அரசராகமம் மூன்றாம் புத்தகம் - அதிகாரம் 02

தாவீதரசனின் மரணம்

1. தாவீதின் அந்தியகாலஞ் சமீபித்த போது, தன் குமாரனாகிய சலொமோ னுக்குக் கற்பித்துச் சொன்ன புத்திமதி யாவது: 

2. எல்லாரைப்போல் நானுஞ் சமாதி யடையக் காலமாகிவிட்டது; நீ மனத் திடன்கொண்டு உத்தமனாயிரு.

3. உன் தேவனாகிய கடவுளின் கட்டளைகளை அநுசரி, அவரைப் பின் பற்றி நட; மோயீசனாகமத்தில் சொல்லி யதுபோல் நீ செய்வதெல்லாம் விவேகத் தோடு செய்ய, கடவுளுடைய திருச் சடங்குகளையும் அவருடைய கற்பனை களையும் அவருடைய கட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் அநுசரி.

4. ஏனெனில் கடவுள் என்னை நோக்கி: உன் குமாரர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமத்தோடும்  நமது சமுகஞ் சுத்தப் பிரிதியாய் நடந்து வருவார்களேயாகில் இஸ்றாயேல் சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்க உன் சந்ததியில் எப்பொழுதும் ஒருவன் இருப் பானென்றும் கடவுள் எனக்குக் கொடுத்த வார்த்தைப்பாடு அப்போது தான் நிறைவேறும்.

5. சார்வியாளின் குமாரனாகிய யோவாப் இஸ்றாயேலின் இரண்டு சேனாதிபதிகளான நேரின் குமாரனாகிய அப்நேருக்கும், எத்தேரின் குமாரனாகிய ஆமாஸாவுக்குஞ் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக் கிறாய்; அவன் அவர்களைக் கொன்று சமாதான காலத்திலே யுத்தகால இரத்தத் தைச் சிந்தி அந்த இரத்தத்தைத் தன் அரைக் கச்சையிலும், தன் பாதரட்சை களிலுஞ் சிந்திவிட்டான்.

6. ஆகையால் உன்னுடைய விவே கத்தின் பிரகாரம் அவன் விருத்தாப்பிய னாகி அமரிக்கையாய்ச் சமாதி சேர விடாதே.

7. கலாதித்தனாகிய பெர்ஜெல்லா வின் குமாரருக்குத் தயவு பண்ணு; அவர்களை உன் பந்தியில் அமரச் செய்; ஏனெனில் உன் சகோதரனாகிய அப்ச லோனுக்குமுன் நான் பயந்து ஓடும் போது அவர்கள் என்முன் வந்து என்னை ஆதரித்தார்கள்.

8. இன்னமும் பாஹூரிம் ஊரானா கிய எமினியின் புத்திரனான ழேராவின் குமாரன் செமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் பாளையத்துக்குப் போகும் நாளில் அவன் என்னை நிசித மான தூஷணஞ் சொல்லிச் சபித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டு வந்தபடியினால் நான் உன்னைப் பட்டயத்தால் கொல்லுவ தில்லை என்று கடவுள் பேரால் அவனுக் குச் சத்தியம் பண்ணிக் கொடுத்தேன். 

9. ஆகிலும் நீ அவனைக் குற்றமற்ற வனைப் போல் சும்மா விடலாகாது; நீ விவேகசாலியானதால் அவன் அந்திய காலத்தில் நிற்பாக்கியமாய்ச் செத்துச் சமாதிக்குப் போகச் செய்ய வேண்டியதை அறிவாயென்றான்.

10. பிற்பாடு தாவீது தன் பிதாக் களோடு நித்திரையடைநது தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.

11. தாவீது இஸ்றாயேலரை அரசாண் டது நாற்பது வருஷம். எப்பிரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்து மூன்று வருஷமும் அரசாண்டார்.

12. சலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் சிம்மாசனத்தின்மேல் வீற் றிருக்க அவனுடைய இராச்சியபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.

13. ஆகீத்தின் குமாரனாகிய அதோனி யாஸ் சலொமோனின் தாயாகிய பெத் சாபேயினிடம் வரவே: நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு, அவன்: சமாதானமாய்த்தான் வருகிறே னென்றான்.

14. பின்பு அவன்: உம்மோடு நான் பேசவேண்டிய ஒரு காரியமிருக்கிற தென்றான்.  அதற்கவள் சொல்லென் றாள்.

15. அப்போது அவன்: இராச்சியம் என்னுடையதாயிருந்ததென்றும், நான் அரசனாயிருக்கிறதற்கு இஸ்றாயேல் எல் லோரும் என்மேல் நோக்கமாயிருந்  தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் இராச்சியம் என்னை விட்டு மாறி என் சகோதரனுக்கு ஆயிற்று.  அது அவருக்குக் கடவுளால் கிடைத்தது.

16. ஆனால் இப்போது நானும்மிடத் தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்;  அதை எனக்கு மறுக்கவேண்டாம் என் றான்.  அவன்: அதைச் சொல்லென்றான்.

