எனது கர்த்தரின் ராஜரீக நாள் எப்போ வருகுமோ? ***

எனது கர்த்தரின் ராஜரீக நாள் எப்போ வருகுமோ?
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி எப்போ பெருகுமோ? 
மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,
வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே

1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,
ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,
ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,
ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே

2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே ;
சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே ;
பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே ;
பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே

3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே ,
ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே ;
வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே ;
வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே

4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே ;
சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே ;
நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே ;
நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே