இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எந்தன் மனம் ஏந்தி வந்தேன் ***

எந்தன் மனம் ஏந்தி வந்தேன்
உந்தன் பதம் வாழ்வைத் தந்தேன்
ஏற்பாய் இறைவா பரம்பொருளே
தந்திடும் உம் தரிசனம் கண்டிடவே வந்தேன்
தவித்திடும் மனதையே உன்னிடம் தரவந்தேன்

1. உறவின் நிறைவே உண்மையின் திருவே
உண்மையில் எனைச் சேர்க்க இதயம் தருகின்றேன்
நல்லுறவைத் தேடித் தேடி உலகெங்கும் நான் திரிந்தேன்
உள்ளிருக்கும் உனை உணர நானும் மறந்திட்டேன்
எதை நான் தருவேன் என் அன்பு தெய்வமே
இருப்பதைப் பகிரவந்தேன் அன்பு தெய்வமே
உன்னில் நானும் என்னில் நீயும் இணைந்திடவே வந்தேன்

2. பற்பல முறைகளிலே பல்வேறு வகைகளிலே
முன்னோர்கள் வாழ்வினிலே இறைவா பேசினீர்
இவ்விறுதி நாட்களிலே இறைமகன் வழியாக
நிறைவாக எம்மோடு பேசும் கடவுளே
நிலைவாழ்வைத் தேடுகிறேன் அன்பு தெய்வமே
திருமகனை பலியாகத் தந்த தெய்வமே
உந்தன் அன்பில் என்னை நீயும் இணைத்திடவே தந்தேன்