அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 03

சவுல், தாவீதின் குடும்பங்களில் சண்டை.

1. அப்படியிருக்கச் சவுலின் குடும்பத்தாருக்கும் தாவீதின் குடும்பத்தாருக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது.  தாவீது வர வர விருத்தியாகி மென்மேலும் பராக்கிரமசாலியானான்.  சவுலின் குடும்பமோ நாளுக்கு நாள் குறைவாகிப் போயிற்று.

2. எப்பிரோனிலே தாவீதுககுப் பல குமாரர் பிறந்தனர்;  ழெஸ்றாயேலூரா ளான அக்கினோவாம் வயிற்றிலே பிறநத அம்னோன் சிரேஷ்டப் புத்திரனானான்.

3. பிறகு கர்மேல் நாபாலை விவாகம் பண்ணியிருந்த அபிகாயிலிடத்திலே கெலேயாப் பிறந்தனன்; மூன்றவது எசூரி ராசாவான தொல்மாயின் குமாரத்தியாகிய மாக்காளின் உதரத்திலே அப்சலோம் உதித்தனன்.

4. நாகாவது அவனுக்கு ஆகீத்தாளுடைய கர்ப்பத்திலே அதோனியாசும், ஐந்தாவது அபித்தாளுடைய வயிற்றிலே சாப்பாத்தியாவும் பிறந்தனர்.

5. அன்றியும் ஆறாவது தாவீதின் பட்டத் தேவியாகிய ஏகிலாலுதரத்திலே ழெத்திராமும் பிறந்தனன்.  இவர்களே தாவீதுக்கு எப்பிரோனில் பிறந்த புத்திரர் களாம்.

6. அது கிடக்க, சவுலின் வீட்டா ருக்குந் தாவீதுடைய வீட்டாருக்கும் யுத்தம் நடந்திருக்கிறபோதோ,  நேரின் குமாரனாகிய அப்நேர் சவுலின் குடும் பத்தை ஆண்டிருந்தான்.

7. ஆயாளின் குமாரத்தியாகிய றெஸ்பாளென்னும் பெயருடைய ஒருத்தி முன்னே சவுலுக்கு மறுமனை யாட்டியாயிருந்தாள். ஒருநாள் இஸ்போ சேத் அப்நேரை நோக்கி:

8. நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியிடத்தில் பிரவேசித்த தென்ன? என்க, அவன் இஸ்போசேத் துடைய வார்த்தையின் நிமித்தம் மிகவுங் கோபங் கொண்டு: நான் உமது தகப்ப னான சவுலின் குடும்பத்தின் மேலும், அவருடைய உடன்பிறந்தார் உறவின் முறையார்மேலுந் தயவுபண்ணி உம் மைத் தாவீதுடைய கையிலே ஒப்புக் கொடாமலிருந்தேனே ; பிறகு இன்று என் எதிரியாகிய யூதாவுக்கு முன்பாக என்னை நாய்த்தலையனாக்கிவிட்டு அந்தப் பெண்பிள்ளை விஷயத்திலே விசாரித்துக் குற்றம் பிடிக்க வந்தீர்!

9. கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்ட வாறு நான் அவனுக்குச் செய்யாமல் போவேனாகில் தேவன் அப்நேருக்கு இப்படியும் இதற்கு மேலுந் தண்டனை செய்யக்கடவாராக!

10. சவுலின் குடும்பத்தை விட்டு இராசாங்கம் பெயர்க்கப்பட்டு, தான் துவக்கிப் பெற்சபே மட்டுமுள்ள இஸ்றா யேலின் மேலும் யூதாவின் மேலுந் தாவீதின் சிம்மாசனம் எழும்பும்படி செய் வேனென்று சபதங் கூறினான்.

11. இஸ்போசேத் அப்நேருக்குப் பயப்பட்டதினால் ஒரு பிரதி மொழியை யுஞ் சொல்லக் கூடாதவனாயிருந்தான்.

12. பிற்பாடு அப்நேர் தன் நாமத்தி னாலே தாவீதிடத்திற்குத் தூதாட்களை அனுப்பி நாடானது யாருடையது?  நீர் என்னோடு உறவு பண்ணினால் என் கை உம்முடனிருந்து இஸ்றாயேலை எல்லாம் உம்மிடத்தில் திருப்புவேன் என்று சொல்லச் சொன்னான்.

13. அதற்குத் தாவீது: மகா நல்லது; நானுன்னோடு உறவாடுவேன், ஆனா லும் ஒரு காரியம் உன்னிடத்தில் கேட் டுக் கொள்ளுகிறேன்.  அது என்ன வெனில், நீர் என் முகத்தைப் பார்க்க வரு வதற்கு முந்தி சவுலின் குமாரத்தியாகிய மிக்கோலை நீ அழைத்துவர வேண்டும்; அதைச் செய்த பின்பே நீ என்னைச்  சந்திக்க வருவாய் என்று பதில் அனுப்பி னான்.

