நியாயாதிபதிகளாகமம் - அதிகாரம் 03

இஸ்ராயேலருடைய பிரமாணிக்கத்தைப் பலவிதங்களால் சோதித்தல்.

1. இஸ்ராயேலியரையும், கானானையருடைய சண்டையை அறியாதவர்களையும் பரிக்ஷிப்பதற்கும்,

2. அவர்களுடைய பிள்ளைகள் சத்துராதிகளை எதிர்க்கக் கற்றுக்கொண்டு யுத்தஞ் செய்யும் வாக்கத்தை அவர்களுக்குப் பயிலுவ தற்கும் கர்த்தர் விட்டுவிட்ட ஜனங்களாவன:

3. பிலிஸ்தீனருடைய ஐந்து அதிகாரிக ளும், சகலமான கானானையரும், பாலேர் மோன் மலைமுதல் ஏமாத் வரைக்கும் லிபான் மலையில் வாசஞ் செய்த சிதோனியர்களும், ஏவையர்களுமேயாம்.

4. இஸ்ராயேலியர் மோயீசனிடமாய்த் தங்கள் பிதாக்களுக்குக் கர்த்தராலே கொடுக் கப்பட்ட கட்டளைகளைக் கேட்கிறார்களோ இல்லையோவென்று பரிக்ஷிக்கக் (கர்த்தர்) மேற்சொன்ன ஜனங்களை விட்டுவிட்டார்.

5. ஆகையால் கானானையர், ஏத்தையர், அமோறையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசேயர் இவர்களுக்குள்ளே இஸ்ராயேல் புத்திரர் வாசஞ் செய்வந்தார்கள்.

6. ஆனதால் இவர்கள் அவர்களுடைய பெண்களைத் தங்கள் மனைவிகளாகக் கொ ண்டும்,தங்கள் பெண்களை அவர்கள் பிள்ளை களுக்குக் கொடுத்தும், அவர்கள் தெய்வங் களை ஆராதித்தும் வந்தார்கள்.

7. கர்த்தருடைய சந்நிதியில் தின்மையை நடத்தித் தங்கள் கடவுளை மறந்துபோய் பாவாலீமையும், அஷ்டாரோட்டையும் ஆராதித்தார்கள்.

8. கர்த்தருக்கு இஸ்ராயேலியர்மேல் கோ பம் பிறந்து மெசெப்பொத்தாமியாவின் அரசனாகிய குசான் ரசாத்தாயிமென்பவனுக் கு அவர்களைக் கையளிக்கவே இஸ்ராயேல் புத்திரர் அவனுக்கு எட்டு வருஷகாலம் அடிமைகளாயிருந்தார்கள்.

9. பின்னும் அவர்கள் கர்த்தரிடத்தில் அபயமிடவே, அவர் அவர்களை மீட்டிரக்ஷிக் கக் காலேபின் இளைய சகோதரனாகிய செனேசின் குமாரன் ஒத்தோனியேலை எழுப்பினார்.

10. கர்த்தருடைய விவேகம் அவனிடமி ருந்தது; அவன் இராயேலியரை நடத்தி வந் தான். அவன் யுத்தத்துக்குப் புறப்பட்டபோது சீரிய அரசனான குசான் ரசாத்தாயிமை கர்த் தர் அவன் கையில் அளித்ததினாலே அவனை முறியடித்தான்.

11. நாற்பது வருஷகாலம் தேசத்தில் சமாதானமிருந்தது. அப்போது செனேசின் குமாரன் ஒத்தோனியேல் மரித்தான்.

12. கர்த்தருடைய சமுகத்தில் இஸ்ராயேல் மக்கள் திரும்பவும் அக்கிரமங்களைக் கட்டிக் கொள்ள ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர் மோவாப் அரசனாகிய ஏக்லோனை அவர்கள்மேல் தூண்டினார். ஏனென்றால் அவர் சமுகத்தில் அக்கிரமங்களைச் செய்திருந் தார்கள்.

13. அம்மோன் மக்களையும், அமாலேக் குமாரரையும் அவனோடு சேர்த்துவிட்டார். அவன் அவர்களோடு சென்று இஸ்ராயேலி யரை வென்று பனைமரத்தூரைத் தன் சுவா தீனப்படுத்தினான்.

14. இஸ்ராயேல் மக்களோ மோவாப் அர சனாகிய ஏக்லோனுக்குப் பதினெட்டு வருஷ காலம் அடிமைப்பட்டிருந்தார்கள்.

15. பின்பவர்கள் கர்த்தரை நோக்கி அபயமிடவே அவர் அவர்களை இரட்சிப் பதற்கு ஜெமினி குமாரன் ஜேராபுத்திரனாகி ய இரண்டு கைகளையும் வலது கைபோலவே உதவிக்கொண்டுவந்த ஆவோத் என்பவனை எழுப்பினார். இஸ்ராயேல் மக்கள் அவன் வழியாய் மோவாபின் அரசன்ஏக்லோனுக்குக் காணிக்கைகளை அனுப்பினார்கள்.

