இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் ***

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்
கனிவோடு ஏற்பாய் ஆண்டவனே - உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவனே

1. பொன்னான வாழ்வைப் புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் ஆ
புதிரான வாழ்வே எதிரானதாலே
பொலிவாகச் செய்வாய் ஆண்டவனே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரனே

2. அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம்
திரியாகக் கருகி மெழுகாக உருகி
பலியாக வைத்தோம் ஆண்டவனே - புது
ஒளியாக மாற்றும் தூயவனே