ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 04

இஸ்றாயேலர் கொடுமையாயிருக்கிற தைப் பற்றியும், விக்கிரக ஆராதனையைப் பற்றியும், மனந்திரும்பாததைப் பற்றியுந் தண்டிக்கப்படுவர்.

1. சமாரியா மலைமீது வாசஞ் செய்யானின்ற நிணத்த பசுக்களே, இவ்வார்த்தைகளைக் கேளுங்கள்; உங் கள் சுகபோகத்திற்காக) அகதிகளை உபத் திரியப்படுத்தி, எளியர்களைக் கசக்கி, உங்கள் எசமான்களைப் பார்த்து: கொண்டு வாருங்கள் குடிப்போம் எனச் சொல்வோரே (காதுகொடுங்கள்.)

* 1-ம் வசனம். இவ்வசனத்தில் சமாரியா பட்டணத்திய ஸ்திரீகளைத் தீர்க்கத் தரிசியானவர் கொழுத்த பசுக்கள் என்றழைக்கிறார்; இவர்கள் ஏழைமையுடையோரை உபத்திரிப்பதுபோல், தங்கள் ஆடவர்களும் அநியாயஞ் செய்யும்படியாய்த் தூண்டுகிறார்கள் என்பது தீர்க்கவசனருடைய முறைப்பாடு.

2. உங்களுக்குப் பயங்கரமுள்ள ஓர் நாள் உதிக்கப்போகிறதெனவும், அந் நாளில் உங்களை முத்தலை வேலால் தூக்கி, உங்கள் உடலில் உதவாததைக் கழித்து, மீதியைக் கொதிக்குங் கொப் பரையில் போடுவார்கள் எனவுந் தேவ னாகிய ஆண்டவர் தமது திரு (நாமத் தினால்) நிச்சயங் கூறுகிறார்.

* 2-ம் வசனம். அசீரியர் உங்கள் சிரங்களைக் கொய்து கோலில் மாட்டி ஊர் வலஞ் செய்வர், வெட்டுணட மாட்டைத் துண்டித்து கழிக்கற்பாலதைக் கழித்து மீதியைப் பெருங் கொப் பறையில் போட்டு சமைப்பதுபோல், இவர்கள் துன்பமெனும் பாத்திரத்தில் சமைக்கப் படுவார்கள் என்பது கருத்து.

3. (சமாரியா அரண்) திறப்புகள் வழியாக ஒருத்தி ஒருபுறமும், மற் றொருத்தி வேறுபுறமாகவும் நீங்கள் கொண்டுபோகப்பட்டு, அர்மோன் தேசஞ் சேர்க்கப்படுவீர்கள், (இது நிச்ச யமே;) ஏனெனில், ஆண்டவரே செப்ப லுற்றனர்.

* 3-ம் வசனம். பட்டணத்தின் அரண்கள் இடிபட்டு விடருந் திறப்புமாயிருக்குமாதலின், சத்துருக்கள் இவர்களைக் கைதுசெய்து மனதுக்கான வழியாய்க் கொண்டு போவார்கள் என்றவாறு.

4. (விக்கிரகத் தொழுகைக்காகப்) பேட்டேலுக்கு ஓடுங்கள்; தேவ துரோகத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்; கலஹாத்துக்குப் போங்கள்; அநீதத்தின்மேல் அநீதத்தைச் செய்யுங்கள்; காலையே உங்கள் பலி மிருகத்தைக் கொண்டு போங்கள்; மூன்று (திரு) நாட்களிலும் பத்தில் ஓர் பாக காணிக்கை எடுத்துப் போங்கள்.

5. நன்றி ஸ்தெளத்திய காணிக்கையாகப் புளித்த மா (அப்பத்தை) ஒப்புக் கொடுங்கள்; அதுக்கு மனோ அபீஷ்ட நிவேதனம் எனப் பெயரிட்டு, (எல்லோ ருக்கும் இதனைப்) பிரசித்தஞ் செய்யுங் கள்; இஸ்றாயேல் புத்திரரே! இஃது உங்கள் இஷ்டத்தைப் பொருத்திய வேலைதான் என்கிறார் ஆண்டவர்.

* 4-5-ம் வசனம். ஆண்டவர் பரிகாசஞ் செய்கின்றார்.

