அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 03

சமுவேலுக்குக் கடவுள் சொன்னவை.

1. ஆனால் சமுவேல் என்னும் வாலன் ஏலிக்கு முன்பாக ஆண்டவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். அந்நாட்களில் ஆண்டவருடைய வாக்கு மிகவும் அருமையாயிருந்தது, பிரத்தியக்ஷத் தரிசனமும் இல்லை;

2. இதோ ஒருநாள் ஏலி தன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் மங்கிப் போய்ப் பார்க்கக் கூடாதவனாயிருந்தான்.

3. தேவனுடைய விளக்கு அவிந்து போகாமுன்னே தேவனுடைய பெட்டகமிருந்த ஆண்டவருடைய ஆலயத்தில் சமுவேல் நித்திரை செய்து கொண்டிருந்தான்.

4. ஆண்டவர் சமுவேலைக் கூப்பிட்டார்; அவன் மறுமொழியாக: இதோ இருக்கிறேனென்றான்.

5. உடனே ஏலியின் அருகே ஓடி என்னைக் கூப்பிட்டீரே இதோ நிற்கிறேனென்று சொன்னான். அவன் நான் கூப்பிடவில்லை. திரும்பிப் போய் நித்திரை செய்யென்றான். அப்படியே சமுவேல் திரும்பிப்போய் நித்திரை செய்தான்.

6. ஆண்டவர் மறுபடியுஞ் சமுவேலைக் கூப்பிட்டார்; சமுவேல் எழுந்து ஏலியின் அருகே போய் என்னைக் கூப்பிட்டீரே இதோ நிற்கிறேன் என்றான். ஏலி: என் மகனே நான் உன்னை அழைக்கவில்லை. திரும்பிப் போய் நித்திரை செய்யென்று மறுமொழி சொன்னான்.

7. சமுவேலோ ஆண்டவருடைய வழிகளை இன்னம் பரீட்சித்திருந்ததில்லை; சுவாமியினுடைய வாக்கு அவனுக்குப் பிரத்தியட்சமானதில்லை. 

8. ஆண்டவர் இன்னமும் மூன்றா முறை சமுவேலைக் கூப்பிட்டார். இவன் எழுந்து ஏலி கிட்டப் போய்: 

9. என்னை அழைத்தீரே, இதோ நிற்கிறேனென்றான்; அப்போது ஆண்டவர் வாலனை அழைக்கிறதைக் கண்டறிந்து ஏலி சமுவேலைப் பார்த்து; நீ போய் நித்திரை செய்வாயாக. மறுபடியும் நீ அழைக்கப்பட்டால்: ஆண்டவரே உமது அடியான் கேட்கிறான், பேசுமென்று சொல்வாயாக என்றான். சமுவேல் திரும்பிப் போய்த் தன் இருப்பிடத்தில் நித்திரை செய்தான்.

10. ஆண்டவர் வந்து சமுவேல் அருகே நின்று சமுவேல், சமுவேல், என்று முன்போலே கூப்பிட்டு அழைத்தார். சமுவேல்: ஆண்டவரே, உமது அடியான் கேட்கிறேன், பேசுமென்று சொன்னான்.

11. ஆண்டவர் சமுவேலுக்குச் சொன்னது: இதோ நாம் இஸ்றாயேலரில் ஒரு காரியஞ் செய்வோம், அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரு செவிகளுஞ் சப்திக்கும்.

12. அந்நாளிலே ஏலியின் பேரிலும், அவனுடைய வீட்டின் பேரிலும் நாம் சொன்னவைகளையெல்லாம் வரவிடுவோம், துவக்கி முடிப்போம்.

13. ஏனெனில்: அவனுடைய குமாரர்கள் மதிகெட்டத்தனமாய் நடந்ததை அறிந்திருந்தும், அவன் அவர்களைக் கண்டியாதபடியால் அந்த அக்கிரமத்தைப் பற்றி அவனையும் அவன் வீட்டையும் என்றென்றைக்குந் தீர்வையிட்டுத் தண்டிப்போமென்று முன்னதாய் அவனுக்குத் தெரிவித்திருந்தோம்.

14. ஆகையால் ஏலியினுடைய வீட்டின் பாவம் பலிகளாலும், தானங்களாலும் ஒருக்காலுமே பரிகரிக்கப்படாதென்று நாம் அவனுடைய வீட்டுக்குச் சத்தியம் பண்ணினோம் என்றருளினார்.

15. சமுவேல் காலைமட்டுந் தூங்கிய பின் ஆண்டவருடைய வீட்டின் கதவு களைத் திறந்தான்; சமுவேல் ஏலிக்குத் தரிசனத்தைச் சொல்லப் பயந்துகொண் டிருந்தான்.

16. ஏலி சமுவேலை அழைப்பித்து: என் குமாரனாகிய சமுவேலே என்று சொன்னதற்கு, அவன் இதோ நிற்கிறே னென்றான்.

17. ஏலி அவனைப் பார்த்து: உனக்கு ஆண்டவர் வெளிப்படுத்தின காரிய மென்ன? நீ நல்ல பிள்ளை, ஒளிக்காத படி அதை எனக்குச் சொல்ல வேண்டும்; உனக்குச் சொல்லப்பட்ட வாக்கியங்களி லெல்லாம் ஒன்றை எனக்கு மறைப்பா யாகில் தேவன் உன்னைச் சிட்சிக்கக் கடவாராக என்றான்.

18. அவனுக்குச் சமுவேல் சகல காரியங்களையும் ஒளியாமலே வெளிப் படுத்தினான்; அப்போது ஏலி: அவர் ஆண்டவராயிருக்கிறார்; அவர் கண் களுக்கு நன்மையாயிருப்பதைச் செய் வாராக என்று மறுமொழி சொன்னான்.

19. சமுவேலோ வயதில் வளர்ந்து கொண்டு வந்தான். ஆண்டவர் அவனுட னிருந்தார்; அவர் வார்த்தைகளில் ஒன்றுந் தரையில் விழுந்ததில்லை.

20. சமுவேல் ஆண்டவருடைய பிர மாணிக்கத் தீர்க்கத்தரிசியென்று தான் துவக்கி பெத்சாபே பரியந்தம் இஸ்றா யேலர் எல்லோரும் அறிந்துகொண் டார்கள்.

21. சமுவேலுக்கு ஆண்டவர் சீலோ விலே முந்தத் தரிசனையானபடியால் மறுபடியுஞ் சீலோவிலே அவனுக்குத் தரிசனையாகச் சம்பவித்தது. சமுவேல் கர்த்தருடைய கட்டளையின்படி இஸ்றாயேலருக்கெல்லாஞ் சொல்லிய சமஸ்த சொல்லும் நிறைவேறின.