அரசராகமம் முதல் புத்தகம் - அதிகாரம் 01

சமுவேல் பிறப்பு.

1. எப்பிராயீம் என்னப்பட்ட மலையில் சொப்பிம் என்று அழைக்கப்பட்ட ராமாத்தாயீம் ஊரானாகிய ஒரு மனிதனிருந்தான். அவன் பேர் ஏல்கானா. இவன் எரோவாம் குமாரன்; இவன் எலியூ குமாரன்; இவன் தோயு குமாரன்; இவன் எப்பிராயீம் கோத்திரத்தானான சூப்புடைய குமாரன்.

2. அவனுக்கு இரண்டு பெண்சாதிகளிருந்தார்கள்; ஒருத்திக்குப் பேர் அன்னாள். இரண்டாம் பெண்சாதிக் குப் பேர் பெனென்னாள். பெனென்னாளுக்குப் பிள்ளைகளிருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகளிருந்ததில்லை.

3. அந்த மனிதன் தன் ஊரினின்று சீலோவுக்குக் குறித்த நாட்களிலே சேனைகளின் ஆண்டவரை ஆராதிக்கவும், அவருக்குப் பலியிடவும் போவான்; ஆண்டவரின் குருப்பிரசாதிகள் ஒப்னியும் பினேசுமான ஏலியின் இரண்டு குமாரர்கள் அங்கிருந்தார்கள்.

4. ஒருநாள் ஏல்கானா பலியிட்டு அப்பலியின் பங்குகளைத் தன் மனைவி யாகிய பெனென்னாளுக்கும், அவளு டைய குமாரர் குமாரத்திகளெல்லோருக் குங் கொடுத்தான்.

5. அன்னாளுக்கோ ஒரு பங்கு கொடுத்தான்; அன்னாளை நேசித்திருந் ததைப் பற்றிக் கஸ்தியாயிருந்தான். சுவாமியோ அவளை மலடியாக்கியிருந் தார்.

6. அவளுடைய சக்களத்தி அவளைப் பரியாசம் பண்ணி வருத்தித் துன்பப் படுத்துவாள். பலவிசையும் ஆண்டவர் அவளை மலடியாக்கியதைப் பற்றியே அவளைத் திட்டி ஏசுவாள்.

7. ஆண்டவருடைய ஆலயத்துக்குப் போக வேண்டிய காலம் வரும்போதெல் லாம் வருஷந்தோறும் அம்மாதிரி செய் வாள். அவளைப் பரியாசம் பண்ணு வாள்; ஆகையல் அன்னாள் அழுவாள்; போசனம் பண்ணாமலிருப்பாள்.

8. ஆனதைப் பற்ற அவள புருஷ னாகிய ஏல்கானா அவளை நோக்கி: அன்னா ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடா திருக்கிறாளய்? ஏன் உன்னுள்ளந் துன்பப்படுகின்றது. உனக்குப் பத்துப் பிள்ளைகளைப் பார்க்கிலும் நான் அதிக நல்லவனல்லவா? என்பான்.

9-10-11. ஆனால் அன்னாள் சீலோ விலே சாப்பிட்டுப் பானம் பண்ணின பின் எழுந்திருந்தாள். ஏலியென்னும் பெரிய குரு ஆண்டவருடைய ஆலயத்தின் வாசற்படி முன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அன்னாள் கஸ்தி நிறைந்தவளானபடியால் வெகுவாய் அழுது ஆண்டவரை வேண்டி: சேனை களின் ஆண்டவரே! உமது அடியா ளுடைய துன்பத்தை ஏறெடுத்துப் பார்த்து என்பேரில் நினைவுகூர்ந்து உமது அடியாளை மறவாமல் உமது அடிமைக்கு ஓராண் குழந்தை கொடுப்பீராகில் அதை அதின் சீவியகாலபரியந்தம் ஆண்டவ ருக்கு ஒப்புக்கொடுப்பேன்; சவரகன் கத்தி அதன் தலையின்பேரில் படா தென்று பொறுத்தனை பண்ணினாள்.

12. அவள் ஆண்டவருடைய சந்நிதி யில் அதிகமதிகமாய் வேண்டிக் கொண்டிருக்கையில், ஏலி அவளுடைய வாயைக் கவனிக்க நேரிட்டது.

13-14. ஏனெனில், அன்னாள் தன் இரு தயத்திலே பேசுவாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைய அவள் குரல் சப்தஞ் சற்றேனுங் கேட்கப்படவில்லை; ஏலி அவள் குடிவெறியில் இருப்பதாகப் பாவித்து அவளை நோக்கி: எத்தனை காலங் குடிவெறியால் வெறித்திருப்பாய்? உனக்கு வெறி கொடுக்கும் இரசத்தைச் சற்று சீரணிக்க விடலாகாதா என்றான்.

