மலாக்கியா ஆகமம் - அதிகாரம் - 03

மெசியாவின் வருகை.

1. இதோ நாம் நமது தூதனை அனுப்புவோம்; அவன் நம் சமுகம் வழி தனை முஸ்திப்புச் செய்வான்; நீங்கள் தேடுகிறவரும் ஆசிக்கிறவருமாகிய உடன்படிக்கையின் தூதரான சர்வாதிக் கத்துவர் க்ஷணமே தம் ஆலயம் வந்து சேர் வர்; இதோ வருகின்றனர் எனச் சேனை களின் ஆண்டவர் சாற்றுகின்றனர்.

* 1-ம் வசனம். மத். 11:10; மாற். 1:2; லூக்.1:17; 7:27. தூதனை--மெசியாவின் முன்னோடியாகிய ஸ்நாபக அருளப்பரைக் குறிக்கிறது.

2. அவருடைய வருகையின் ஞான்றை ஊகித்து உணர வல்லவன் எவன்? அவருடைய (மகிமைச் சன்னதக்) காட்சிதனைத் தாங்கி நிற்பான் எவன்? அவர் உலாகங்களை) உருக்கும் நெருப் பெனவும் கொட்டுக்காரன் புல்லெனவும் இருப்பர்.

3. அவர் வெள்ளியை உருக்கிச் சுத்தி செய்ய உட்கார்ந்திருப்பர்; லேவி மக்க ளைச் சுத்திகரித்து, (அற வைத்த) கனகம் போலும் வெள்ளிபோலும் அவர்களைப் புடமிடுவர்; அவர்களோ ஆண்டவருக்கு நீதியின்படியே பலி நிவேதனஞ் செய்து வருவார்கள்.

4. யூதாவுடையவும் எருசலேமுடை யவும் பலியானது முந்தின யுகத்தியதைப் போலும் பண்டயக் காலத்தியதைப் போலும் ஆண்டவருக்குப் பிரீதியா யிருக்கும்.

5. அப்போது மந்திர வித்தைக்கார ருக்கும், விபசாரிகளுக்கும், பொய்ச் சத்தியக்காரருக்கும், கூலியாட்களுக்குக் கூலி கொடா வம்பர்கட்கும், நமக்கு அஞ்சாது கைம்பெண்களையும், அநாதப் பிள்ளைகளையும், அந்நியர்களையுந் துன்பப்படுத்துவோருக்கும் நாமே சாட்சியாய் நீதி செலுத்தத் தீவரித்து வருவோம் என்கிறார் சேனைகளின் அதிபர்.

6. நாமோ ஆண்டவர், மாறு பாடுடையோமன்று; நீங்களும் யாக் கோபு புத்திரர் (ஆதலின்) நீங்கள் இன்னம் அழிவுறாதிருக்கின்றீர்கள்.

7. உங்கள் பிதாக்கள் காலந்தொட்டு நமது வேதக் கற்பனைகளை விட்டகன்று (அவைகளை அநுஷ்டிக்காவிடினும், (இப்போது) நம்மிடந் திரும்பி வாருங் கள்; யாமும் உங்களை மாட்டு வருவோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்; யாங்கள் எங்ஙனந் திரும்பி வருவது (யாங்கள் அகன்றுபோனதில்லையே) என்பீர்களோ? 

* 7-ம் வசனம். சக். 1:3

8. கடவுளரை மனிதன் மனம் வருத்துவானேல், (அவன் அகன்று செல்லுகின்றனன்; அதுபோல்) நீங்களும் எம்மைப் பங்கப்படுத்தியதால் (எம்மை விட்டவர்களாகிறீர்கள்;) எதில் உம்மைப் பங்கப்படுத்தினோம் என்பீர்களோ? பத்தில் ஓர் பாகம், முந்தின பலன் (எனுங்) காணிக்கைகள் சமர்ப்பியாததினா லேயே.)