6. இது காரணமாக உங்கள் பட்ட ணங்கள் எங்கும் உங்களுக்குப் பற்கள் இளைத்துப் போகும்படி செய்தோம்; உங் கள் வயல்களிலெல்லாங் கோதும்பைக்கு வறுமை உண்டாகப் பண்ணினோம்; ஆயினும் நம்மிடம் நீங்கள் திரும்பி வரவில்லை என்கிறார் ஆண்டவர்.

7. அறுப்புக்கு மூன்று மாதம் இருக் கையிலே, உங்களுக்கு மழையை நிறுத் தினோம்; ஓர் ஊரில் பெய்யும்படிக்கும், மறு ஊரில் காயும்படிக்குஞ் செய்தோம்; அல்லது ஒரு பாகத்தில் மழை வருஷிக்க வும், மற்றொரு பாகம் மழையின்றி வறண்டு கிடக்கும்படியாகவுஞ் செய் தோம்.

8.  இரண்டு மூன்று பட்டணங்கள் ஓர் ஊரில் தாக சாந்தி செய்ய வந்துந் தீர்த்துக் கொண்டதில்லை; ஆயினும் நீங்கள் நம்மிடந் திரும்பினீர்களில்லை என்கிறார் ஆண்டவர்.

9. நெருப்புக் காற்றாலும், பயிர்ப் பூச் சாலும் உங்களை வாட்டினோம்; கம்பளிப் பூச்சி உங்களுடைய பேரெண் கொண்ட தோட்டங்களையும், திராட்சச் செடிகளையம், ஒலீவ் தோட்டங்களை யும், அத்திமரங்களையும் அழித்தது; ஆயினும் நீங்கள் நம்மிடந் திரும்ப வில்லை என்கிறார் ஆண்டவர்.

10. எஜிப்த்துத் தடத்தில் (முன் நடத் தியதுபோல்) உங்கள்மீது மரணத்துக்கு உரிய தண்டனையை அனுப்பினோம்; உங்கள் பால்யர்களை வாளால் சேதித்தோம்; உங்கள் அசுவங்கள் (சத்துருக்கள்) கைவசமாயின; உங்கள் படையில் மாண்டவர்களுடைய பிணங்களின் துர்க்கந்தம் உங்கள் நாசிக்கு ஏறும்படியுஞ் செய்தோம்; ஆயினும் நீங்கள் நம்மிடந் திரும் பினீர்களில்லை என்கிறார் ஆண்டவர்.

11. தேவனாகிய நாம் சொதோம் கோமோரை அழித்துபோல் உங்களை யும் அழித்தோம்; அச்சங்காரத்துக்கு உங் களில் தப்பித்தோர் தீப் பிரளயத்தில் சிறு கொள்ளியை இழுத்ததுபோல் இருந்த னர்; ஆயினும் நீங்கள் நம்மிடந் திரும்பின தில்லை என்கிறார் ஆண்டவர்.

* 6-11-ம் வசனம். சகலவித உபத்திரவங்களாலும் இஸ்றாயேல் மக்களை வாட்டியும் அது மனந்திரும்பவில்லை என்கிறார் ஆண்டவர்.

12. ஆதலின் இஸ்றாயேலே! (நாம் தெரிவித்த) ஏனைய துன்பங்களால் உன்னை வருத்துவோம்; இங்ஙனம் உங் களை நடத்தியபின் ஆகிலும் இஸ்றா யேலே! உன் தேவன் முன்பாக ஓட ஆயத்தமாயிருக்கக் கடவை.

* 12-13-ம் வசனம். மனந்திரும்பும்படியாகப் புத்தி கூறி, தீர்க்கத்தரிசியர் நல்லாசை புகட்டுகிறார்.

13. ஏனெனில், இதோ பர்வதங்களைச் சமைக்கிறவர், காற்றைச் சிருஷ்டிக்கிறவர், தம் வார்த்தையை மனிதனுக்கு வெளிப்படுத்துகிறவர், காலை மேகங்களை உண்டு பண்ணுகிறவர், பூமியின் உயர்ந்த தலங்களின் மேல் நடப்பவர், (உங்களுக்கு கிருபை செய்ய வருகின்றனர்;) சேனைகளின் தேவனாகிய ஆண்டவர் என்பது அவருடைய நாம கரணமாகும்.