நாகும் ஆகமம் - அதிகாரம் - 01

கடவுளின் மகத்துவம்.

1.  நினிவே நகரின் நிற்பந்த காட்சி; எல்சேஸாயி (எனுஞ் சிற்றூராராகிய) நாகும் என்போரது தரிசனாகமம்.

2. கடவுள் எதிர் காதலர். (அவர்) பழிவாங்கும் ஆண்டவர், கோபாக்கிர முடையவர்; (ஆம், அவர்) சத்துராதிகள் மேல் வர்மந் தீர்த்துக் கொள்ளுந் தேவன்; தம் பகைஞரை எதிர்த்த சினவாளர்.

3. ஆண்டவர் பொறுமையுள்ளவர், வல்லபம் மிகுந்தவர், காத்திருந்து அகத்தியந் தண்டிப்பவர்; ஆண்டவர் புயலெனவும், சுழல் காற்றெனவும் நடக்க, அவர் பாதங்கள் கீழ்தூசு மேகங் கிளம்பும்.

4. (அவர்) சமுத்திரத்தைக் கோபித்து, அதை உலர்த்திவிடுகிறவர்; நதிகள் யாவையும் வனாந்தரமாக்கு கிறவர்; (அவருடைய உக்கிரக் கோபத்து முன்) பாசானும், கர்மேலுந் துவண்டு போவன; லீபான் புஷ்பங்களும் வாடிப் போவன.

5. அவர் பர்வதங்களைக் கிடு கிடாய்க்கச் செய்கிறவர், குன்றுகளை நிர்மூலமாக்குகிறவர்; பூமியும், பிரபஞ்ச மும், அதின் சமஸ்தசீவ கோடிகளும் அவர் சமுகங் கண்டு விடவிடத்துப் போவன.

6. அவர் கோபாக்கிர சன்னதத்து முன் நிற்பவன் யாவன்? (கதித்தெழுந்த) அவருடைய சினத்தை எதிர்ப்பான் எவன்? அவருடைய உக்கிரக் கோபமானது நெருப்பெனப் பிரவாகமாகும்; அதன் முன் கற்பாறைகளும் உருகிப் போவன.

7. ஆண்டவர் நல்லவர், துன்ப காலத்தில் திடனளிக்கிறவர்; தம்மை நம்பினோரை அறிந்து (காக்கின்றவர்).

* 7-ம் வசனம்: 2 திமோ. 1:7.

8. ஆதலின் அவர் நினிவே நகரத்து ஸ்தானத்தைப் புரண்டோடுஞ் சலப் பிரளயத்தைப் போன்ற (பெரும் படை யால்) அழித்து விடுவர்; இருளானது அவ ருடைய சத்துராதிகளைப் பின் தொடரும்.

9. நீங்கள் ஆண்டவருக்கு விருத் துவம் நினைத்ததேன்? அவரே உங்க ளுக்கு இறுதி வருவிப்பர்; அந்த அழிவும் இருமுறையதாயிராது.

10. ஏனெனில், முட்செடிகள் ஒன்றோடொன்று பிணைந்துகொள் வது போல், அவர்கள் தம் விருந்திலும் (மது) பானத்திலும் கலவி நிற்கின் றனர்; (ஆனால் அவர்கள்) முழுதும் உலர்ந்த சருகுபோல் எரிந்து போவார்கள்.

11. ஏனெனில், ஆண்டவருக்கு விரோதமாய் வஞ்சகஞ் சூழ்ந்த சிந்தனையுடையனாய்த் துஷ்கருமத்தை எண்ணுவான் உன்னின்று கிளம்புவன்.

* 11-ம் வசனம். உள்ளின்று கிளம்புவன்--சென்னாக்கெரிபின் இராணுவம்.

12. ஆண்டவர் சொல்வதேதெனில்: அவர்கள் வல்லுனர்களாயினும், பெருந் தொகையினராயினும், (முழுதும்) சங்காரஞ் செய்யப்படுவார்கள்; (சென்னாகெரிபின் படை) அதோகதியாகும்; (நம் பிரசையே!) உனக்குத் துன்புறுத்தினோமாயினும் இனி உன்னை உபத்திரிப்பதில்லை.

13. உன்னை வருத்திய (உன் சத்துராதியின்) கசைதனை ஒடித்துவிடப் போகின்றோம்; உன் தளைகளை அறுத்துவிடுவோம்.

14. (சென்னாக்கெரிபே!) உனக்கு விரோதமாய் ஆண்டவர் தீர்ப்பளிப்பர்; உன் பெயர் இனி பிரக்யாதிகொள்ளாது; உன் தேவனின் ஆலயத்துச் சிலைகளையும், விக்கிரகங்களையும் அழித்துவிடுவோம்; அதுவே உன் சமாதியாகும், நீயும் நிந்திக்கப்படுவை.

15. இதோ சுபவிசேஷத்தைக் கொணர்ந்து, சமாதானத்தை அறிவிப் பானுடைய பாதங்களைப் பர்வதங்கள் பேரில் யான் காணுகின்றேன்; யூதாவே! உன் உற்சவங்களைக் கொண்டாடு; உன் நேர்ச்சிக் கடன்களை நிறைவேற்று; ஏனெனில், பெலியால் இனி உன் நடுவில் புகுந்துபோகான், முழுவதுமே நாசமானது.

* 15-ம் வசனம். இசா. 52:7; உரோ. 10:15. பெலியல்--அசீரியுஸ்.