இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இறைவன் திருத்தலத்தில் அவர் அன்பில் வளரவே ***

இறைவன் திருத்தலத்தில் அவர் அன்பில் வளரவே
அளித்தேன் என்னை முழுதும் புதுவாழ்வு மலரவே

1. மலராய் இன்று மலர்ந்தேன்
உந்தன் பதத்தில் துலங்கவே
மெழுகாய் நின்று எரிந்தேன் உந்தன் உறவில் உருகவே
இணைவேன் உன்னில் உறைவேன்
என்னைப் பலியாய் ஏற்றிடுவாய்

2. கனியாய் இன்று கனிந்தேன் பலி இரசமாய் வழங்கவே
மணியாய் நின்று விளைந்தேன்
உந்தன் விருந்தாய் விளங்கவே
படைத்தேன் பதம் பணிந்தேன்
என்னைப் பலியாய் ஏற்றிடுவாய்