15. அன்னாள் மறுமொழியாக; என் ஆண்டவனே அப்படிக்கல்ல, நானோ நிற்பாக்கியம் நிறைந்த ஸ்திரீ. இரசமும் வெறி கொடுக்கும் எதையும் நான் குடித் தவளல்ல; என் ஆத்துமத்தை ஆண்டவர் சந்நிதியில் விவரித்தேன்.

16. பெலியால் குமாரத்திகளில் ஒருவ ளாக உமது அடியாளை எண்ண வேண்டாம். ஏனெனில் என் துக்க வியா குல மிகுதியால் நான் இதுவரையில் பேசினேனென்றாள்.

17. அப்போது ஏலி: (கர்த்தர்) இஸ்றா யேலுடைய தேவன்; அவரிடத்தில் நீ கேட்ட மன்றாட்டை அநுக்கிரகிப்பார்; சமாதானமாய்ப் போவென்ற பதிலுரைத் தார்.

18. அவளோ மறுமொழியாக: உமது அடியாள்பேரில் உமது கிருபையின் கடாக்ஷம் இருப்பதாகவென்றாள். மேலும் அந்த ஸ்திரீ தன் இல்லிடம் போய்ச் சாப்பிட்டாள். அதற்குப் பிறகு அவள் துக்கமுகமாயிருக்கவில்லை;

19. அவர்கள் விடியற்காலையில் எழுந்து ஆண்டவரை ஆராதித்தபின் புறப்பட்டு ராமாத்தாவில் தங்கள் வீடு வந்து சேர்ந்தார்கள்.மேலும் ஏல்கானா தன் மனைவி யாகிய அன்னாளைச் சேர்ந்தான். ஆண்டவர் அவளைக் கிருபையாய்ப் பார்த்தருளினார்.

20. உள்ளபடி சில நாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள். ஆண்டவர் இடத்தில் கேட்டதினிமித்தம் அவனுக் குச் சமுவேலென்று பேரிட்டாள்.

21. மேலும் அவள் புருஷனாகிய ஏல்கானா அவன் வீட்டார் அனைவ ருடன் ஆண்டவருக்கு வழக்கப் பலியைச் செலுத்தவுந் தன் பொருத்தனையைச் செலுத்தவும் போனான்.

22 அன்னாள் கூடப் போகவில்லை; அவளோ பிள்ளை பால்குடி மற்கும் வரைக்கும் நான் போகமாட்டேன் என் றும், அதன்பின்பு அவனைச் சுவாமிக்கு ஒப்புக்கொடுக்கவும், அவன் எப்பொழு தும் அங்கிருக்கவும் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போவேனென்றுந் தன் புருஷனுக்குச் சொன்னாள்.

23. அவள் புருஷனாகிய ஏல்கானா அவளை நோக்கி: உனக்கு எப்படி நல மென்று தோன்றுதோ அப்படிச் செய்; பிள்ளை பால் மறக்கும் வரையில் இரு. ஆண்டவர் தன் வாக்கை நிறைவேற்ற மன்றாடுகிறேன். ஆகையால் அன்னாள் வீட்டில் நின்று விட்டாள்; பிள்ளை பால் மறக்கும் வரைக்கும் அதற்குத் தன் பால் கொடுத்து வளர்த்தாள்.

24. பால் மறந்த பின் அன்னாள் தன் னுடன் மூன்று கன்றுகளையும், மூன்று மரக்கால் மாவையும், ஒரு சாடி இரசத் தையும் எடுத்துக் கொண்டு சீலோவில் ஆண்டவரின் ஆலயத்துக்குத் தன் குமார னைக் கூட்டிக் கொண்டுபோனாள்; பிள்ளையோ மிகச் சிறுவனாயிருந்தான்.

25. அவர்கள் ஒரு கன்றைப் பலி யிட்ட பின்பு பிள்ளையை ஏலி என்பவ ருக்கு ஒப்புக்கொடுத்தார்கள்.

26. அன்னாள் அவரை நோக்கி: என் ஆண்டவனே, நீர் சீவனுடனிருப்பது எப்படி உண்மையோ அப்படியே அப்படியே ஆண்டவனே உண்மையாகச் சொல்லுகிறேன்: இங்கு உமக்கு முன் சுவாமியை மன்றாடி நின்றிருந்த அந்த ஸ்திரீ நானே! 

27. இந்தப் பிள்ளைக்காக மன்றாடி னேன். ஆண்டவர் நான் கேட்ட மன் றாட்டை எனக்குத் தந்தருளினார்; ஆகை யால் அவனை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தேன், அவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்கு ஒப்புக்கொடுக்கப்பட் டிருப்பான் என்று சொன்னாள். பிறகு அவர்கள் அங்கு ஆண்டவரை ஆராதித் தார்கள். அன்னாளோ வேண்டிக் கொண்டு சொன்ன ஜெபமென்ன வெனில்.