14. அப்பால் தாவீது சவுலின் குமார னான இஸ்போசேத்திடந் தூதரை அனுப்பி: நான் பிலிஸ்தியருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடு த்து விவாகம் பண்ணின என் மனைவி யாகிய மிக்கோலை நீர் எனக்கு அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன் னான்.

15. அப்பொழுது இஸ்போசேத் ஆளனுப்பி அவளை லாயீஸ் புத்திரனான பால்த்தியேல் என்னும் அவளுடைய புருஷனிடத்தில் நின்று எடுக்கச் செய் தான்.

16. அவளுடைய கணவன் அழுது கொண்டு பகுரீம் மட்டும் அவள் பிற காலே வந்தான்; அப்போது அப்நேர் அவனை நோக்கி: நீ திரும்பிப் போ என்றான்.  அவன் அப்படியே திரும்பிப் போய்விட்டான்.

17. மீண்டும் அப்நேர் இஸ்றாயேல் மூப்பர்களைப் பார்த்து: தாவீதை உங்கள் மேல் இராசாவாக்க வேண்டுமென்று நீங் கள் நேற்றும் மூன்றாம் நாளும் ஆசித்துத் தேடி வந்தீர்களே.

18. இப்பொழுது அதைச் செய்யுங் கள்; ஏனெனில் கர்த்தர் தாவீதை நோக்கி: என் தாசனான தாவீதின் கையினால் இஸ்றாயேலைப் பிலிஸ்தியருடைய கைக் கும் எல்லாச் சத்துருக்களுடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேனென்று சொல் லியிருக்கிறார் என்றான்.

19. பிறகு அப்நேர் பெஞ்சமீனரோடு கூட அவ்விதமாகவே பேசினான்.  பின் னரும் எப்பிரோனுக்குச் சென்று இஸ்றா யேலியரும் பெஞ்சமீன் சமஸ்த குடும்பத் தாருஞ் சம்மதித்துத் தீர்மானித்து சங்கதி யெல்லாந் தாவீதிடத்திலே சொல்லப் போனான்.

20. அப்நேரும் அவனோடுகூட இரு பது பேரும் எப்பிரோனிலிருக்குந் தாவீதி னிடத்தில் வந்தபோது தாவீது அப்நேருக்கும் அவனுடன் வந்திருந்த புருஷர்களுக்கும் விருந்து செய்தான்.

21. பின்பு அப்நேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய் என் ஆண்டவராகிய இராசாவினிடத்தில் இஸ்றாயேலை எல்லாஞ் சேர்த்துக் கொண்டு வருகி றேன்; அப்போது நான் உம்மோடு உடன்படிக்கை பண்ண உம்முடைய ஆத்துமா விரும்பினபடியே நீர் எல்லோ ரின்மேல் அரசாளுவீர் என்றான்.  அப்படியே தாவீது அப்நேரை அனுப்பி விட அவன் சமாதானத்தோடு புறப் பட்டுப் போனான்.

22. அப்பொழுது திருடரை வெட்டிச் சங்கரித்த தாவீதின் சேவகரும் யோவாபும் வந்து தாங்கள் கொள்ளை யிட்ட வெகு வெகு பொருட்களைக் கொண்டு வந்தார்கள்.  அந்நேரத்தில் அப்நேர் எப்பிரோனில் தாவீதினிடத் திலில்லை.  ஏற்கனவே தாவீது அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்ததால் அவன் சமாதானத்தோடு போய்விட் டான்.

23. யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் அதற்குப் பிற்பாடு தானே வந்தார்கள். அப்போது நேரின் குமாரனான அப்நேர் அரசனிடம் வந்தான் என்றும், அவர் அவனைச் சமா தானமாய் அனுப்பிவிட்டார் என்றும் யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.

24. அதைக் கேட்டு யோவாப் இராசா வண்டையில் பிரவேசித்து: என்ன செய் தீர்?  இதோ அப்நேர் உம்மிடத்தில் வந் தானே, நீர் விடை கொடுத்து அவனைப் போக விட்டது என்ன?

25. நேரின் மகன் அப்நேர் உம்மை வஞ்சிக்கவும், உம்முடைய போக்கு வரத்தை அறியவும், நீர் செய்கிறதை எல் லாம் ஆராயவுந் தானே உம்மிடம் வந்தா னென்று அறியீரோ? (என்றான்.)

26. ஆகையால் யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்ட மாத்திரத்தில் அவன் தாவீதுக்குத் தெரியாமல் அப்நேருக்குத் தூதரையனுப்பி அவனைச் சீரா என்னுந் துரவிலிருந்து மறுபடி அழைத்துக் கொண்டு வந்தான்.