9. நீங்கள் எல்லோரும் நம்மைப் பங்கப்படுத்தியதால், நீங்கள் வறுமை வயத்தானீர்கள்.

10. பத்தில் பாகங்களெல்லாம் (நமது) களஞ்சியஞ் சேருங்கள்; அது நமது வீட்டில் (நம்மூழியருக்குப்) போஷணையாயிருக்கட்டும்; அதற்குப் பின் யாம் உங்களுக்கு வானக மழைத் தாரை களைத் திறந்து விடாமல் போகின்றோமா? (எல்லா நன்மைகளிலும்) சம்பூரணம் வரையாக நமது நல்லாசியை உங்கண்மீது சொரியாதிருக்கின்றோமா வென நம்மைப் பரீட்சியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

11. (பலன்களை) விழுங்குவன (யாவற்றையும்) உங்கள் நிமித்தம் யாம் கண்டித்துவிட, உங்கள் நிலத்துப் பலன்களை அவைகள் அழிக்கவறியா; உங்கள் தோட்டத்துக் கொடிமுந்திரிகைளும், மலடாகவிராது என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

12. பாக்கியச் சம்பன்ர் எனச் சகல சனங்களும் உங்களை அழைப்பார்கள்; உங்கள் தேசமும் (யாவரும்) விரும்பத் தக்க நாடாகவிருக்கும் என்கிறார் சேனை களின் ஆண்டவர்.

13. (என்றாலும் நாளுக்குநாள் உங் கள் தூஷண) வார்த்தைகள் நமக்கு விரோதமாய் மலிந்தே வருகின்றன என்கிறார் ஆண்டவர்.

* 13-ம் வசனம். யோபு 21:15.

14. உமக்கு விரோதமாய் யாங்கள் எதைச் செப்பினோம் என்கிறீர்களோ! (ஆ!) ஆண்டவரைச் சேவிப்பான் (எல்லாம்) வீணனே; அவர் கற்பனைகளை யாம் அனுஷ்டித்தும், சேனைகளின் ஆண்டவர் முன் மன உருக்கத்தோடு நடத்தும் ஆய பயன் என்னே?

15. ஆதலின் அகங்காரிகளே பாக்கியவான்கள் என்கிறோம்; ஏனெனில், அகிர்த்தியஞ் செய்து கடவுளை அலட்சியம் பண்ணியே, அவர்கள் மேம்பாடடைந்து இரட்சண்ணியம் பெற்றார்கள் (என்றீர்கள்.)

16. ஆனால் ஆண்டவருக்கு அஞ்சினோர் (முற்றும் மாறாக) நீதியுள்ள தேவாதீனத்தின் மாண்மியத்தைக் குறித்து ஒருவரோடொருவர் சம்பாஷிப்பதை ஆண்டவர் கவனங் கூர்ந்து கேட்டு, தெய்வ பயமுடையோருக்கும், அவர் நாமத்தை ஸ்மரணஞ் செய்வோருக்கும் அத்தாட்சி குறிப்பாகும்படி புத்தகமொன்று எழுதச் செய்தனர்.

17. இவர்கள் நாம் (நீதி) செலுத்த வேண்டிய ஞான்றில் நமது விசேஷித்த (பிரசை)யாயிருப்பார்கள்; பிதா தனக்கு ஊழியஞ் செய்யுந் தன் சொந்த தனைய னுக்குத் தாட்சணியங் காட்டுவதுபோல் அவர்கட்கும் யாம் இரக்கம் பாராட்டு வோமென்கிறார் சேனைகளின் ஆண் டவர்.

18. அப்போது நீங்கள் எண்ணம் வேறுபட்டு, நீதிமானுக்கும், அக்கிரமிக்கும், அவரைச் சேவிப்பானுக்கும், அவரைப் புசியாதவனுக்குமுள்ள (தார தம்மியம்) யாதெனப் பார்த்துக் கொள்வீர்கள்.