யோனாஸ் ஆகமம் - அதிகாரம் - 02

யோனாஸ் திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டது.

1. ஆண்டவர் உடனே யோனாசை விழுங்கப் பெரியதோர் மச்சத்தைத் தயார் செய்தனர்; யோனாஸ் மச்சத்தின் கற்பகரத்தில் மூன்று பகலும் மூன்றிரவும் வாசஞ் செய்தனர்.

* 1-ம் வசனம். மத். 12:40; 16:4; லூக். 11:30; 1கொரி.15:4.

2. யோனால் சலசர கற்பத்திலிருந்து தன் தேவனாகிய ஆண்டவரை நோக்கி இங்ஙனஞ் செபிப்பாராயினர்.

3. அவரைப் பார்த்து: என் மனோ பாதையில் ஆண்டவரை நோக்கிக் கழறினேன். அவர் என் மன்றாட்டைக் கேட்டருளினர்; என் சமாதியாகிய (மீன்) கும்பியினின்று ஓலமிட்டேன். நீர் என் குரலுக்குக் காது கொடுத்தீர்.

* 3-ம் வசனம் சங். 119:1.

4. என்னை நடு சமுத்திர கெடிலத்தில் தள்ளிவிட்டீர், நீரோட்டம் என்னைச் சூழ்ந்தது; உமது சலத்திரளும், திரைகளும் என்மீது கடந்தன.

5. உமது கணகளது பார்வைக்குப் புறம்பே தள்ளப்பட்டேன்; (இஃது நீதியே) என்றாலும் உமது பரிசுத்த ஆலயத்தை இன்னந் தரிசிப்பேன் (என நம்பிக்கையுண்டு).

6. மூச்சுத் திணற சலங்கள் என்னைச் சுற்றிக் கொண்டன; சல பாதாளம் என்னை வளைந்து அலங்கமெழுப்பினது; பெரும் அலைகள் என் சிரத்தை மூடின.

* 6-ம் வசனம். சங். 68:2.

7. பர்வதங்களின் அடிவேர்ப்பிலங்கள் வரைக்கும் இறங்கினேன்; நித்தியத்துக்கும் பூமி எனக்குத் தாப்பாளிட்டது (போலும்); எம்பிரானான ஆண்டவரே! என் சீவனை நீர் அழிவில் நின்று காப்பீர் (என நம்பியிருக்கின்றேன்). 

8. என் ஆத்துமாவைப் பீடித்துள்ள கஸ்திசாகரத்தில் ஆண்டவரே! உம்மை ஸ்மரித்தேன்; என் மன்றாட்டு உமது வரைக்கும், உமது ஆலயத்து மட்டும் போய்ச் சேரக் கடவது.

9. வீணிலே திரணமாகிய (சிலைகளைச்) சேவிப்போர், தயை(யின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.

* 9-ம் வசனம். தயை-கடவுள்.

10. நானோ உமக்கு நன்றி ஸ்தெளத்திய பலியிடுவேன்; (தேவ) உதவியின் பொருட்டு செய்த பிரார்த்தனைகளை ஆண்டவருக்கு யான் செலுத்துவேன் என்றார்.

11. அப்போது ஆண்டவர் சலசரத்துக்கு ஆக்கியாபிக்க, அது யோனாசை (கடல்) கரையில் கக்கினது.