அரசராகமம் இரண்டாம் புத்தகம் - அதிகாரம் 01

சவுல், ஜோனத்தாஸ் மரணத்துக்கு தாவீது துக்கித்தல்.

1.  சவுல் உயிர் துறந்தபின்னரோ சம்பவித்தது என்னவென்றால், தாவீது அமலேக்கியர் சங்காரத்தினின்று திரும்பி வந்து சிசெலேகில் இரண்டு நாள் தாம திக்கலானான்.

2. மூன்றாந் தினத்திலோவென்றால், சவுலின் பாளையத்தினின்று பீறிப்போன வஸ்திரத்தோடும், தலையில் தூவிய புழுதியோடும் வந்த ஒரு மனிதனைக் கண்டார்கள்.  அவன் தாவீதின் இடம் வந்து முகங் குப்புற விழுந்து நமஸ்காரம் புரிந்தான்.

3. தாவீது: நீ எங்கிரந்து வருகிறாய்? என்று அவனை வினவ, அவன்: நான் இஸ்றாயேல் பாளையத்தினின்று ஓடி வந்தேன் என்று அவனுக்குப் பதில் கூறி னான்.

4. மீண்டும் தாவீது அவனை நோக்கி: நடந்த சேதியென்ன? எனக்கு அறிவி என, அவன்: பிரசைகள் யுத்தத்தை விட்டு ஓடிப் போனார்கள்; அவர்களிலே பலரும் வீழ்ந்து மடிந்தனர்; அன்றியும் சவுலும் அவன் குமாரனாகிய ஜோனத்தாசும் இறந்தார்கள் என்றான்.

5. அப்போது தாவீது சமாச்சாரஞ் சொன்ன வாலிபனை நோக்கி: சவுலும் அவன் குமாரன் ஜோனத்தாசும் மரணித்து விட்டனரென்று நீ எங்ஙன மறிவாய்? என்று கேட்டதற்கு,

6.  செய்தி கொண்டுவந்த வாலிபன் நான் அதிஷ்டமாய் கெல்பேயே மலைக்குப் போனேன்; சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந் தார்.  அந்நேரத்தில் இரதங்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கினார்கள்.

7. அவர் திரும்பிப் பார்த்து என் னைக் கண்டு கூப்பிட்டார். அதற்கு நான்: இதோ இருக்கிறேன் என்றேன்.

8. அப்பொழுது நீ யார் என்று அவர் கேட்க, நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.

9. அப்போது அவர் என்னை நோக்கி: நீ என்மேல் நின்று என்னைக் கொன்றுபோடு.  எனெனில் என் பிராணன் முழுதும் என்னிலிருப்பதால் எனக்கு மெத்த வேதனையாயிருக்கிறது என்றார்.

10. அப்போது நான்: அவர் விழுந் தாரே இனி பிழைக்க மாட்டாரென்று அறிந்தமையால் அவர்மேல் நின்று அவரைக் கொன்று போட்டேன்; பின்பு அவர் சிரசின்மீதிருந்த மகுடத்தையும் அவர் புயத்திலிருந்த கடகத்தையும் எடுத்துக் கொண்டு அவைகளை இங்கு என் ஆண்டவனிடத்திற்குக் கொணர்ந்தேன் (என்றான்.)

11. இதைக் கேட்டுத் தாவீதும் அவனோடிருந்த சகல மனிதர்களுந் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு,

12. சவுலும், அவன் புத்திரனாகிய ஜோனத்தாசும், கர்த்தருடைய சனங் களும், இஸ்றாயேல் குடும்பத்தாரும் வாளால் மடிந்து விழுந்தனரெனப் பிரலாபித்து அழுது சாயுங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.

13. அப்பால் தாவீது தனக்குச் சேதி அறிவித்த வாலிபனை நோக்கி: நீ எவ்வூரான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அமலேக்கியனான அந்நிய சாதியா னுடைய மகன் என்று மறுமொழி உரைத் தான். 

14. தாவீதோ கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரைக் கொலை செய்வதற்கு நீ உன் கையை நீட்டப் பயப்படாமல் போனதென்ன என்று சொல்லி,

15. தன் ஊழியர்களில் ஒருவனைக் கூப்பிட்டு: நீ அணுகி அவன்மேல் விழுந்து அவனைக் குத்து என, அவன் அவனைக் குத்திவிட்டான், அவன் செத்தான்.