27. அப்நேர் எப்பிரோனுக்குத் திரும்பி வந்த பின்பு யோவாப் இரகசிய மாய் அவனோடு பேசப் போகிறவன் போல் அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒருபக்கமாய் அழைத்துப் போய்த் தன் தம்பி அசாயேலுடைய இரத்தப்பழியை வாங்க அங்கே அவனை அரையாப்பிலே குத்திக் கொன்று போட்டான்.

28. தாவீது ஏற்கெனவே நடந்தேறின காரியத்தைக் கேள்விப்பட்டபோது நேரின் குமாரனான அப்நேரின் இரத்தத் திற்காக என்மேலும் என் இராஜாங்கத் தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் குற்றமேயில்லை.

29. அது யோவாபுடைய தலையின் மேலும் அவன் தகப்பனுடைய குடும்பத் தின்மேலும் சுமந்திருப்பதாக; அன்றியும் யோவாபின் குடும்பத்திலே பிரமியக்கார னும், குஷ்டரோகியும், பெண்ணனும், பட்டயத்தால் அடிபட்டு விழுகிறவனும், சாப்பாட்டுக்கு இல்லாதவனும் ஒருக் காலும் ஒழியாதிருக்கக் கடவது என் றான்.

30. அப்பிரகாரமே காபாவோனில் நடந்த யுத்தத்திலே அப்நேர் தங்கள் தம்பியாகிய அசாயேலைக் கொன்றதி னிமித்தம் யோவாபும் அவன் சகோதர னாகிய அபிசாயியும் அவனைச் சங்காரம் பண்ணினார்கள்.

31. அப்போது தாவீது யோவாபை யும் அவனோடிருந்த சமஸ்த சனங்களை யும் நோக்கி: நீங்கள் உங்கள் வஸ்திரங் களைக் கிழித்துக் கொண்டு இரட்டு உடுத்தி அப்நேருடைய சடலத்தின் முன் பாகத் துக்கங் கொண்டாடுங்களென்று சொன்னான்; அவனோ சவப் பெட்டிக் குப் பிறகாலே நடந்தான்.

32. அவர்கள் அப்நேரை எப்பிரோ னில் அடக்கம் பண்ணின பிறகு தாவீது ராசா அப்நேரின் கல்லறையண்டையில் சப்தமிட்டு அழுதான்.  சகல சனங்களும் புலம்பி அழுதார்கள்.

33. அரசன் அப்நேரினிமித்தம் ஒப் பாரியிட்டழுது: கேழைத்தனமுள்ளோர் சாகிறது போல் அப்நேர் பரிச்சேதம் மரித் தவனல்ல.

34. உன் கைகளில் விலங்கு போடப் பட்டதுமில்லை; உன் பாதங்களில் தளை பூட்டப்பட்டதுமில்லை;  அக்கிரமிகளின் புத்திரர் கையில் அகப்பட்டு மரிக்கிறவ ரைப் போல் நீயும் மரித்தாயே என்றான்.  அப்பொழுது சனங்களெல்லாரும் இராசா சொல்லிய வார்த்தைகளை இரட்டித்துச் சொல்லிக் கண்ணீர்விட்டார்கள்.

35. அப்பால், பொழுது இன்னம் இருக்கையில் சனங்களெல்லாருந் தாவீ துடன் அப்பம் புசிக்கவந்தபோது இராசா: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதை யென்கிலும் ருசிபார்ப்பேனே யாகில், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கதிகமாகவுஞ் செய்து கண்டிக்கக் கடவரென்று ஆணையிட்டுச் சொன் னான்.

36. சனங்களெல்லாரும் இதைக் கேட்டார்கள்.  இராசா இப்படி பிரசித் தமாய்ச் செய்ததெல்லாம் அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.

37. நேரின் குமாரனாகிய அப்நேர் கொலையுண்டிருந்தது இராசாவினால் உண்டானதல்லவென்ற அன்று சமஸ்த சனங்களும் இஸ்றாயேலியர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.

38. அன்றியும் அரசன் தன் ஊழியர் களை நோக்கி: இன்றயத்தினம் இஸ்றா யேலிலே மகா பெரிய தலைவனான ஒரு வன் விழுந்தானென்று அறியீர்களா?

39. நான் இராசாவாக அபிஷேகிக்கப்  பட்டும் இன்னும் பலவீனனாயிருக்கின் றேன்; சார்வியாளின் மக்களாகிய இப்புருஷரோ என்னை விடப் பலசாலி களாயிருக்கிறார்கள்.  கர்த்தர் தின்மை செய்தவனுக்கு அவனுடைய துஷ்டத் தனத்திற்குத் தக்கதாகச் சரிக்கட்டுவாராக என்றான்.