அரசராகமம் நான்காம் புத்தகம் - அதிகாரம் 01

ஒக்கோசியாஸ் ஆட்சி.

1.  ஆக்காப் மரணமானபின்னர் (தாவீது கீழ்ப்படுத்தியிருந்த) மோவாப் தேசத்தார்கள் இஸ்றாயேலைவிட்டுக் கீழ்ப்படியாமற் போனார்கள். 

2. ஒக்கோசியாஸ் என்பவன் சமாரியாவிலிருந்த (அரண்மனையின்) மேன் மெத்தையிலிருந்து சன்னலின் வழியாய்க் கீழே விழுந்து, மிகவும் வியாதிப்பட்டு சில ஜனங்களைப் பார்த்து: நான் இவ்வியாதி யினின்று விடுதலாகிப் பிழைக்கக் கூடுமோ வென்று அறியும்பொருட்டு அக்காரோன் தேவனாகிய பெல்செபூபை விசாரிக்கப் போவீர்களாக என்று சொல்லி அவர் களை அனுப்பினான்.

3. ஆண்டவருடைய சம்மனசான வரோவென்றால் தெஸ்பித்தனான எலியாஸ் என்பவனோடு சம்பாஷித்து: நீ எழுந்து சமாரியா அரசனின் தூதுவருக் கெதிரே போய்: இஸ்றாயேல் இராச்சியத் தில் கர்த்தர் இல்லாமற் போனதுதானோ நீங்கள் அக்காரோன் தேவனாகிய பெல் செபூபிடங் குறிகேட்கப் போகிறீர்கள்?

4. ஆதலால் ஆண்டவர் திருவுளம் பற்றுகிறதேதெனில்: நீ “உன் படுக்கை யினின்று எழுந்திராமல் சாகவே சாவாய்” என்றார். என்றவுடனே எலியாஸ் புறப் பட்டுப் போனான்.

5. (பெல்செபூபிடம்) அனுப்பப்பட் டவர்கள் திரும்பி வரப்பார்த்து ஒக்கோசி யாஸ் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் திரும்பி வந்தீர்கள்? என அவர்களைக் கேட்டான்.

6. அதற்கவர்கள் மாறுத்தரமாக: ஒரு மனிதன் எங்களுக்கெதிர் வந்தார்; அவர் எங்களைப் பார்த்து: நீங்கள் உங்களை அனுப்பின அரசனிடம் போய்: இதோ ஆண்டவர் சொல்லுகிறதாவது: இஸ்றா யேலில் கர்த்தர் இல்லாமல் போனது தானோ, நீங்கள் அக்காரோன் தேவனான பெல்செபூபை இங்ஙனங் குறி கேட்க அனுப்பினீர்கள்? ஆனதைப் பற்றி “நீ யிருக்கும் படுக்கையினின்று எழுந் திருக்க மாட்டாமல் சாகவே சாவாய்” என அரச னுக்குரைப்பீர்களென்றார் என்றார்கள்.

7. அரசன் அவர்களைப் பார்த்து; உங்களுக்கு முன்பாக வந்து இவ்வாக் கியத்தைச் சொல்லிய சீமானுக்கு நடை யுடை எப்படியிருந்தது; சொல்லுங்க ளெனக் கேட்டான்.

8. அதற்கவர்கள்: அவர் உரோமமுள் ளவரும், இடையில் தோற்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிறவருமா(யிருந் தார்) என்றனர். அப்போதரசன்: அவன் தெஸ்பித்தனான எலியாசென்பவனே என்றான்.

9. உடனே (ஒக்கோசியாஸ்) அவ னிடத்தில் ஐம்பது வீரரைப் படைத்த இராணுவத் தலைவரில் ஒருவனையும் அவனுடைய ஐம்பது போர்ச் சேவகர் களையும் அனுப்பினான். அவர்கள் போய் ஒரு மலைக் கொடி முடியில் வீற் றிருந்த (எலியாசைப்) பார்த்து: “ஓ! கர்த்தரின் மனிதனே! உடனே இறங்கி வாரும், இராசாக் கட்டளை” என்றான்.

