அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 04

சலொமோனின் பிரதானிகள்.

1. இராசாவாகிய சலொமோன் சமஸ்த இஸ்றாயேலியரையும் அர சாண்டு வந்தான். 

2. அவனுடனிருந்த பிரதிநிதிகளா வன:  சாதோக்கின் குமாரனாகிய ஆசரியாஸ் ஆசாரியனாயிருந்தான்.

3. சிசாவின் குமாரராகிய எலியோ ரேயும், அகியாவும் சம்பிரதிகளாயிருந் தார்கள். அகிலுதின் குமாரன் யோசபாத் நீதித் தலைவனாயிருந்தான்; 

4. யோயியாதாவின் குமாரன் பனா யாஸ் படைத்தலைவனாயிருந்தான். சாதோக்கும் அபியாத்தாரும் ஆசாரியர் களாயிருந்தார்கள்.

5. ஆசாரியனான நாத்தானின் குமா ரன் சாபுத் இராசாவுக்கு இஷ்டனா யிருந்தான்.

6. ஐயசார் அரண்மனை பெரிய காரி யஸ்தனும், அப்தாவின் குமாரன் அதோ னிராம் பகுதி வாங்குவதற்கு மேல் விசாரணைக் காரனுமாயிருந்தான்.

7. இராசாவுக்கும் அவர் அரண் மனைக்கும் வேண்டிய உணவு பதார்த் தங்களைச் சேகரித்துக் கொடுக்க இஸ்றா யேல் தேசமெங்கும் பன்னிரண்டு காரி யஸ்தர் சலொமோனுக்கு இருந்தார்கள். அவர்கள் வருஷத்தில் ஒவ்வொரு மாதத் திற்கு வேண்டியவையெல்லாம் பராம ரித்து வருவார்கள்.

8. அவர்கள் நாமங்களாவன: பென் குர்: இவன் எப்ராயீம் மலைநாட்டில் இருந்தான்.

9. பெந்தேக்கர்: இவன் மிக்சேஸ், சலேபிம், பெத்சாமேஸ், எலோன், பெத் தானான், இந்நாடுகளில் இருந்தான்.

10. பெனேசேத்: இவன் அருபோத் தில் இருந்தான். சொக்கோவும் எப்பேர் நாடு முழுவதும் இவனுடைய விசாரணை யில் இருந்தது.

11. பேனாபினாதாத்: இவன் நெப் பாத்தோர் நாடு முழுமைக்கும் கண் காணியாயிருந்தான்; சலொமோனின் குமாரத்தியாகிய தாபேத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.

12. அகிலுதின் குமாரனாகிய பானா: இவன் தானாக், மகேத்தோ, சர்தானாக்கு அருகாமையிலுள்ள பெத்சான் நாடெல் லாவற்றிற்கும், பெத்சான் முதல் இஸ்றா யேல் நாட்டுக்குங் கீழ்ப்பாகமாக எக்மானுக்கெதிரில் இருக்கும் அபேல் மேயுலா வரையிலுள்ள நாடுகளுக்குங் காரியஸ்தனாயிருந்தான்.

13. பெங்காபேர்: இவன் ராமோத் கலாத்திலிருந்தான்; கலாத்திலுள்ள மனாசே குமாரனாகிய யாயீரின் கிராமங் களுக்கும், சுற்றுமதில்களும் வெண்கலக் கதவுகளுமுள்ள பாசான் தேசத்தினு டைய அறுபது பெரிய பட்டணங்களுக் குள்ள அரகோப் சீமைக்கும் அதிபதியா யிருந்தான்.

14. அத்தோவின் குமாரனாகிய அயினாதாப்: இவன் மனாயிரம் நாட்டில் காரியஸ்தனாயிருந்தான்.

15. அக்கிமாஸ்: இவன் நேப்தாலியி லிருந்தான்.  சலொமோனின் குமாரத்தி யாகியபசேமாத் இவனுக்கு மனைவியா யிருந்தாள்.

16. உசிலின் குமாரனாகிய பாஹானா: இவன் ஆசேர், பாலோத் நாடுகளுக்கும், 

17. பருவேயின் குமாரனாகிய யோச பாத்: இவன் இஸாக்காரின் நாடுகளுக் கும் காரியஸ்தராயிருந்தார்கள்.

18. ஏலாவின் குமாரனாகிய செமேயி பெஞ்சமீன் நாடுகளுக்குக் காரியஸ்தனா யிருந்தான்.

19. ஊரியின் குமாரன் காபேர்: இவன் எமோரியரின் இராசாவாகிய சேகோனுக்கும், பாசானின் இராசா வாகிய ஓகீக்குக்கும் இருந்த தேசமாகிய கலாத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் மணியக்காரனாயிருந்தான்.

