சொப்போனியாஸ் ஆகமம் - அதிகாரம் - 01

யூதர்களுக்கு வரும் தண்டனைகள்.

1. யூதா அரசனான அம்மோனின் குமாரராகிய யோசியாஸ் என்போர் காலத்தில், எசேக்கியாஸ் புத்திரன், அமாரியாஸ், இவர் புதல்வன் கொதோ னியாஸ், இவர் மைந்தன் கூசி, இவர் தனையனாகிய சொப்போனியா வென்போருக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கியம்.

2. பூமி பரப்புமீது இலங்குவன யாவற்றையும் ஒருங்கே கூட்டுவோம் என்கிறார் ஆணடவர்.

3. மானிடரையும் விலங்குகளையும், வானகத்துப் பறவைகளையும், சமுத்திர மச்சங்களையும் ஒருங்கே சேர்த்து (மடித்து விடுவோம்;) அக்கிரமிகளுக்கு அதோ கதியாகும்; பூதலத்தின்கண் மனிதர் தோன்றாதடிப்போம் என்கிறார் ஆண்டவர்.

4. யூதா மீதும், எருசலேமின் சகல வாசிகள் மீதும் நமது கரத்தை நீட்டுவோம்; இவ்விடத்தினின்று பாஹாலுக்கு உரித்தானவைகளையும் அர்ச்சகருடையவும், குருப்பிரசாதிகளுடையவும் நாமங்களை அழித்தே விடுவோம்.

5. வானகக் கிரகங்களை வீடுகளின் தளத்தின்மீது சேவிக்கிறவர்களையும், ஆண்டவரை ஆராதித்து அவர் நாமகரணத்தின்மீது பிரமாணங் கூறி, மெகோம் மீதும் நிர்ணயம் பண்ணுகிறவர்களையும், 

* 5-ம் வசனம்: மெகோம்--அம்மோனித்தாரின் விக்கிரகம்.

6. ஆண்டவருக்குப் புறங்காட்டித் திரும்பிப் போகிறவர்களையும், ஆண்ட வரைத் தேடாதிருப்போரையும், அவரைக் கண்டடைய முயற்சிக்காதவர் களையும் (நாசஞ் செய்வோம்.)

7. தேவனாகிய ஆண்டவர் சமுகத் தில் (பயந்து) மெளனங்காருங்கள்; ஏனெனில், ஆண்டவருடைய நாள் சமீபித்திருக்கின்றது; ஆண்டவர் பலியைத் திட்டஞ் செய்து, விருந்தினர்களைத் தருவித்துப் பரிசுத்தமாக்கினர்.

* 7-ம் வசனம்: பலி--சங்காரம்.

8. ஆண்டவருடைய பலியின் ஞான்றிலே நாம் பிரபுக்களையம், அரச குமாரர்களையும், அந்நிய உடை தரித்தவர்களையுந் தண்டிப்போம்;

9. தேவாலயத்தின் அகம்பிரமத்தோடு நுழைவோர் யாவரையும், தம் தேவனான ஆண்டவரின் வாசஸ் தானத்தை அக்கிரமத்தினாலும், வஞ்சகத் தினாலும் நிரப்புகிறவர்களையும் அஞ் ஞான்றில் கண்டிப்போம்.

10. அந்நாளில் மச்சங்கள் வாயிலில் மகா ஆர்ப்பரவங் கேட்கும்; இரண்டாம் (வாயிலில்) அலறல் சப்தமாகும்; குன்று களினின்று பெருஞ் (சங்காரத்தின்) கூக்குரல் கிளம்பும்.

* 10-ம் வசனம்: மச்சங்கள் வாயிலில்--எருசலேம் வாயில்களில் ஒன்று.

11. உரலில் அகப்பட்டவர்காள் ஓல மிடுங்கள்; கனகான் (புத்திரருக்குச் சமதையான இந்தப்) பிரசை எல்லாம் மெளனங் கொள்ளும்; பணம் பெருத்த பேர்களெல்லாம் நாசமாவார்கள்.

12. அக்காலையில் எருசலேமைத் தீபங் கொண்டு சோதிப்போம்; கோது (க் கொப்பாகிய தனத்தில்) புதைந்திருப்போரையும், “ஆண்டவர் நன்மையுஞ் செய்யார், தீமையும் புரியார்” என இருதயம் இயம்புவாரையுஞ் சந்திப்போம்.

13. அவர்கள் ஐசுவரியங்கள் கொள்ளையாடப்படுவன; அவர்கள் வீடுகளுஞ் காடாவன; அவர்கள் வீட்டைக் கட்டினும் அதில் வசிக்க மாட்டார்கள்; முந்திரிகை நடினும் அதில் இரசம் பருகார்கள்.

14. ஆண்டவருடைய மகத்தான நாள் சமீபித்திருக்கின்றது; அதிதீவிரமாய்க் கிட்டிவருகின்றது; எல்லோருங் கலக்கமுற வேண்டிய ஆண்டவருடைய நாளின் பிரலாபக் கூக்குரல் சப்தங் (கேட்கப்படும்.)

15. அந்நாள் கோபாக்கிரத்தின் நாள்; (அஃது) கஸ்தியுடையவும், கலக்கத் துடையவும் நாள்; துன்பத்துடையவும், நிற்பாக்கியத்துடையவும் நாள்; இருளுடையவும், அந்தகாரத்துடையவும் நாள்; முகிலுடையவும் புயலுடையவும் நாள்.

16. (அஃது) வலுவுடைய பட்டணங்களும், உயர்ந்த கோபுரங்களும் எக்காளச் சப்த கோஷத்துக்கு (நடுங்கி நிற்க வேண்டிய) நாளாகும்.

17. (அப்பருவத்தில்) மானிடர்கள் ஆண்டவருக்கும் பாபங்கள் செய்தமையால் நாம் அவர்களை உபாதிப்போம்; அவர்களும் அந்தகர் எனத் திரிவார்கள்; அவர்கள் குருதி தூசெனச் சிந்தப்படும்; அவர்கள் சடலஞ் சகதியென (மிதிக்கப்படும்.)

18. ஆண்டவருடைய கோப ஞான்றிலே அவர்களுடைய வெள்ளியும், பொன்னும் அவர்களை மீட்கவறியா; அவர் சீற்ற நெருப்பானது புவனம் அனைத்தையும் விழுங்கிவிடும்; ஏனெனில், அஃது பூதல வாசிகள் யாவரையும் படு நாசனஞ் செய்யத் தீவிரிக்குமாமே.