16. இவன் இருபுறங் கூர்மையும் ஒரு முழநீளமுமான கத்தியயான்று செய்து தன் வலதுபுறத்துப் போர்வைக்குள் வைத்துக் கொண்டான். 

17. மோவாப் அரசன் எக்லோனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தான். எக்லோ னோவென்றால் திரேகம் பாரித்தவன்.

18. அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தபின்னர், ஆரோத் தன் கூடவந்தவர் களோடு திரும்பினான்.

19. பிறகு அவன் விக்கிரகங்களிருந்த கல்க லாவினின்று திரும்பவும் அரசனிடம் வந்து; ஓ, இராஜாவே! நான் உம்மிடந் தனித்துப் பேசவேண்டும் என்றான். அரசனும் மெளனம் கட்டளையிட்டான். சுற்றிலுமிருந்த சகலரும் வெளியிற் போயினர்.

20. அப்பொழுது ஆவோத் என்பவன் உஷ் ணகால மண்டபத்தில் உட்கார்ந்திருந்த அரச ணன்டை நெருங்கி: கடவுள்பேரால் உனக் கொரு வார்த்தை சொல்லவந்தேன் என்றான், அரசன் சிம்மாசனத்தினின்று உடனே எழுந் தான்.

21. அப்போது ஆவோத் இடது கையை நீட்டி வலது புறத்தினின்று கத்தியை எடுத்து அவனை வயிற்றில் குத்தினான்.

22. அவன் குத்தின வலுவினால் பிடியும் கத்தியோடு காயத்துக்குட்சென்று கொழுத்த சதையினால் நெருக்கப்பட்டது. ஆவோத் கத்தியை வெளியில் இழுத்து எடுத்தவனல்ல் குத்தின பிரகாரமே திரேகத்தில் விட்டுவிட் டான். உடனே வயிறு வாய்களால் மல ஜலம் வெளிப்பட்டது.

23. ஆவோத் என்பவன் வெகு ஜாக்கிரதை யாய் அறையின் கதவுகளைச் சாத்திப் பூட்டுமிட்டு,

24. பின்புறத்துக்கதவால் வெளியில் புறப் பட்டான். இராஜாவின் ஊழியர் உட்பிர வேசித்து அறையின் கதவு சாத்தியிருப்பதைக் கண்டு இராஜா வெளிக்குப் போயிருப்பார் என்று தங்களுக்குள் சொல்லிக்கொண் டார்கள்.

25. வெகுநேரங் காத்திருந்து சலித்துப் போய் ஒருவருந் திறந்து விடாததைக் கண்டு தாங்களே சாவியைக் கொண்டுவந்து சாவி போட்டுத் திறந்தார்கள். தங்கள் எஜமான் தரையில் விழுந்து மரித்திருக்கக் கண்டார்கள்.

26. அவர்கள் தடுமாறி அங்கலாய்த்திருக் கையில் ஆவோத் தப்பித்தோடி தான் முன்னிருந்து திரும்பிவந்த விக்கிரஸ்தலத்தைக் கடந்து செய்ராத்துக்கு வந்து சேர்ந்தான்.

27. உடனே எப்பிராயீம் மலையில் எக்கா ளமூதினான். இஸ்ராயேல் புத்திரர் அவனோ டிறங்கிவந்தார்கள். அவனோ அவர்களுக்கு முன் நடந்தான்.

28. அவன் அவர்களை நோக்கி: என்னைப்பின்செல்லுங்கள்; நமது சத்துராதிகளான மோவாபியரைக் கர்த்தர் நம் கையளித்தார் என்றான். அவனைப் பின்சென்று மோவாப் தேசம் சேரும் வழியாகிய யோர்தான் நதித்து றையயல்லாம் கெட்டியாய்ப் பிடித்து மோ வாபியரில் ஒருவரையும் வெளியில் வர வொட்டாமல் தடுத்தார்கள்.

29. பிறகு அவர்களில் பலவான்களும் தீரர்களுமான பதினாயிரம் பேர்களைக் கொன்றுவிட்டார்கள். அவர்களிலொருவருந் தப்பித்துக்கொள்ளக் கூடுமாயில்லை.

30. அந்நாளில் மோவாபியர் இஸ்ராயேலி யர் கையால் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமா னது எண்பது வருஷகாலம் சமாதானமா யிருந்தது.

31. ஆவோத்துக்குப் பிறகு ஆனாத்துகுமா ரன் சாம்கார் ஏற்பட்டுப் பிலிஸ்தேயரில் அறுநூறுபேர்களைக் கலப்பைக் கொழுவால் கொன்றான். அவனும் இஸ்ராயேலியரைப் பாதுகாத்துவந்தான்.