மலாக்கியா ஆகமம் - அதிகாரம் - 01

இஸ்றாயேலின் நன்றிகெட்டதனம்.

1. மலாக்கியா வழியாய் இஸ்றாயேலுக்கு ஆண்டவர் கூறுங் கஸ்திக்குரிய முறைப்பாடாவது.

2. ஆண்டவர் செப்புவது: நாம் உங்களை நேசித்தோம்; நீங்களோ நீர் நேசித்ததற்கு (அத்தாட்சி) யாது எனக் கேட்டீர்கள்; எசாவு யாக்கோபுக்கு உடன் பிறப்பன்றோ என்றாலும் யாக்கோபை நேசித்தோம் என்கிறார் ஆண்டவர்.

* 2-ம் வசனம். உரோ. 9:13. ஏசாவும் யாக்கோபும் உடன் பிறந்த சகோதரர் களாயினும் கடவுள் யாக்கோபையும் அவருடைய சந்ததியையுமே விசேஷ விதமாய் நேசித்தார்.

3. எசாவு என்போனை நாம் பகைத்தோம், அவன் பர்வதங்களை வனவாசமாக்கினோம்; அவன் காணியாட்சியைப் பறவை நாகங்களுக்கு (வாசமென விடுத்தோம்.) 

4. “அதோ கதியானோம், ஆயினும் நாம் மடங்கு வந்து, நாசமானதைக் கட்டுவோம்” என இது சொல்லுமேல், சேனைகளின் ஆண்டவர் சொல்லுவார்: அவர்கள் கட்டுவார்கள், யாம் இடிப் போம்; அவர்கள் அக்கிரமத்தின் நாடெனவும், நித்தியத்திற்கும் ஆண்டவரின் கோபத்தைச் (சிரமேல்) கொண்ட பிரசையெனவும் அழைக்கப்படுவார்கள்.

5. உங்கள் கண்களும் (இதனைக்) காண்பன; நீங்களும்: “இஸ்றாயேல் நாடெங்ஙணும் ஆண்டவர் கோஷிக்கப் படுவாராக” என்பீர்கள்.

6. புதல்வன் பிதாவை வணங்குகின் றனன். ஊழியன் எசமானனை (வந்திக் கின்றனன்;) யாம் உங்கட்குப் பிதாவா யிருக்கின்றோமாயின், வந்தனை எங்கே? உங்கள் ஆண்டவராயிருக்கின்றோ மாகில், உங்கள் பயப் (பக்தி) எங்கேயெனக் கேட்கிறார் சேனைகளின் ஆண்டவர்; நமது நாமகரணத்தைத் திரஸ்கரிக்குங் குருக்களே! யாங்கள் எவ்விஷயத்தில் உமது அபிதானத்தைத் திரஸ்காரஞ் செய்தோம் எனக் கேட்கிற வர்களே பதில் சொல்லுங்கள்.

7. தீண்டலான அப்பத்தை எமது பீடத்தின்மீது அற்பணஞ் செய்கின்றீர் கள்; பின்னும் யாது காரியத்தில் யாங்கள் உம்மைக் கறைப்படுத் தினோம் எனக் கேட்கின்றீர்கள்; ஆண்டவருடைய மேசை இழிபட் டிருப்பதாய்ச் சொல்லுகின்றீர்களே அதினாலேயாம்.

8. குருடானதைப் பலியிடக் கொணர்ந்து வருவீர்களேல், அஃது தோஷமன்றோ? நொண்டியானதையும், வற்றலானதையும் பலியிடச் சமர்ப்பிப் பீர்களேல், அஃதுந் தீமையாமன்றோ? உங்கள் அதிபனுக்கு (இத்தன்மைத்த) அதனைக் கொடுங்கள்; அவனுக்கு அஃது சம்மதமா (பார்ப்போம்) என்கிறார் சேனைகளின் தேவனார்.

9. (இவைகட்குப் பின்) உங்கள் பேரில் தயையாயிருக்கச் சொல்லி ஆண்டவர சமுகம் பிரார்த்தியுங்கள்! உங்களை எங்ஙனம் ஏறெடுத்துப் பார்ப் பர்! (இவையெல்லாம் உங்களாலேயே ஆனது) என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

10. உங்களில் எவன் இலவசமாய் எம் ஆலயத்தின் கதவுகளைச் சாத்து கின்றான்; பீடத்தில் தீ வளர்க்கிறான்; உங்கள் மட்டில் எம் மனது (திருப்தி) கொள்ளாது; உங்கள் கரத்தினின்று காணிக்கைகளை ஏற்றுக் கொள்ளோம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

11. சூரியன் உதயந் தொட்டு அஸ்தமன பரியந்தம் நமது நாமகரணஞ் சனங்கள் நடுவில் மகத்தானதாயிருக்கின்றது; எவ்விடத்தும் பலியிடப்பட்டும், நமது நாமத்துக்குச் சுசிகர நிவேதனம் நடந்து வருகின்றது; ஏனெனில், நமது நாமம் சனங்களுக்குள் (அவ்வளவு) சிறந்ததாயிருக்கின்றது என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

* 11-ம் வசனம். சங். 112:3. சுசிகர நிவேதனம்--பரிசுத்தமான பலி--திவ்விய பலிபூசையைக் குறிக்கிறது.

12. ஆயினும் ஆண்டவருடைய அசனமேசை அசுத்தப்பட்டதெனவும், அதின்மீது படைக்கப்பட்டதும், அத னைத் தகனிக்கும் நெருப்புந் திரஸ் கரம் உடைத்து எனவும் நீங்கள் சொல்லியதால் எமது நாமத்தைப் பங்கப்படுத்தினீர்கள்.

13. இதோ (எங்கள்) உழைப்பின் பலனென்று அதனை அவலட்சணப் படுத்தினீர்கள் என்கிறார் சேனை களின் ஆண்டவர்; கொள்ளையடித் தவைகளிலும், நொண்டியும், பிணி பட்டதுமான தைக் கொணர்ந்து வந்து நிவேதனமாக ஒப்புக்கொடுத்தீர்கள்; அதனை உங்கள் கரத்தினின்று யாம் அங்கீகரிப்போமென (எண்ணுகின்றீர்களோ) வெனக் கேட்கிறார் ஆண் டவர்.

14. தன் மந்தையில் பழுதற்றதை உடைத்து, அதனையும்நேர்ச்சி செய்து, (பின்பு) பிணிபட்டதை ஆண்டவருக்குப் பலியிடுங் கபடிக்குச் சாபமே! மகத்துவ இராசன் யாமே! நமது நாமகரணம் (சகல சாதி சனங்களுக்குள் பயப் பிராந்தி (உறச் செய்கின்றதாமே) என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.