நல்ல ஆயன் ஆண்டவர் நாளும் என்னை ஆள்பவர் ***

நல்ல ஆயன் ஆண்டவர் நாளும் என்னை ஆள்பவர்
ஆடுகளை வாழ வைக்க உயிர் கொடுக்கும் ஆயராம்
தவறும் ஆட்டைத் தேடுவார்
தோளில் சுமந்து பாடுவார்  ஆடுவார்
ஏது குறை எந்தன் வாழ்விலே ஓ
ஏது பயம் எந்தன் நெஞ்சிலே
பெயர் சொல்லி அழைக்கின்றவர் - என்னை

1. கடல் கடந்து செல்லும் போதும்
தீ நடுவே நடக்கும் போதும்
கரம் பிடித்து வழிநடத்தும் ஆயன் நல்லவர்
இருள் நிறைந்த பாதையிலே
இடறி விழும் பொழுதினிலே
திடமளித்து தோள் கொடுக்கும் ஆயன் வல்லவர்
எந்தன் மீட்பும் ஒளியுமாகி
காக்கும் கோட்டை அரணுமாகி
மந்தைக்காக உயிர் கொடுப்பவர்
நீர்நிலை அருகிலே நித்தமும் நடத்துவார்
நீதியின் வழியிலே அமைதியில் நடத்துவார்
கோலும் உமது நெடுங்கழியும் காலந்தோறும் காத்திடும்
தீமை கண்டு எதற்கும் அஞ்சிடேன்
ஆண்டவரே என் ஆயர் ஏது குறை எந்தன் வாழ்விலே

2. பகல் வெளிச்சம் தாக்கிடாமல்
இரவின் நிலா தீண்டிடாமல்
காத்துக் கொள்ளும் அன்பின் ஆயன் என்றும் வல்லவர்
நண்பர் கூட்டம் வெறுக்கும் போதும்
பகைவர் கூட்டம் சிரிக்கும் போதும்
அன்பர் இயேசு என்னை என்றும் நடத்திச் செல்லுவார்
என் தலையில் எண்ணைய் பூசி
வாழ்வின் கிண்ணம் நிரம்பச் செய்து
எனது பெயரை நிலைநிறுத்துவார்
காரிருள் சூழலாம் கதவுகள் மூடலாம்
பழிகளால் வாடலாம் விழிகளும் மூடலாம்
அந்த நேரம் வந்து என்னை சொந்தமாக்கி கொண்டிடும்
இந்த அன்பு என்றும் போதுமே
ஆண்டவரின் இல்லத்திலே
ஆயுளெல்லாம் வாழ்ந்திருப்பேன்