இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானாகமம் - அதிகாரம் 04

நற்பிறப்புக்கும் ஒழுங்கீனமான விபசாராப் பிறப்புக்குழள்ள வித்தியாசம்.

1. ஒ புண்ணியத்தால் அலங்கரிக்கப்பட்ட கற்புடைய சந்ததி எவ்வளவோ அழகாயிருக்கின்றது. அதினுடைய நினைவு எப்போதைக்கும் நிலைகொள்ளும் ; ஏனென்றால் சர்வேசுரனுடைய சமுகத்திலும், மனிதருக்குமுன்னும் மகிமை பெற்றதாயிருக்கிறது.

2. அதைக் காண்கிறவர்கள் கண்டுபாவிக்கிறார்கள். அதைக் காணாதபோதோ மனிதர் கஸ்தியடைந்து  தவிக்கிறார்கள் .கற்புக்காக யுத்தத்தில் வெற்றி யடைந்து நித்தியத்திற்கும் முடிசூடி ஜெயங்கொள்ளுகின்றதே !

3. அக்கிரமிகளுடைய பெருஞ் சந்ததியோ பிரயோசனமற்றதாகும் .அவர்கள் பிதுர்வழி ஆழமாய் வேருன்றுவதுமில்லை ; அவர்கள் கொடி வழி நிலைத்திருப்பதுமில்லை.

4. காலத்தோடு அவர்கள் கிளைவழியுண்டானாலும், நிலைமையற்றவர்களானதால் காற்றினால் அலைந்து புயலின் உக்கிரமம் அவர்களை வேரோடு பிடுங்கிவிடும்.

5. வலுத்துப் பெரிதாகிறதற்குமுந்தியே கிளைகள் முறியும் கனிகள் பிரயோசனமற்றதாயும் சுவைக்குப் புளிப்பாயும் இருப்பதால் யாதொன்றுக்கும் உதவாதேபோகும்.

6. ஏனென்றால் விபசாரத்தில் பிறந்த பிள்ளைகள் இன்னாரென்று பிறாறியத் தேடும்போது அந்தப் பிள்ளைகளே தங்களுடைய தந்தை தாயுடைய குற்றத்துக்குச் சாட்சிகளாய் நிற்கிறார்கள்.

7. நீதிமானுக்குச் சடுதிமரணம் வந்தாலும் அவன் இளைப்பாறுவான்..

8. நீளித்த ஜீவியத்தினாலும், அதிக வருஷக் கணக்கினாலும் முதுமை சங்கைக்குரியதாகுமோ இல்லை.

9.ஆனால் மனிதனுடைய விவேகமே அவனுக்கு முதுமைபோலும். மாசற்ற சீவியமே அவனுக்குப் பாக்கியமான விருத்தாப்பியம்போலுமிருக்கின்றது.

10. நீதிமான் சர்வேசுரனுக்குப்  பிரியமாய் நடந்தினாலே சர்வேசுரன் அவனை நேசித்திருக்கிறார் ; ஆகையால் தேவன் பாவிகளிடத்திலேநின்று அவனைப் பிரித்தார்.

11. அவன் மனங் கெட்டுப்போகாதபடிக்கும் பொய்யான மாய்கையினால் அவன் ஆத்துமம் மோசம் போபாதபடிக்கும், பூலோகத்தினின்று நீக்கப்பட்டான் .

12. அற்பக் காரியங்களின் மாயை நன்மையை அந்தகாரப்படுத்துகின்றது. ஆசாபாசத்தின் நிலையில்லாமை நன்மனதைக் கவர்ந்து வேறுபடுத்துகின்றது.

13. (நீதிமான்) கொஞ்சங்காலஞ் சீவித்தும் நெடுஞ்சீவியத்தின் (புண்ணிய) பலன்களை அடைந்தான்.

14. ஏனென்றால் அவன் ஆத்துமம் சர்வேசுரனுக்குப் பிரியமாயிருந்தது. ஆகையினால் அக்கிரமங்களின்  நடுவில் நின்று (தேவன்) அவனை எடுத்துக்கொள்ளத் தீவிரித்தார்.பார்த்திருந்த சனங்களுங் கண்டுபிடித்தவர்களல்ல. அந்தப்பிரகாரமாகுமென்று நினைத்தவர்களுமல்ல.

15. ஏனெனில் சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும் அவர் இரக்கதும் பரிசுத்தவான்களுக்குரியது. அவருடைய தயவு அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கே கிடைக்கும்.

16. மரித்த நீதிமான் சீவியத்திருக்கும் அக்கிரமிகளைக் குற்றவாளிகளாக்குகிறான் .கடந்து போன அவன் வாலிபப் பிராயம் அநீதனுடைய நெடுஞ் சீவியத்தைக் கெட்டதென்று காண்பிக்கின்றது.

17. அக்கிரமிகள் ஞானியின் முடிவைக் காணும்போது சர்வேசுரன் அவனைப்பற்றி என்ன எண்ணங்கொண்டாரென்றும், ஏன் அவகைப் பத்திரப்படுத்தினாரென்றுங் கண்டுபிடியார்கள்.

18. அவன் முடிவைக் கண்டு அவனை நித்திப்பார்கள் . ஆனால் கர்த்தர் அவர்களை நோக்கி நகைப்பார்.

19. அவன் பிறகு அவர்கள் யாதொரு மதிப்பில்லாமல்  மரித்து. மரித்தவர்களோடு என்றென்றைக்கும் நிந்திக்கப்படுவார்கள். ஏனெனில் சர்வேசுரன் அவர்களை நொறுக்கி வெட்கப்படுத்தி மெளனமாக்குவார் . கடைசிபரியந்தம் அவர்களை வருத்தி அஸ்திவாரங்களினின்று பெயர்த்துப்போடுவார். அவர்கள் துன்பத்தில் மூழ்குவார்கள் ; இனி எவரும் அவர்களை நினையார்.

20. தங்கள் பாவங்களை நினைத்துப் பயந்து நடுங்குவார்கள். அவர்கள் அக்கிரமங்களே அவர்களுக்கு விரேதமாய் அவர்களைக் குற்றஞ்சாட்டும்.