10. எலியாஸ் அந்தத் துரையைப் பார்த்து: நான் கர்த்தரின் மனிதனானால் வானினின்று நெருப்பு வந்து உன்னையும் உன் ஐம்பது போர் வீரரையும் விழுங்கக் கடவது என்று மறுவுத்தாரஞ் சொன்னான். சொன்னவுடனே வானினின்று நெருப் பிறங்கி அவனையும் அவனோடிருந்த ஐம்பது மனிதரையும் பட்சணம் செய்தது.

11. ஒக்கோசியாஸ் இன்னொரு தலை வனையும் அவனது ஐம்பது சேவகர்களை யும் அனுப்ப, அந்தத் தலைவன் எலியாசைப் பார்த்து: ஓ கர்த்தரின் மனி தனே! அரசனின் கட்டளையின்படி நீர் சீக்கிரம் இறங்கிவாரும் என்றான்.

12. எலியாஸ் மறுமொழியாக: நான் கர்த்தரின் மனிதனானால் வானத்தி னின்று நெருப்பு இறங்கி உன்னையும் உன் ஐம்பது வீரர்களையும் விழுங்கக்கட வது என்று சொன்னான். உடனே ஆகா யத்தினின்று தீயிறங்கி வந்து தலைவனை யும் அவனோடிருந்த ஐம்பது மனிதரை யும் பட்சணம் செய்தது.

13. ஒக்கோசியாஸ் மற்றொரு விசை ஐம்பது பேருக்கு இன்னொரு நாயகனை யும், அவனோடு ஐம்பது போர் வீரரையும் அனுப்பினான். இவன் எலியாசுக்கெதிரே வந்து முழந்தாளிட்டு அவனைப் பார்த்து ஓ! கர்த்தரின் மனிதரே! எனக்கும் என்னோடிருக்கும் உமது ஊழியர்களுக் கும் உயிர் பிச்சை தரவேண்டும்.

14. “இதோ வானத்தினின்று நெருப்பு வந்திறங்கி ஐம்பது வீரர்கட்கு நாயகரான இரண்டு தலைவர்களையும் அவர்களோ டிருந்த ஐம்பது வீரர்களையும் விழுங் கிற்று; ஆனால் தேவரீர் என் பிராணனைக் காத்தருளும்படி மிகவும் பிரார்த்திக்கின் றேன்” என்று மன்றாடினான்.

15. அதே நேரத்தில் ஆண்டவருடைய தூதனானவன் எலியாசைப் பார்த்து, நீ பயப்பட வேண்டாம்; அவனோடு கூட இறங்கிப் போ என்றார். ஆதலால் எலியாஸ் எழுந்து அரசனைப் பார்க்க அவனோடு இறங்கிப் போனான்.

16. பின்னும் அரசனை நோக்கி: நீர் ஆலோசனை கேட்க இஸ்றாயேலில் ஒரு தேவனுமில்லாததுபோல், அக்காரோன் தேவனான பெல்செபூபிடங் குறிகேட்கச் சில மனிதரை அனுப்பினீர். ஆதலின் நீர் (வியாதியாய் வீழ்ந்த) படுக்கையினின்று எழுந்திருக்கப் போவதில்லை; நிச்சய மாகவே சாவீர் என்றனன்.

17. ஆகையால் எலியாசென்பவனால் ஆண்டவர் செப்பிய வாக்கியப் பிரகாரம் ஒக்கோசியாஸ் மரணமடைந்தான்; பின் னும் அவனுக்கு ஒரு குமாரனும் இல்லாத தால் அவனிடமாக அவன் சகோதரன் ழோராம் சிம்மாசனத்தில் ஏறினான். அது யூதா நாட்டரசனான ஜோசபாத் குமாரன் ழோராம் என்பவனின் இரண்டாம் வரு ஷத்தில் நடந்தது.

18. ஒக்கோசியாசின் மற்றுமுள்ள வர்த்தமானங்கள் இஸ்றாயேல் அரச ருடைய சம்பவச் சங்கிரகம் என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.