20. (அது நிற்க) யூதா பிரசைகளும் இஸ்றாயேலியருங் கடற்கரை மணலைப் போல் கணக்கற்றவர்களாகிப் புசிப்பிற் கும் பானத்திற்கும் (குறைவின்றி) மகிழ் வடைந்திருந்தார்கள்.

21. சலொமோன் நதி துடங்கி பிலிஸ் தியர் நாடுவரையிலும் எஜிப்த்து எல்லை வரையிலுமுள்ள எல்லா இராச்சியங் களையும் ஆண்டு கொண்டு வந்தான்.  அவர்கள் சலொமோனுக்குக் காணிக்கை களைச் செலுத்திக் கொண்டு அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுக்கு அமைவாய் நடந்துவந்தார்கள்.

22. நாள்தோறும் சலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் சிலவு, முப்பது கோரென்னும் மரக்கால் மெல்லிய மாவும் அறுபது மரக்கால் சாதாரண மாவும், 

23. கலைமான்களும், வெளிமான் களும், கவரிமான்களும், பறவைகளும் அன்னியில், கொழுத்த பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடு களும், நூறு ஆடுகளுமாம்.

24. ஏனெனில் நதிக்கு அப்புறத்தில் இருக்கும் தாப்சா முதற்கொண்டு காஜா வரையிலும் உள்ள எல்லாத் தேசத்தை யும் ஆண்டுவந்தான்.  இந்த எல்லாத் தேசத்து இராசாக்களும் அவருக்கு அமைதியாயிருந்தார்கள்.  அவரைச் சுற்றி லும் எங்கும் சமாதானம் விளங்கிற்று.

25.  சலொமோனின் ஜீவியகாலமெல் லாம், தான் முதல் பெத்சாபே வரையிலும், யூதாவிலும் இஸ்றாயே லிலும் அவரவர் அச்சமின்றித் தங்கள் தங்கள் திராட்சத் தோட்டத்திலும் அத்தி மரச் சோலைகளிலும் சுகமாய் வாழ்ந்து வந்தார்கள்.

26. சலொமோனுக்குத் தன்னுடைய லாயங்களில் நாற்பதினாயிரம் இரதக் குதிரைகளும் பன்னீராயிரம் ஏறு குதிரை களும் இருந்தன.

27. மேற்சொல்லிய காரியஸ்தர்கள் புரவிகளுக்கு வேண்டிய தீனி பராமரித்து வருவதுமன்றி இராசாவுக்கும் அவரோ டிருப்பவர்களுக்கும் வேண்டிய போஜ னப் பதார்த்தங்களை அந்தந்தக் காலத் தில் ஒரு குறைவின்றிப் பராமரித்துவரு வார்கள்.

28. மேலும் இவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி இராசா எவ்விடத்திலிருந்தாரோ அவ்விடத்தில் குதிரைகளுக்கும் மற்ற மிருக ஜீவன்களுக் கும் வாற்கோதுமை வைக்கோல் முத லியன கொண்டுவருவார்கள்.

29. கடவுள் சலொமோனுக்கு மிகுதி யான ஞானத்தையும், மேலான புத்தியை யும், கடற்கரை மணலத்தனைய மனோவிருத்தியையுங் கொடுத்தார்.

30. கீழ்தேசத்தாரின் ஞானத்தையும் எஜிப்த்தியரின் சகல ஞானம் சிறந்ததா யிருந்தது.

31. அவன் எஸ்ராயித்தனாகிய எத்தா னிலும், ஏமான் ஷல்கோல் தொர்தா யன்னும் மொகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனிதரிலும் மிகவும் ஞானவானாயிருந்தான்.  சுற்றிலுமிருந்த சகல ஜாதிகளிலும் அதிக கீர்த்தி பெற் றிருந்தான்.

32. சலொமோன் மூவாயிரம் நீதி மொழிகளையும் ஆயிரத்தைந்நூறு பாடல்களையும் எழுதினான்.

33. லிபானிலிருக்கும் கேதுருமர முதல் சுவரின்பேரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டு வரைக்கும் உள்ள மா முதலிய தாவரங்களைக் குறித்தும், மிரு கங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், மச்சங்களாகிய இவைகளைக் குறித்தும் வாக்கியங்கள் உரைத்தான்.

34. சலொமோன் சொல்லி வரும் ஞானோபதேசத்தைக் கேட்க நானா ஜாதி யான பல ஜனங்களும் வருவார்கள்.  பூமியின் சகல ஜனங்களும் வருவார்கள்.  பூமியின் சகல இராசாக்களிடமிருந்து (சிலர்) அவருடைய ஞானத்தைக் கற்றுக் கொள்ளவும் வருவார்கள்.