இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புதியதோர் உலகைப் படைத்திட வந்தேன் ***

புதியதோர் உலகைப் படைத்திட வந்தேன் - உமக்கு
புதியதோர் மனதைக் கொடுத்திட வந்தேன்
இறைவா இறைவா சரணம் தலைவா

1. இன்று நீதி நியாயம் நேர்மை நிலவிடும் உலகம்
என்றும் அன்பு அமைதி அறங்கள் தழைத்திடும் உலகம்
சமத்துவ சமுதாயம் வழங்கிடும் உலகம் - எந்த
ஜாதி பிரிவு அனைத்தும் தவிர்த்திடும் உலகம்

2. இன்று வாழ்வில் எளிமை தூய்மை துலங்கிடும் உலகம்
மக்கள் சொல்லில் செயலில் வாய்மை விளங்கிடும் உலகம்
ஏழ்மையில் சிரிப்பில் உம்மைக் கண்டிடும் உலகம்
எங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியமும் தந்திடும் உலகம்

3. பகுத்து உண்ணும் பண்பைப் போற்றிடும் உலகம் என்றும்
கொடுத்து வாழும் குணமும் கொண்டிடும் உலகம்
வறியோர் வாழ்வில் வசந்தம் கொணர்ந்திடும் உலகம் புது
விடியல் தேடி பயணம் சென்றிடும் உலகம்