16. தாவீது அவனைப் பார்த்து, உன் இரத்தப்பழி உன் தலைமேலேயாம்; ஏனெனில் கர்த்தர் அபிஷேகம் பண்ணின வரை நான் கொன்றேன் என்று உன் வாயே உனக்கு விரோதமாய்ச் சாட்சி சொன்னதென்றான்.

17. தாவீதோவெனில் சவுலின்மீதும் அவன் புத்திரன் ஜோனத்தாசின்மீதும் பின்வருமாறு புலம்பலைப் பாடி,

18. (நீதிமான்கள்) என்னும் புத்தகத் தில் எழுதியிருக்கிறபடி வில்லென்றும் பாட்டு யூதாவின் புத்திரருக்குக் கற்றுக் கொடுக்கக் கற்பித்தான்.  அதாவது: இஸ்றாயேலே உன்னுந்நதங்களின்மேல் காயம்பட்டு மரணித்தவர்களை நினைக் கக் கடவாய்.

19. கீர்த்தி பெற்ற இஸ்றாயேலர் உன் பர்வதங்களின்மேல் கொலையுண்டனர்! இந்த வீரசூரர் எவ்வாறு விழுந்தனர்?

20. கேட்டிலும் இதை அறிவிக்காதீர் கள்; அஸ்கலோனின் வழிச்சந்திகளிலுந் தெரிவிக்காதீர்கள்; தெரிவித்தால் பிலிஸ் தியரின் குமாரத்திகள் சந்தோஷித்துக் கொள்வாரே; விருத்தச் சேதனம் இல்லாதவர்களின் பெண்கள் களிகூறு வாரே.

21. கெல்போயேயின் குன்றுகளே! பனியோ, மாரியோ உங்கள்மீது பெய்யா திருப்பதாக!  உங்கள் வயல்களோ முதல் பலனைத் தராதிருப்பதாக! அங்கே யன்றோ சவுல் தயிலத்தால் அபிஷேகிக் கப்படாதவரைப் போல் தன் கேடயத் தைத் தரையிலெறிந்துவிட்டார்.  வீரசூர ரின் கேடயம் ஐயோ அவமதிக்கப் பட்டதே.

22. இதற்குமுன் ஜோனத்தாஸின் அஸ்திரமோ கொலையுண்டவ்களின் உதிரத்தைப் பானஞ் செய்யாமலும் பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண் ணாமலும் ஒருபோதும் பின்னிட்டு வந்த தில்லை.  சவுலின் பட்டயமோ குத்தி வெறுமையாய்த் திரும்பினதில்லையே.

23. உயிரோடிருக்கையில் சவுலும் ஜோனத்தாசும் பிரியமானவரும் சவுந் தரியமுள்ளவருமாயிருந்தார்களே, அவர் கள் மரணத்திலும் பிரிந்துபோகவில்லை.  அவர்கள் கழுகுகளிலும் வேகமுடையவர் களாய்க் கேசரிகளிலும் பலமுடைத்தான வர்களாயிருந்தார்கள் அல்லவா?

24. இஸ்றாயேலின் குமாரத்திகளே, சவுலின் மீதழுங்கள்! அவர் சுகசெல்வ மாய் உங்களுக்கு இரத்தாம்பரத்தை உடுப்பித்து உங்கள் உடைகளின்மேல் பொன்னாபரணங்களைத் தரிப்பித்தவ ரன்றோ?

25. யுத்தக் களத்தில் வல்லவர் வீழ்ந் தாரே;  உந்நதங்களில் ஜோனத்தாஸ் கொலையுண்டானே!   அதென்ன துன்பம்.

26. ஜோனத்தாஸ்! ஓ! தம்பி உனக் காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ மகா சவுந்திரியனாயும் பிரியமான ஸ்திரீக ளைப் பார்க்கிலும் அதிக பிரியனாயும் இருந்தாய்!  தன் ஏக புத்திரனை ஒரு ஸ்திரீ சிநேகிக்குமாப்போலன்றோ உன்னை நான் சிநேகித்திருந்தேன்.

27. பராக்கிரமசாலிகள் ஏன் வீழ்ந் தனர்; யுத்தத்துக்குரிய ஆயுதங்களின்(மகிமை) கெட்டுப் போயிற்றையோ (வென்று புலம்பினான்.)