புனித ஏஞ்சலா மெரிஸி

232. பசாசு உறங்குவதில்லை, மாறாக, ஓராயிரம் வழிகளில் அவன் நம் அழிவைத் தேடுகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

233. ஒரு நல்ல மரம், அதாவது ஒரு நல்ல இருதயம் மற்றும் பிறர்சிநேகத்தால் பற்றியயரியும் ஓர் ஆன்மா, நல்லவையும், பரிசுத்தமானவையுமான வேலைகளைத் தவிர வேறு எதையும் செய்ய இயலாது.

234. உன் செயல்களிலிருந்து கடவுளின் மகிமையையும், ஆன்மாக்களின் இரட்சணியத் தையும் தவிர மற்ற எல்லா நோக்கங்களையும் நீ புறக்கணிக்கும் அளவுக்கு, உன் கடமைகளை நிறைவேற்றுவதில் உன் கண்டுபிடிப்புகள் மாசற்றவையாக இருப்பனவாக.

235. நீ எதற்கு அழைக்கப்பட்டிருக்கிறாயோ அந்தப் பணி கடினமாயிருப்பதாக நீ கண்டு பிடித்தாலும், அது பற்றி அதைரியப்படாதே. உன்னை அழைத்தவர் உன்னைக் கைவிட மாட்டார், ஆனால் நீ தேவையில் இருக்கும்போது, அவர் தம்முடைய இரட்சிக்கிற திருக்கரங்களை நீட்டுவார்.

236. சமூகத்தில் நிலவும் ஒழுங்கீனம் குடும்பத்தில் நிலவும் ஒழுங்கீனத்தின் விளைவாகும்.

237. உன் மரண நேரம் வரும்போது எதைச் செய்திருக்க விரும்புவாயோ, அதை இப்போதே செய்.

238. கோபத்தாலோ, கூரிய வார்த்தைகளால் கடிந்து கொள்வதாலோ சாதிப்பதை விட அதிகமாக, கருணையுள்ள வார்த்தைகளாலும், மரியாதையுள்ள நடத்தையாலும் நீ சாதிப்பாய். இந்தக் கோபத்தையும், கண்டிப்பையும் அவசியமிருந்தால் தவிர மற்றபடி ஒருபோதும் நீ பயன்படுத்தக்கூடாது.