அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 03

யோராமின் ஆட்சி.

1. யூதா அரசனான ஜோசப்பாத்துடைய இராஜரீகத்தின் பதினெட்டாம் வருஷத்திலே ஆக்காப் குமாரனாகிய ழோராம் என்பவன் சமாரியாவில் இஸ்றாயேல்மீது இராஜரீகம் பெற்று பன்னிரண்டு வருஷம் அரசாட்சி செய்தான்.

2. அவன் ஆண்டவருக்குமுன் அக்கிரமந்தான் செய்தானென்றாலும் அவன் தாய் தந்தையர் அதைச் செய்த அளவிற்குக் குறையாகச் செய்தான். உள்ளபடி இவன் தகப்பன் உண்டுபண்ணி ஸ்தாபித்திருந்த அளவிற்கல்ல; ஏனெனில் இவன் தந்தையானவன் சமைத்திருந்த பாகால் விக்கிரகங்களை எடுத்துப் போட் டான். 

3. அப்படியிருந்த போதிலும் இஸ் றாயேலைப் பாவஞ் செய்ய உடன் படுத் திய நாபாத் குமாரனான எரோபோவா மின் துர்நடக்கையிலேதான் நிலையாய் நின்றான்; அவன் அந்தப் பாவங்களை விலக்கினானில்லை.

4. நிற்க மோவாப் அரசனான மேசா என்பவன் திரளான ஆடுமாடுகளைப் படைத்திருந்தான்; அவன் இஸ்றாயேல் இராசாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டி களையும், இலட்சம் மயிர் எடுபடாத செம்மறிக் கடாக்களையுஞ் செலுத்தி வந் திருந்தான்.

5. ஆனால் ஆக்காப் மரணமடைந்த பின்னர் அவன் இஸ்றாயேல் அரசனோடு செய்திருந்த உடன்படிக்கையை மீறி னான்.

6. ஆதலால் அக்காலையில் ழோராம் அரசன் சமாரியாவினின்று புறப்பட்டு, இஸ்றாயேல் (வீரர்) எல்லாரையும் அணிபார்த்து,

7. யூதாவின் அரசனான யோசபாத் திடத்திற்கு ஆள் அனுப்பி: “மோவாபின் இராசா எனக்கு விரோமாய்க் கிளம்பி யிருக்கின்றான்; அவனுக்கு விரோத மாய்ச் சண்டைசெய்ய என்னோடு வாரும்” எனச் சொல்லி அனுப்பினான். யோசபாத் மாறுத்தரமாக: உம்மோடு வருகிறேன்; என்னிடத்திலுள்ளவை யாவும் உம்முடையதே, என்னுடைய பிரசை உம்முடைய ஜனமே, என் குதிரைகள் உம்முடைய அசுவங்களே என்று சொல்லி,

8. பின்னும் எவ்வழியாய்ப் போ வோம்? எனக் கேட்டான்; அதற்கு ழோராம் என்போன்: இதுமேயின் கான கத்து வழியாகவே போவோம் என மறுமொழி பகர்ந்தனன்.

9. ஆதலால் இஸ்றாயேல் அரசனும், யூதாவினரசனும், ஏதோனின் இராசாவும் (தத்தம் படையோடு) புறப்பட்டு அந்த (கானகத்தின்) வழியாக ஏழு நாள் சுற்றித் திரிந்தார்கள்; ஆனால் இராணுவத்திற்குப் பின்வரும் ஜீவசெந்துக்களுக்கும் ஜலங் கிடைக்காமற் போனது.

10. அப்போது இஸ்றாயேலின் அரசன்: ஐயையோ! அந்தோ! ஆண்டவர் மூவரசராகிய நம்மை இங்கு ஒருமிக்கச் சேர்த்தது மோவாபியர் கையில் ஒப்புவிக் கத்தான் போலும் என்றான்.

11. அதற்கு யோசபாத்: ஆண்டவரை மன்றாடும் பொருட்டு ஆண்டவரின் தீர்க்கத்தரிசி இங்கில்லையோ? என்று கேட்டான். இஸ்றாயேல் அரசனின் ஊழியர்களிலொருவன்: எலியாசுடைய கரங்களுக்கு ஜலம் ஊற்றிக்கொண்டு வந்த சாபாத் குமாரனான எலிசே என்ப வர் இங்கிருக்கின்றார் என்றான்.

12. யோசபாத்: ஆண்டவருடைய (திரு) வாக்கியம் அவரில் இருக்கிறதென் றான். அப்போது இஸ்றாயேல் அரச னும், யூதா அரசனான யோசபாத்தும், ஏதோம் இராசாவும் எலிசேயைப் போய்ப் பார்க்கப் புறப்பட்டார்கள்.

13. எலிசே இஸ்றாயேல் அரசனைப் பார்த்து: உமக்கும் எனக்கும் என்ன (பொருத்தம்) இருக்கின்றது? உமது தாய் தந்தைகளுடைய தீர்க்கத்தரிசிகளிடத் திற்குப் போங்களென்றான். அப்போது இஸ்றாயேலின் அரசன்: மோவாபியர் கையிலே இம்மூன்று அரசர்களையும் அளிக்கக் கர்த்தர் ஒன்றாகச் சேர்த்ததற் குக் காரணம் என்னையோ? என்று கேட் டான்.

14. எலிசே அவனைப் பார்த்து யாருடைய சமுகத்தில் இருக்கிறேனோ அந்தச் சேனைகளின் ஆண்டவருடைய ஜீவனாணை! நான் யூதாவின் அரசனான யோசபாத்துக்கு மரியாதை செய்ய வேண்டியவன். அவர் இங்கே இராவிட் டாலோ உம்மைக் கவனித்திருக்கவு மாட்டேன், ஏறெடுத்துப் பார்த்திருக்கவு மாட்டேன்.

