இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

இருகரம் குவித்து இறைவா தொழுதோம் ***

இருகரம் குவித்து இறைவா தொழுதோம்
இதயத்தை பதத்தில் பலியாய் அளித்தோம்

1. நிலத்தில் விளைந்த மணிகள் குவித்து
கொடியில் குலுங்கும் கனிகள் உதிர்த்து
படைப்புகளனைத்தும் பரம்புகழ் இசைத்து
பகலவன் ஒளியில் பலியாய் உயரும்

2. பசித்திடும் மனதில் உதித்திடும் கனவும்
புசித்தவர் உள்ளத்தில் எழுந்திடும் மகிழ்வும்
மணியென உழைப்போர் உதிர்க்கும் துளியும்
பிணியில் மடிவோர் துயரும் படைத்தோம்