அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 03

சலொமோனின் ஞானம்.

1. இப்படியாகச் சலொமோனின் இராச்சியம் அவனுடைய கையில் ஸ்திரப் படுத்தப்பட்டபின் சலொமோன் எஜிப்த்து  இராசாவாகிய பராவோனோடு சம்பந்தங்; கலந்து பராவோனின் குமாரத் தியை விவாகஞ் செய்து, தன்னுடைய அரண்மனையையும், தேவனுடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்று மதி லையுங் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டு வந்து வைத்தான்.

2. ஆனால் அந்நாள்வரையில் கர்த்த ருடைய பேரால் ஆலயங் கட்டப் படாமல் இருந்ததினால் ஜனங்கள் மேடு களின்பேரில் பலியிட்டுவந்தார்கள்.

3. சலொமோன் கடவுளை நேசித் துத் தன் தகப்பனாகிய தாவீதின் கட்ட ளைகள் பிரகாரம் நடந்துவந்தான்.  ஆனாலும் அவன் மேடுகளின்பேரில் பலியிட்டுத் தூபம் காட்டி வந்தான்.

4. காபாவோம் அதி பிரபலியமான மேடையாயிருந்ததால் இராசா ஒருநாள் அங்கு போய் அந்தக் காபாவோன் பலி பீடத்தின் மேல் சலொமோன் ஆயிரம் சர்வாங்கத் தகனப்பலிகளைச் செலுத்தி னான்.

5. அப்போது கடவுள் சலொமோ னுக்கு இராத்திரி சொற்பனத்தில் தரிசன மாகி: நீ விரும்புகிறதை என்னிடங் கேள் என்றார்.

6. அதற்குச் சலொமோன்: என் தகப் பனாகிய தாவீதென்னும் உமதடியான் உம்மைப்பற்றி உண்மையும், நீதியும், மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபை செய்து அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து இந்நாளி லிருக்கிறபடியே அவருடைய சிம்மா சனத்தில் வீற்றிருக்கத்தக்க ஒரு குமா ரனை அவருக்குத் தந்தீர்.

7. இப்போது என் தேவனாகிய கடவுளே, தேவரீர் உமது அடியானை என் தகப்பனாகிய தாவீதுக்குப் பதிலாய் இராஜரீகம் பண்ணச் செய்தீர்.  நானோ வென்றால் என் வரவும் என் போக்கும் அறியாத சிறுவனாயிருக்கிறேன்.

8. நீர் தெரிந்து கொண்டதும், ஏராளத்தினால் எண்ணிக்கைக்குள் அடங் காததும், கணக்குகளுள் உட்படாதது மான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேனிருக்கிறேன்.

9. ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைத் தின்மை பகுத்தறியவும் அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருள வேண்டும்; ஏனெனில் ஏராளமாயிருக் கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான்.

10. சலொமோன் சொன்ன வாக்கிய மும் அவ்வாக்கியத்தால் அவன் பண் ணின விண்ணப்பமும் ஆண்டவருடைய பார்வைக்கு நல்லதாய்த் தோன்றினது.

11. ஆகையால் கர்த்தர் அவனை நோக்கி: உனக்கு நீடித்த ஆயுளையும், ஐசுவரியத்தையும், உன் சத்துராதிக ளுடைய சங்காரத்தையுங் கேளாமல், நீ இந்தக் காரியத்தையே கேட்டு நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக் குத் தரவேண்டுமென்று மன்றாடினதால்;

12. உன் வார்த்தையின்படியே உனக் குச் செய்தோம்.  ஞானமும் உணர்வு முள்ள இருதயத்தை உனக்குத் தந்தோம். இதிலே உனக்குச் சரியானவன் உனக்கு முன்னிருந்ததும் இல்லை; உனக்குப் பின் வரப்போகிறதுமில்லை.

13. இதுவுமனறி நீ நம்மைக் கேளாத ஐசுவரிய்தையும், மகிமையையும் நாம் உனக்குத் தந்தோம்.  உன் நாட்களுக்கு முன்னிருந்த இராசாக்களில் ஒருவனாகி லும் உனக்கு இணையாயிருக்கவில்லை.

14. அன்றியும் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல் நீயும் நமது கற் பனைகளையும் கட்டளைகளையும் அனுசரித்து நம்முடைய வழிகளிலே நடப்பாயாகில் உன்னாட்களை நீடித் திருக்கப்பண்ணுவோம் என்றருளினார்.

