ஆமோஸ் ஆகமம் - அதிகாரம் - 01

ஆமோஸ் பல சாதி சனங்களுக்கு வருந் தண்டனைகளைச் சொல்லுகிறது.

1. தேகுவே ஆயர்களில் ஒருவராகிய ஆமோஸ் என்போர்: யூதா அரசனாகிய ஓசியா காலத்திலும், இஸ்றாயேல் அரசனாகிய யோவாஸ் குமாரன் எரோ போவாம் காலத்திலும் பூகம்பத்திற்கு இரண்டு வருடங்களுக்கு முன் இஸ்றா யேலைக் குறித்துக் கண்ட காட்சி களாவன:

* 1-ம் வசனம். பூகம்பம் யூதர் அரசனாகிய ஓசியா என்போன் அலுவலை வகிக்க ஏற்பட்ட காலையில் சம்பவித்தது.

2. அவர் வசனித்த வசனமாவது: ஆண்டவர் சீயோன் பர்வதத்தினின்று (கோபாக்கிர சந்நத்தராய்க்) கர்ச்சிப்பர்; அவர் குரல் எருசலேமில் சப்திக்கும்; (உடனே) பசுமையான மேய்ச்சல் நிலங்கள் பாழாகுவன; கர்மேல் கொடி முடியும் உலர்ந்துபோம்.

* 2-ம் வசனம். மேய்ச்சல் நிலம் எனும் வார்த்தை அழகிய பட்டணங்களையும், மாட மாளிகைகளையும், தோட்டங்களையும், வயல்களையுங் குறிப்பதாகவும், கர்மேல் கொடுமுடி என்பது இஸ்றாயேலின் பசுமையான பூஸ்திதிகளைக் குறிப்பதாயும் வேத வியார்த்திகர் கூறுகின்றனர்.

3. ஆண்டவர் சொல்வதேதெனில்: தமாஸ்கு நகரத்தின் மூன்று நான்கு பாதகங்களைப்பற்றி அதுக்கு (யாம் விதித்த தண்டனையை) மாற்றவறி யோம்; அவை கலஹாத்தை இருப்புருளையில் வைத்து ஆட்டி விட்டமையால்,

* 3-ம் வசனம். மூன்று நான்கு பாதங்கள்: முடிந்த எண்ணை முடிவில்லா எண்ணிற்காக இங்கு வைக்கப்பட்டிருத்தலால், அநந்த பாதங்ளைப் பற்றி எனப் பொருள்படுத்தல் வேண்டும்.

4. அசாயேல் கிரகத்தில் யாம் தீ வைக்க, அது பெனாதாத்தின் மாளிகைகளை அழித்துவிடும்.

* 4-ம் வசனம். அசாயேல் இறக்கவும், அவன் குமாரன் பெனாதாத் சிம்ஹாசனம் ஏறினன்.

5. தமாஸ்கின் தாப்பாளை யாம் முறித்து, விக்கிரகத் தோட்டத்தின் கண் வசிப்பாரை நாசஞ் செய்து, செங்கோல் பிடித்தானையுஞ் சுகபோக விடுதியி னின்று (துரத்திவிடுவோம்.) சீரியா பிரசை சிரேனேனுக்குக் கொண்டுபோகப்படும் என ஆண்டவர் செப்புகின்றனர்.

* 5-ம் வசனம். தாப்பாள் என்பது, வீரர் படையைக் குறிப்பிடுகிறது; செங்கோல் பிடித்தானை என்பது, அரசனைக் குறிக்கிறது.

6. பின்னும் ஆண்டவர் சொல்வதே தெனில்: காசாவின் மூன்று நான்கு அக்கிரமங்களைப் பற்றி அதை மன்னிக்க வறியோம்; ஏனெனில், அதின் வாசிகள் நமது பிரசையில் அவர்களிடம் அடைக்கலம் புகுந்தோரை இதுமேயாவுக்குக் கைதிகளாகக் கூட்டிப் போனார்கள்.

7. ஆதலின் காசா அரணில் யாம் நெருப்பு வைக்க, அது அதின் வீடுகளைப் பஸ்மீகரித்துவிடும்.

8. ஆசோத்தினின்று அதின் குடிகளையும், அக்காலோனினின்று செங்கோல் கரத்தானையும் நாசமாக்குவோம்; பின்னும் அக்காரோன் மீது நமது கரத்தை நீட்டி, பிலிஸ்தியரில் மீதியான பேர்களை அழித்துவிடுவோம் எனத் தேவனாகிய ஆண்டவரே திருவாய் மலர்ந்தருளினர்.

9. இதோ ஆண்டவர் சொல்வது: தீர் பட்டணத்தின் மூன்று நான்கு பாதகங்களைப் பற்றி அதுக்குப் பொறுதி தர வறியோம்; அவர்கள் சகோதரத்துவங் காப்பாற்றுவதாய்ச் செய்த உடன் பாட்டை மறந்து, (இஸ்றாயேலை) இதுமேயாவுக்குக் கைதியாகப் பதனம் பண்ணினமையால்,

* 9-ம் வசனம். சலோமோன் அரசருக்கும் தீர் அரசனாகிய ஹீராம் என்போனுக்கும் உடன்படிக்கை ஏற்பட்டிருந்தது.

10. யாம் தீர் நகரின் அரணில் தீ வைக்க, அது அதன் மாளிகைகளை நிர்மூலமாக்கி விடும்.

11. பின்னும் ஆண்டவர் சொல்வதே தெனில்: ஏதோனின் மூன்று நான்கு தோஷங்களைப் பற்றி அதை க்ஷமிக்க மாட்டோம்; அது (இஸ்றாயேலாகிய) தன் சகோதரனை வாளால் பாதனைப் படுத்தி, தாட்சண்ணியந் துறந்து, தன் ஆக்கிரத்துக்கு வரம்பே வையாது கடைசி பரியந்தங் கோபத்தைப் பாராட்டியே வந்ததினிமித்தம்,

* 11-ம் வசனம். ஏதோன் மக்கள் ஏசாவூ மக்களாவர்; ஆதலின் சகோதர தத்துவம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளார்.

12. தேமானில் நாம் நெருப்பு வைக்க, அது பொஸ்ராவின் மாளிகைகளைச் சாம்பலாக்கிவிடும்.

13. இதோ ஆண்டவர் சொல்வது: அம்மோன் புத்திரருடைய மூன்று நான்கு பாதகங்களைப்பற்றி, அதின் அபராதத்தை க்ஷமிக்கவறியோம்; கலஹாத் (சந்ததியை அழித்து) தம் தேசத்து எல்லைகளை விஸ்தீரணப்படுத்த அதின் கற்ப ஸ்திரீகளின் (வயிற்றைப்) பீறினர்கள் ஆதலின்,

* 13-ம் வசனம். தேமானும் பொஸ்ராவும் இதுமாவின் விசேஷ பட்டணங்களாம்.

14. யாம் இராபா அரணில் அக்கினி எழுப்ப, அதன் குடிகள் போர்க்களத்திய இரைச்சலிடும்படியாகவும், திகில் பட்டுச் சித்தப் பிரமை கொள்ளும்படியாகவும் வீடுகளை எல்லாம் பஸ்மீகரஞ் செய்து விடும்.

* 14-ம் வசனம். இராபா அம்மோனித்தாரின் இராசதானி பட்டணம்.

15. மெல்கோம் தெய்வமுங்கூட தன் அர்ச்சகராகிய பிரபுக்கள் சகிதமாய்க் கைதியாகக் கூட்டிப் போகப்படும் என ஆணடவர் செப்பலுற்றார்.