17. அப்போதவன்: இராசாவாகிய சலொமோன் உம்முடைய வார்த்தையை மறுக்கமாட்டார்; சூனாமித் ஊரா ளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக் கொடுக்க அவரோடு பேசும்படி வேண்டுகிறேனென்றான்.

18. அதற்குப் பெத்சாபே:  நல்லது  நானுக்காக இராசாவிடம் பேசுவேனென் றாள்.

19. பெத்சாபே, அதோனியாசுக்காக இராசாவாகிய சலொமோனிடத்தில் பேசும்படி போனாள்.  அப்போது இராசா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கித் தன் சிம்மா சனத்தின்மேல் உட்கார்ந்து, இராசாவின் தாயாருக்க வலதுபுறம் ஓர் ஆசனமிட அதிலவள் உட்கார்ந்தாள்.

20. அப்போதவள்: நானும்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்பு கிறேன்; எனக்கு அதை மறுக்க வேண் டாம் என, அதற்கு இராசா: என் தாயாரே கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.

21. அப்பொழுதவள்: சூனாமித் ஊரா ளாகிய அபிஷாகை உன் சகோதரனாகிய அதோனியாசுக்கு விவாகம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்றாள்.

22. இராசாவாகிய சலொமோன் தன் தாயாருக்குப் பிரத்தியுத்தாரமாக: சூனா மித் ஊராளாகிய அபிஷாகை அதோ னியாசுக்கு நீர் கேட்பானேன்?  அது போதாமல் இராச்சியபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; ஆசாரியராகிய அபி யாத்தாரும், சார்வியாளின் குமாரன் யோவாபும் அவனுக்கு உடந்தையாயிருக் கிறார்கள்.

23. ஆகையால்: அதோனியாஸ் இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகவே சொன்னான்; அல்லா  விடில் தேவன் அதற்குச் சரியாகவும் இன்னுமதிகமாகவும் எனக்குச் செய்யக் கடவாரென்று கடவுளின் மேல் ஆணை யிட்டு,

24. இப்பவும் இன்றைக்கே அதோனி யாஸ் கொலைசெய்யப்படுவானென்று என்னைத் திடப்படுத்தினவரும் என்னை என் தகப்னாராகிய தாவீதின் சிம்மாசனத் தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்ன படி என் வீட்டை ஸ்தாபித்தவருமாகிய, கடவுளுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேனென்று சொல்லி,

25. இராசாவாகிய சலொமோன் யோயியாதாவின் குமாரன் பனாயாசுக் குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்ப, இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.

26. பின்னும் இராசா ஆசாரியராகிய அபியாத்தாரை நோக்கி: நீர் உமது நிலங் களிருக்கிற அனாதோத்திற்குப் போய் விடும்; நீர் மரணத்திற்குப் பாத்திரவானா யிருக்கிறீர்; ஆனாலும் நீர் என் தகப்ப னாகிய தாவீதுக்கு முன்பாக, கடவு ளாகிய ஆண்டவருடைய பெட்டகத் தைச் சுமந்தபடியினாலும், இன்றயத் தினம் நான் உம்மைக் கொலைசெய்ய மாட்டேனென்றான்.

27. அப்படியே கடவுள் சீலோவிலே எலியாசின் சந்ததியாருக்குச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகச் சலொமோன் சலொமோன் அபியாத் தாரை ஆசாரியராயிராதபடி தள்ளிப் போட்டான்.

28. நடந்த இந்தச் செய்தியைக் கேட்ட யோவாப் சலொமோன் பாரிச மாயிராமல் அப்சலோன் பாரிசமாயிருந் ததினால் அவன் கடவுளுடைய கூடாரத் திற்கு ஓடிப்போய் பீடத்தின் கொம்பு களைப் பிடித்துக் கொண்டான்.

29. யோவாப் கடவுளின் கூடாரத் துக்கு ஓடிப் போனானென்றும், அவன் பலி பீடத்தினண்டையில் நிற்கிறானென்றும் இராசாவாகிய சலொமோனுக்கு அறிவிக் கப்பட்டபோது, சலோமோன் யோயியா தாவின் குமாரனாகிய பனாயாசை அனுப்பி: நீ போய் அவனைக் கொன்று போடு என்றான்.

30. பனாயாஸ் கர்த்தரின் கூடாரத்திற் குப் போய் அவனைப பார்த்து: நீ இராசா வின் கட்டளைப்பிரகாரம் வெளியே வா என்றான்.  அதற்கவன் பிரத்தியுத்தார மாக: நான் இவ்விடத்தைவிட்டு வரமாட் டேன்.  இங்கேயே சாவேனென்றான்.  ஆகையால் பனாயாஸ் இராசாவிடத்தில் போய் யோவாப் தனக்குச் சொன்ன மறு மொழி இன்னபடியென்று இராசாவுக்குத் தெரிவித்தான்.

