லின்) மேலேறிப் பிள்ளைமீது படுத்துக் கொண்டான். அப்போது: குழந்தை ஏழு முறை கொட்டாவி விட்டுக் கண் திறந்தது.

36. அப்போது எலிசே ஜியேசியைக் கூப்பிட்டு: அந்தச் சூனாமித்தாளை அழைத்து வா என்றான். அவள் வந்து அறையில் நுழைந்தாள். எலிசே அவளை நோக்கி: “உன் குமாரனை எடுத்துக் கொண்டு போ” வென்றான். 

37. அந்தம்மாள் அவனிடமணுகி, அவன் பாதகமலத்தில் வீழ்ந்து, தரை புழுதிபடப் பணிந்து வணங்கினாள்; பின்பு பிள்ளையை எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.

38. எலிசே என்பவனோ கல்கலாவுக் குத் திரும்பிப் போனான்; தேசத்திலே பஞ்சமிருந்தது. தீர்க்கத்தரிசிகளின் சீஷர் கள் அவனோடு வாசஞ் செய்திருந்தார்கள். எலிசே தன் ஊழியர்களில் ஒருவனை நோக்கி: நீ ஒரு பெரிய பாத்திரத்தை எடுத் துத் தீர்க்கத்தரிசிகளுடைய சீடர்களுக் குச் சாப்பாடு முஸ்திப்புச் செய்யென் றான்.

39. அப்போது அவர்களில் ஒருவன் வயல் புற்களைப் பறிக்க வெளியே புறப் பட்டு, வயல்களில் காட்டு முந்திரிகை யைப் போல் ஒருவிதக் கொடியைக் கண்டு, அதினின்று தன் போர்வை நிறையப் பேய்க் கும்மட்டிக்காய்களைப் பறித்து வந்து, அவைகளைத் துண்டு துண்டாய் அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்தான்; ஏனெனில் அவை இன்னவையென அறிந்தா னில்லை.

40. பின்பு (ஊழியர்கள்) எலிசே என் பவரின் சீஷர்களுக்கு அதைச் சாப்பிடப் பரிமாற, அவர்கள் அதை உருசி பார்த்து: கர்த்தரின் மனிதனே! இந்தப் பானையில் மரணத்துக்கு ஏதுவான (நஞ்சு) ஏதோ இருக்கிறது எனக் கூக்குரலிட்டுத் தள்ளிப் போட்டார்கள்.

41. எலிசே அவர்களைப் பார்த்து: கொஞ்சம் மாவு கொண்டுவாருங்கள் என் றான். அவர்கள் கொணர்ந்து வரவே, அவன் அம்மாவைப் பானையில் போட்டு, ஒவ்வொருவருஞ் சாப்பிடும் பொருட்டு இப்போது எல்லோருக்கும் அதைப் பரிமாறுங்கள் என்று (ஊழியர் களுக்குச்) சொன்னான். அதற்குப் பின் பாத்திரத்தில் கசப்பென்பதேயில்லை.

42. பாவால் சலிசா என்னும் ஊரி லிருந்து ஒரு மனிதன் புது தானியத்தால் செய்யப்பட்ட சில அப்பங்களையும், இருபது வாற்கோதும்பை உரொட்டி களையும், புது கோதும்பையையும் ஒரு சாக்கிலே வைத்து கர்த்தரின் மனிதனுக் காக எடுத்துக்கொண்டு வந்தான். எலிசே தன் (ஏவலாளியைப்) பார்த்து: இவ்வப் பங்களைச் சனங்களுக்குச் சாப்பிடக் கொடு என்றான்.

43. அவன் மறுமொழியாக: நூறு பேருக்கு இவை எவ்வளவு என்றான். அவன் மறுபடியும் ஊழியனைப் பார்த்து: சனங்களுக்கு இவைகளைச் சாப்பிடக் கொடு. ஏனெனில், “அவர்கள் சாப்பிட் டும் மீதியுமிருக்கும்” என்று ஆண்டவர் திருவுளம்பற்றுகிறாரெனச் செப்பினான்.

44. ஊழியன் அவைகளை அவர் களுக்குப் பரிமாறினான்; அவர்கள் (பூர்த்தியாயச்) சாப்பிட்டும் ஆண்டவர் வாக்கியப் பிரகாரம் மீதியுமிருந்தது.