அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 02

எலியாஸ் வானத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

1. ஆண்டவர் எலியாசைச் சூறா வளிக் காற்றால் அந்தரலோகத்துக்குக் கொண்டுபோகக் கருதியபோது எலியாசும் எலிசேயுங் கல்கலாவினின்று புறப் படும்படியாய் நேரிட்டது.

2. எலியாசென்பவன் எலிசேயைப் பார்த்து: ஆண்டவர் என்னைப் பெத் தேலுக்கு அனுப்பியிருக்கின்றார்; ஆதலின் நீ இங்குதானேயிரு என்றான். எலிசே அவனை நோக்கி: ஆண்டவரும் வாழ்க! உமது ஆத்துமாவும் வாழ்க! ஆனால் உம்மை நான் கைவிடவேமாட்டேன் என்றான். இங்ஙனமிருவரும் பெத்தேல் என்னுமிடத்துக்குப் போனார் கள்.

3. பேத்தேலிலிருந்த தீர்க்கத்தரிசிகளின் பிள்ளைகள் எலிசே இடமாக ஓடி வந்து: ஆண்டவர் இன்று உமது எசமான னை உம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளப் போகிறது உமக்குத் தெரிந்த சங்கதியா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும்; நீங்கள் மெளனமா யிருங்கள் என்றான்.

4. அப்போது எலியாஸ் எலிசேயைப் பார்த்து: ஆண்டவர் ழெரிக்கோ (பட்ட ணம்) வரையில் என்னை அனுப்பியிருக்கிறார்; ஆதலின் நீ இங்குதானே இரு என் றான். அதற்கவன்: ஆண்டவரும் வாழ்க! உமது ஆத்துமாவும் வாழ்க! ஆனால் உம் மை நான் கைவிடப்போகிறதில்லை என் றான். இங்ஙனம் அவர்கள் இருவரும் ஒருமிக்கச் சென்றார்கள்.

5. ழெரிக்கோ பட்டணத்திலிருந்த தீர்க்கவசனரின் புத்திரர் (சீஷர்கள்) எலிசே யிடம் ஓடிவந்து: ஆண்டவர் இன்று உமது எசமானை உம்மிடத்தினின்று எடுத்துக் கொள்ளப்போவது உமக்குத் தெரிந்த சங் கதியா? என்று அவனைக் கேட்டார்கள். அதற்கவன்: எனக்குத் தெரியும் நீங்கள் (அதனை) வெளிவிடாதீர்கள் என்றனன்.

6. இன்னும் எலியாஸ் எலிசேயைப் பார்த்து: ஆண்டவர் என்னை யோர்தான் நதி வரையில் அனுப்பியிருக்கின்றார். ஆதலின் நீ இங்குதானே இரு என்றான். அதற்கவன்: ஆண்டவரும் வாழ்க! உமது ஆத்துமமும் வாழ்க! உம்மை நான் விலகு வதில்லை என மறுமொழி தந்தனன். ஆத லில் இருவரும் ஒருமிக்கச் சென்றார்கள்.

7. தீர்க்கத்தரிசியின் பிள்ளைகளிலே ஐம்பது பேர் அவர்களைப் பின்துடர்ந்து போனார்கள். அங்கே சேர்ந்தபோது இவர்கள் துலையில் நின்றார்கள். எலி யாஸ் எலிசே என்பவர்களோ யோர்தான் நதியோரம் நின்றுகொண்டிருக்கையில்,

8. எலியாஸ் தன் மேற்போர்வையை எடுத்து மடித்து அதைக்கொண்டு சலத்தையடிக்க அஃதும் இரண்டாய்ப் பிரிந்து போயிற்று; இருவருங் கால் நனை யாமல் நடந்து (நதியைக்) கடந்தார்கள்.

9. இவர்கள் அக்கரையில் போய்ச் சேர்ந்த பின்னர் எலியாஸ் எலிசேயை நோக்கி: நான் உன்னிடமிருந்து எடுபடு வதற்குமுன் (ஆண்டவரிடமாய்) நான் பெற்று உனக்கருள வேண்டிய வரமென்ன? உன் இஷ்டப்படி கேள் என்றான். அதற்கு எலிசே: உமது இருமடங்களான ஆவி என்னில் அனுக்கிரகமாக வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேனென்றனன்.

10. எலியாஸ் அவனைப் பார்த்து: நீ கேட்குங் காரியம் மிக அரிதானது என்றா லும் உன்னிடமிருந்து நான் எடுபடும் போது என்னைக் காண்பாயாகில் நீ கேட் பதை அடைவாய்; என்னைக் காணாவிட் டால் அடையமாட்டாய் என்றார்.

11. இவர்களிங்ஙனமாகச் சம்பாஷித் துக் கொண்டு வழி நடந்து போகையில், இதோ நெருப்புமயமான ஒரு இரதமும் அக்கினியைப் போன்ற புரவிகளும் திடீ ரென நடுவாந்தரத்தில் வந்து அவர் களைப் பிரித்து விட்டன. அன்றியும் எலியாஸ் சுழற்காற்று மூலியமாக வான மண்டலத்திலேறினார்.