15. இப்போது யாழ் வாசிப்பவன் ஒரு வனை அழைத்துவாருங்கள் என்றான். அம்மனிதன் வந்து வாசித்தமாத்திரத்தில் ஆண்டவருடைய கரமானது எலிசேயின் பேரில் வந்தது; அப்போது தீர்க்கத்தரிசி அவர்களை நோக்கி: 

16. ஆண்டவர் சொல்லுகிறது என்ன வெனில்: வறண்டுபோன இந்த வெள்ளம் நெடுக அநேக பள்ளங்களை வெட்டுங் கள்.

17. ஏனெனில், ஆண்டவர் சொல் லியது, காற்றையாகிலும் மழையை என் கிலும் காணமாட்டீர்கள் (என்றாலும்) இதிலே தண்ணீர் வெள்ளமாயோடி வரும். ஆனபடியால் மனிதர்களுக்கும், உங்கள் சீவசெந்துக்களுக்குங் குடிப் பதற்கு வேண்டிய தண்ணீர் அகப்படும்!

18. இஃதோ ஆண்டவருடைய சமுகத்துக்கு வெகு சொற்பமானதே; இதன்னியில் அவர் மோவாபியரையும் உங்களுக்குக் கையளிப்பார்.

19. அப்போது நீங்கள் அரணிக்கப் பட்ட எல்லாப் பட்டணங்களையும், சிறந்த எல்லாச் சிற்றூர்களையும் அதம் பண்ணவும், கனிதரும் விருட்சாதிகளை யெல்லாம் அடியில் வெட்டவும், தண் ணீர் ஊறும் ஸ்தலங்களை யெல்லாம் அடைத்துவிடவும், செழிப்பான நிலங் களை யெல்லாம் கற்களால் நிரப்பிக்க வுங் கடவீர்களென்றார் என்றான்.

20. மறுநாள் காலையில் பலியிட வழங்கிய நேரம் வந்தபோது, இதோ தண்ணீரானது ஏதோம் வழியாக ஏகமாய் வந்து நாடெங்கும் அதனால் நிரப்பப் பட்டது.

21. மோவாப் இராச்சியத்தார் எல் லோருந் தங்களோடு போர்புரிய அரசர் கள் ஏறிவருகிறார்கள் எனக் கேள்வி யுற்று, வாள் கச்சையை அரையில் கட்டி யிருந்தவர்களை எல்லாங் கூட்டித் தங்கள் (தேச) எல்லைகளைக் காக்க வந்து சேர்ந் தார்கள்.

22. ஒருநாள் மோவாபியர் அதி காலையில் எழுந்து பார்க்கையில் ஜலங் களின் பேரில் சூரிய கிரணங்கள் பிரகாசிக்கவே அவை இரத்தம்போல் சிவப்பாயிருக்கக் கண்டு: 

23. இது வாளால் (சிந்தப்பட்ட) இரத்தமாம்; அரசர்கள் தங்களுக்குள்ளே சமர் செய்து ஒருவரையொருவர் கொன்று போட்டார்கள் போலும். மோவாபி யரே! இப்போது கொள்ளையிடப் புறப் படுங்கள் என ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள்.

24. அவர்கள் அவ்விதமே புறப்பட்டு இஸ்றாயேல் பாளையத்தில் வந்து நுழை யப் பார்த்தார்கள். இஸ்றாயேலரோ (உடனே) கிளம்பி மோவாபியரைச் சாட, இவர்கள் முதுகு காட்டி ஓட்டமெடுத் தனர். ஆகையால் வெற்றிகொண்ட இஸ்றாயேலர் மோவாபியரைப் (பின் தொடர்ந்து) அவர்களைச் சங்கரித்தார் கள்.

25. பிற்பாடு பட்டணங்களை நாசஞ் செய்தார்கள்; கற்களை எறிந்து சிறந்த நிலங்களையெல்லாம் நிரப்பினார்கள்; சகல நீரூற்றுகளையும் அடைத்தார்கள்; மண் சுவர்கள் மாத்திரம் மீதியாய் நிற்கக் கனிதரும் விருட்சங்களனைத்தையும் வெட்டி எறிந்தார்கள்; அன்றியுங் கல் லெறிவோர் (இராஜதானி) பட்ட ணத்தை வளைத்து முற்றிக்கையிட அலங்கம் பெரும்பாலும் இடிக்கப் பட்டது.

26. சத்துருக்கள் மேலிட்டார்க ளென்று மோவாப் அரசன் கண்டு, வாள் கரத்தரான எழுநூறு வீரரைச் சேர்த்துக் கொண்டு, ஏதோம் அரசன் படைப்பக்க மாய்த் திடீரென எதிர்க்கப் பார்த்தான். ஆனால் அது பலிதப்படவில்லை.

27. அவன் அப்போது தனக்குப் பதி லாய் இராச்சியபாரம் நடத்த வேண்டிய தன் சிரேஷ்ட புத்திரனைப் பிடித்து அரண் சுவற்றின் மேல் அவனைப் பலி யிட்டான்; (இதைக் கண்டு) இஸ்றாயே லியருக்குப் பெரும் அரோசிகமுண்டாக (அவர்கள்) சீக்கிரத்தில் அப்பட்ட ணத்தை விட்டுத் தங்கள் சுயதேசத்துக் குத் திரும்பிப் போனார்கள்.