31. அப்போது இராசா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து அவனைக் கொன்று அடக்கம் பண்ணு.  இவ்விதமாய் யோவாப் முகாந் திரமில்லாமல் சிந்தின இரத்தத்தின் தோஷம் என்னையும் என் பிதாவின் வீட்டையும் விட்டு நீங்கச் செய்வாராக.

32. அவன் தன்னைப்பார்க்கிலும் நற் குணமுள்ள இரண்டு நீதிமான்களாகிய நேரின் குமாரன் அப்நேர் என்னும் இஸ்றாயேலின் படைத்தலைவனையும், எத்தோரின் குமாரன் ஆமாஸா என்னும் யூதாவின் படைத்தலைவனையும் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப் பழியைக் கடவுள் அவன் தலையின்பேரிலேயே திரும்பப் பண்ணு வாராக.

33. இப்படியே அவர்களுடைய இரத் தப்பழி என்றும் யோவாபின் தலையின் பேரிலும், அவன் சந்ததியாரின் தலை யின் பேரிலுந் திரும்பக்கடவது; தாவீதுக் கும் அவர் சந்ததியாருக்கும், அவர் வீட் டாருக்கும், அவர் சிம்மாசனத்துக்கும் என்றென்றைக்குங் கடவுளுடைய சமாதானம் உண்டாயிருக்கக்கடவது என்றான்.

34. அப்படியே யோயியாதாவின் குமாரன் பனாயாஸ் போய் யோவா பைத் தாக்கி அவனைக் கொன்று போட் டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற அவனுடைய வீட்டிலே அடக்கம் பண் ணப்பட்டான்.

35. அப்போது இராசா யோவாபுக் குப் பதிலாக யோயியாதாவின் குமாரன் பனாயாசைப் படைத்தலைவனாகவும் அபியாத்தாருக்குப் பதிலாய்ச் சாதோக் கை ஆசாரியராகவும் நியமகஞ் செய் தான்.

36. பிறகு இராசா செமேயியை வர வழைத்து அவனை நோக்கி: எருசலே மிலே உனக்கோர் வீட்டைக் கட்டிக் கொண்டு இங்குமங்கும் போகாமல் அங்கேதானே குடியிரு.

37. என்றைக்கு நீ வெளியே புறப் பட்டு கேதரோன் ஆற்றைக் கடப் பாயோ அன்றைக்கே நீ சாகவேசாவாய்; அப்போது அந்தப்பழி உன் தலையின் பேரில் விழும் என்று அறிந்துகொள் ளென்றான்.

38. செமேயி இராசாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; இராசாவாகிய என் ஆண்டவன் சொன்னப்படியே உமது அடியானாகிய யான் செய்வேனென்று சொல்லி, செமேயி எருசலேமில் அநேக நாள் குடியிருந்தான்.

39. மூன்று வருஷஞ் சென்றபிறகு செமேயியின் வேலைக்காரர்கள் மக்கா வின் குமாரனாகிய ஆக்கீஸ் என்னும் கேத்தின் இராசாவிடத்துக்கு ஓடிப் போகவே, செமேயியின் வேலைக்காரர் கள் கேத்தில் இருக்கிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.

40. உடனே செமேயி கழுதையின் மேல் சேணவைத்துத் தன் வேலைக்கார ரைத்தேடக் கேத்தூரிலிருக்கும் ஆக்கீ சிடத்திற்குப் போய் தன் வேலைக்கார ரைக் கேத்தூரிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தான்.

41. செமேயி எருசலேமிலிருந்து கேத்தூருக்குப் போய்த் திரும்பிவந்தான் என்று சலொமோனுக்கு அறிவிக்கப்பட்ட போது,

42. இராசா செமேயியை வரவழைத்து: நீ வெளியே புறப்பட்டு இங்குமங்கும் போகிற நாளிலே நீ சாகவேசாவாயென்று அறிந்து கொள்ளென்று கடவுள் பேரில் ஆணையிட்டு உனக்கு நான் முன்னே எச்சரிக்கை செய்யவில்லையா?  அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று நீ சொல்லவில்லையா?

43. அப்படியிருக்க நீ கடவுளுடைய சத்தியத்தையும் நான் உனக்குக் கொடுத்த கட்டளையையும் அநுசரியாமல் போன தென்ன?

44. பின்னும் இராசா செமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனசாட்சிக்குத் தெரிந் திருக்கிறதுமான எல்லா பொல்லாப்பை யும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கடவுள் உன் பொல்லாப்பை உன் தலை யின்பேரில் திரும்பப்பண்ணினார்.

45. இராசாவாகிய சலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவராயிருப்பார்; தாவீதின் சிம்மாசனமோ கடவுளுக்கு முன்பாக என்றென்றைக்கும் ஸ்திரமா யிருக்குமென்று சொல்லி,

46. இராசா யோயியாதாவின் குமா ரன் பனாயாசுக்குக் கட்டளை கொடுக்க அவன் புறப்பட்டுப் போய் அவனைத் தாக்கிக் கொன்றுபோட்டான்.