12. எலிசேயோ அவரைக் காணப் பெற்று: “ஏ! என் பிதாவே! இஸ்றாயே லின் இரதமே! அவ்விரதத்தின் சாரதியே!” எனக் கூக்குரலிட்டுக் கொண் டிருந்தான். பின்னும் அவரைக் கண்டானில்லை; உடனே தன் வஸ்திரங்களைப் பற்றி அவைகளை இரண்டாகக் கிழித் தான்.

13. பின்னுந் தன் பக்கத்திலே விழுந் திருந்த எலியாசுடைய போர்வையை (தரை யினின்று) எடுத்துத் திரும்பிவந்து யோர் தான் நதிக்கரையின்மேல் நின்றான்.

14. எலியாஸ் தனக்கு விழவிட்ட மேற்போர்வையைக் கொண்டு ஜலத்தின் மேல் அடிக்க ஜலம் இரண்டாய்ப் பிரிந்ததில்லை; அப்போது எலிசே: எலியாசின் தேவன் இப்போது எங்கே இருக்கிறார் என்றான். பின்னும் அவன் இன்னொரு விசை ஜலத்தையடிக்க ஜலம் இங்குமங்குமாய்ப் பிரிந்துபோயிற்று. எலிசே நடுவே நதியைக் கடந்தான்.

15. ஜெரிக்கோ பக்கத்தில் எதிர்முக மாய் நின்று தீர்க்கத்தரிசிகளது சீஷர்கள் (இவையெல்லாம்) பார்த்து: எலியாஸ் என்பவருடைய ஆவி எலிசே என்பவர் மீது அமர்ந்ததென்றார்கள். அல்லாம லும் அவர்கள் ஓடிவந்து அவருக்கு முன் பாகத் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து வணங்கினர். 

16. பின்னும் அவனைப் பார்த்து: இதோ உமது குருவைப் போய்த் தேடிக் கொண்டு வரத்தக்க பலசாலிகளான ஐம்பது பேர் உமது அடியார்களுக்குள் இருக்கின்றார்கள்; சிலவிசை கர்த்தர் ஆவியானது அவரைத் தூக்கி ஒரு மலை யின் பேரிலாகிலும், ஒரு கணவாயிலென் கிலும் போட்டிருக்கக் கூடுமே என்றார் கள். அதற்கவன் அவர்களை அனுப்ப வேண்டாம் என்றான்.

17. ஆனால் எலிசே: இருக்கட்டும் அனுப்பலாமென்று உத்தரவு கொடுக்குந் தனையும் அவனை அலட்டி சம்மதிக்கப் பண்ணினார்கள்; அப்போது ஐம்பது மனி தரை அனுப்பினார்கள்; இவர்களோ போய் மூன்று நாள் பரியந்தந் தேடியும் அவரைக் கண்டாரில்லை.

18. ஜெரிக்கோ பட்டணத்தில் வீற் றிருந்த எலிசேயிடம் அவர்கள் திரும்பி வர அவன் அவர்களைப் பார்த்து: அனுப் பாதீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னதில்லையோ என்றான்.

19. அப்பட்டணத்து ஜனங்களும் எலிசேயைப் பார்த்து: ஐயனே, இப்பட் டணம் வாசம் பண்ணுவதற்கு வசதி யாய்த்தானிருக்கின்றது; ஆனால் ஜலம் அதிக கெடுதலாகவும், பூமி பலனற்றதாக வுமிருக்கின்றனவே என்றார்கள்.

20. அதற்கவன் ஒரு புது பாத்திரத் தைக் கொண்டுவந்து அதில் கொஞ்சம் உப்பைப் போட்டு வையுங்கள் என்றான். அவர்கள் அதைக் கொணர்ந்தபின்னர்,

21. எலிசே ஜல ஊற்றினருகே போய் ஜலத்தில் உப்பைக் கொட்டி: இதோ ஆண்டவர் திருவுளம்பற்றுகிறதாவது: “இச்சலங்களை நாம் சுத்தப்படுத்தி னோம்; இனிமேற்பட இவைகளை உபயோகித்துக் கொண்டால் சாக்காடு மில்லை, நிலங்களோ செழுமையை அடையும்” என்றாரென்றான்.

22. அதுமுதல் இந்நாள்வரைக்கும் அந்த ஜலங்கள் எலிசே செப்பிய வாக்குப் பிரகாரங் குணப்பட்டன.

23. அவ்விடமிருந்து (எலிசே) பேத் தேலுக்குப் போனான்; அவன் நடந்து போகும் வழியில் சிறு பிள்ளைகள் பட்டணத்தினின்று புறப்பட்டு: மொட் டைத் தலையா! நட, மொட்டைத் தலையா, நட என அவரைப் பரியாசம் பண்ணினார்கள்.

24. எலிசே அவர்களைத் திரும்பிப் பார்த்து கர்த்தருடைய பேரால் அவர் களுக்குச் சாபமிட்டான். அட்சணமே கானகத்திலிருந்து இரண்டு கரடிகள் புறப் பட்டு அந்தப் பிள்ளைகளின் மேல் பாய்ந்து அவர்களில் நாற்பத்திரண்டு பேரைப் பீறிப் போட்டன.

25. பின்பு எலிசே கர்மேல் மலையில் சென்றான்; அங்கிருந்து சமாரியாவுக்குத் திரும்பி வந்தான்.