இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

சமர்ப்பணம் செய்தேன் இறைவா ***

சமர்ப்பணம் செய்தேன் இறைவா
உறவினை வளர்க்கும் தூதனாக
என்னையே தந்தேன் தலைவா

1. ஒளியினைத் தேடும் விழிகளுக்கு
நம்பிக்கை ஒளியைக் கொணர்ந்திட சமர்ப்பணம்
புன்னகை மறந்த இதழ்களுக்கு
குறையாத மகிழ்வைக் கொணர்ந்திட சமர்ப்பணம்
என்னை ஓர் கருவியாய் ஏற்றிடுவாய்
புதுப்படைப்பாய் மாற்றிடுவாய்

2. உறவுகள் பிரிந்து தவிப்பவர்க்கு
அன்பின் தோழமை கொணர்ந்திட சமர்ப்பணம்
உரிமைகள் இழந்து உடைந்தவர்க்கு
உரிமை வாழ்வைக் கொணர்ந்திட சமர்ப்பணம்