இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

ஞானாகமம் - அதிகாரம் 02

 அக்கிரமிகள் தங்கள் கெட்ட நடத்தைக்காகச் சொல்லும் முகாந்தரங்கள்.

1. தகுந்த யோசனையில்லாமல் அவர்கள் சொல்லுவதாவது : நமது சீவியகாலம் சொற்பமானதாயும் கவலை நிறைந்ததாயுருக்கின்றது. மனிதன் மரணத்துக்குப் பின் யாதொரு நன்மையும் அடையப்போகிறதில்லை; மறுலோகத்தினின்று திரும்பிவந்த எவ்னையாவது யாதுமறிந்ததில்லை.

2. ஒன்றுமில்லாமையினின்று பிறந்த நாம் மரணத்துக்குப் பின்னும் ஒன்றுமில்லாமையாய்ப் போவோம். ஏனெனில் நமது நாசியில் மூச்சானது புகையைப் போலிருக்கின்றது. நமது இருதயத்தை அசையச் செய்யும் உயிரானது ஒரு நெருப்புப் பொறி போலிருக்கின்றது.

3. அது அவியவே சரீரம் சாம்பலாய்ப் போகின்றது. உயிரோ சிறு காற்றைப்போல் சிதறிப்போகும். நமது சீவியம் மேகத்தின் நிழலைப்போல் கடந்துபோய் சூரியக்கதிர்னளால் துரத்தப்பட்டு அதினுடைய உஷ்ணத்தால் கனத்துப்போகும் மூடுபனியைப்போலாகிவிடும்.

4. காலத்தோடு நமது பெயரை யாவரும் மறந்துவிடுவார்கள் . நமது செய்கைகளையும் ஒருவரும் நினைக்கமாட்டார்கள்.

5. ஏனெனில் நமது சீவியகாலம் நிழலைப் போல் கடந்து மறைக்கின்றது.மரணத்துக்குப்பின் திரும்புதலில்லை. ஏனெனில் முத்திரிக்கப்பட்டது;எவனுந் திரும்பி வருவதில்லை.

6.ஆனதால் வாருங்கள், தற்காலிமிருக்கும் நன்மைகளைச் சுகிப்போம். நமது வாலிபத்திலேயே சிருஷ்டிகளை உபயோகித்துக் கொள்ளத் தீவிரிப்போம்.

7. மேலான ரசத்தை யுட்கொண்டு ஆனந்தங் கொள்ளுவோம். வாசனைத் தைலத்தைப் பூசிக்கொள்ளுவோம். காலத்துக்கேற்றபடி புஷ்பங்களைப் பறித்துக்கொள்ளுவோம்.

8. ரோசாப்புஷ்பங்களை வாடுகிறதற்கு முந்தியே முடியாகத் தரிப்போம். நாம் சந்தோஷ உல்லாசங் கொள்ளாத ஸ்தலம் எங்குமில்லாதிருப்பதாக.

9. நம்முமைய காமச் செய்கைகளை யாவரும் நடத்துவாராக. எங்கும் சந்தோஷ அடையாளங்கள் காணப்படுவதாக. ஏனெனில் இதுவே நமது பாகம், இதுவே நமது கதி.

10. நீதிமானாகிய எளியவனை வருத்துவோம். விதவையை நிஷ்ரேம்பண்ணுவோம். நரைத்த விருத்தாப்பிரையும் வணங்கோம்.

11. நமது வலுமையே நீதியின் சட்டமாகக்கடவது.ஏனெனில் பலமற்றது பிரயோசனமற்றதாயிருக்கின்றது.

12. ஆனதால் நீதிமான் நமக்கு இடையூறு வருத்துவதாலும், நமது நடத்தைக்கு அவன் விரோதியாயிருப்பதாலும்,நமது பாவாக்கிரமங்களை முன்னிட்டு அவன் நம்மைக் குற்றஞ் சாட்டுவதாலும், நமது குற்றங்களைக் கண்டித்து, அவன் நம்மை அவமானப்படுத்துவதாலும், அவனை நமது மாய்கைக்குள்  சிக்கும்படி செய்வோம்.

13. தான் சர்வேசுரனை அறிவதாகவும், தான் அவருடைய பிள்ளையென்றுஞ் சொல்லிக்கொள்ளுகிறான்.

14. நமது நினைவுனையே சீர்தூக்கி நிறுக்கிறனானான்.

15.அவனுடைய சீவியம் மற்றவர்களுடையதைப்போல அல்லாததாலும், அவன் வேறு நடத்தையைப் பின்செல்லுகிறவனாதலாலும், அவனைக் காண்பதே சகிக்கமுடியாதிருக்கின்றது.

16. ஈனத்தனத்தை நாடுகிறவர்களென்று நம்மை எண்ணுகிறான். அசுத்த காரியம் போல நம்முடைய நடத்தையை விலக்குகிறான். நீதிமான்கள் மரணத்தருவாயில் ஆசிக்குங் கதியை அதிக ஆவலோடு நாடிச் சர்வேசுரன் தன் தந்தையாயிருப்பதாகக் கர்வங்கொள்ளுகிறான்.

17. ஆனதால் அவன் வார்த்தைகள் உண்மையோவென்று பார்ப்போம் ; அவனுக்கென்ன நடக்கப்போகிறதென்று பரிட்சித்து அவன் கதி எப்படிப்பட்டதென்றறிவோம்.

18. ஏனெனில் மெய்யாகவே அவன் சர்வேசுரனுடைய பிள்ளையானால் அவரவனைக்காப்பாற்றிச் சத்துசராதின் கைனளினின்றுஅவனை இரட்சிப்பார்.

19. அவனுடைய பய பக்தியை அறியவும், பொறுமையைச் சோதிக்கவும், அவனை நிந்தை வேதனைப்படுத்திப் பார்ப்போம்.

20. அவமான மரணத்துக்கு அவனை உட்படுத்துவோம். அவன் வார்த்தைகள் உண்மையானால் அவனுக்குத் தீங்கு நடவாது.

21. அக்கிரமிகள் இந்த எண்ணங்களையெல்லாங்கொண்டு மோசம்போனார்கள். ஏனெனில் அவர்கள் கெட்ட எண்ணமே அவர்களைக் குருடராக்கினது.

22. சர்வேசுரனுடைய இரகசியங்களை அறியார்கள். நீதியின் சம்பாவனையை அவர்கள் ஆசித்தவர்களல்ல. பரிசுத்த ஆத்துமாக்களின் மகிமையை மதித்தவர்களுமல்ல.

23. ஏனென்றால் சர்வேசுரன் மனிதனை நித்தியத்துக்கும்  உண்டாக்கினார். தமது சாயலாக அவனைச் சிருஷ்டித்தார்.

24. ஆனால் பசாசின் காய்மகாரத்தால் சாவு  பூலோகத்தில்  பிரவேசித்தது.

25. பசாசின் பட்சமாய்ச் சேர்ந்தவர்கள் அதின் மாதிரிகையைப் பின்கற்றக்கடவார்கள்.