15. சலொமோன் நித்திரை தெளிந்த போது  தான் கண்ட சொற்பனம் இன்ன மென்று அறிந்துகொண்டு எருசலேமுக்கு வந்து ஆண்டவருடைய உடன்படிக் கைப் பெட்டிக்கு முன்பாக நின்று சர்வாங்கத் தகனப் பலிகளை இட்டுச் சமாதானப் பலிகளையுஞ் செலுத்தித் தன் ஊழியக்காரரெல்லாருக்கும் விருந்து செய்தான்.

16. அக்காலத்தில் வேசிகளான இரண்டு ஸ்திரீகள் இராசாவிடத்தில் வந்து அவருக்கு முன்பாக நின்றார்கள்.

17. அவர்களில் ஒருத்தி: என்னாண்ட வனே (என் விண்ணப்பத்தைக்)கேளும்; நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருந்தோம்; நான் இவனண்டை யிலிருக்கையில் நான் ஒரு பிள்ளையைப் பெற்றேன்.

18. நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே இந்த ஸ்திரீயும் ஒரு பிள்ளை யைப் பெற்றாள்; எங்கள் இருவ ரைத் தவிர வீட்டுக்குள் வேறு ஒருவதுமில்லை.

19. இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டு அமுக்கினதினாலே அது செத்துப் போயிற்று.

20. அப்பொழுது உமதடியாளாகிய நான் நித்திரை பண்ணுகையில் இவள் நடுச் சாமத்தில் எழுந்து என் பக்கத்திலே கிடந்த என் பிள்ளையை எடுத்துத் தன் மார்பிலே கிடத்திக்கொண்டு செத்த தன் பிள்ளையை எடுத்து என்னண்டையில் கிடத்திவிட்டாள்.

21. என் பிள்ளைக்குப் பால் கொடுக்க காலமே நான் எழுந்திருந்த போது அது செத்துக் கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப் பார்க்கும்போது அது நான் பெற்ற பிள் ளையல்ல வென்று கண்டேனென்றாள்.

22. அதற்கு மற்றொரு ஸ்திரீ மறு மொழியாக:  அப்படியல்ல உயிரோடிருக் கிறது என் பிள்ளை என்றான்.  இவளோ: இல்லை, ஏன் பொய் சொல்லுகிறாய்? செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக் கிறது என் பிள்ளைதான் என்றாள்.  இப்படியா இராசாவுக்கு முன்பாக வாதாடினார்கள்.

23. அப்பொழுது இராசா: உயிரோ டிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளையென்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை யென்று அவள் சொல்லுகிறாளென்று சொல்லி,

24. இராசா ஒரு பட்டயத்தைக் கொண்டு வாருங்கள் என்றான்.  அப் படியே ஒரு பட்டயத்தை இராசாவிடத் தில் கொண்டு வந்தபோது,

25. அவன்: உயிரோடிருக்கிற பிள் ளையை இரண்டாக வெட்டிப் பாதியை இவளுக்கும், பாதியை அவளுக்குங்  கொடுங்கள் என்றான்.

26. அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காகக் குடல் துடித்தவளாய் இராசாவை நோக்கி: வேண்டாம் ஆண்டவனே, உயி ரோடிருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்து விடும் என்றாள். மற்றவள் அதற்கு விருத் துவமாய்: அது எனக்கும் வேண்டாம் அவளுக்கும் வேண்டாம் இரண்டாய்ப் பிளந்துதான் பங்கு போடுங்கள் என்றாள்.

27. அப்பொழுது இராசா தீர்மான மாக: உயிரோடிருக்கும் பிள்ளையைக் கொல்லாமல் அவளுக்குக் கொடுத்து விடுங்கள், அவள்தான் அதின் தாய் என்றான்.

28. இராசா தீர்த்த இந்தத் தீர்மா னத்தை இஸ்றாயேலியர் எல்லாருங் கேள்விப்பட்டு: நியாயம் விசாரிக்கிறதற் கான ஞானத்தைக் கர்த்தர் இராசாவுக்கு அளித்திருக்கிறாரென்று கண்டு அவருக்கு அஞ்சிப் பயந்தார்கள்.