இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எது வேண்டும் உனக்கு இறைவா ***

எது வேண்டும் உனக்கு இறைவா
எது தந்த போதும் உனக்கது ஈடாகுமா
எது வேண்டும் எது வேண்டும்

1. மலர் யாவும் தந்தேன் திருப்பாதம் வைத்தேன்
உனக்கது மணமில்லையோ
கனி யாவும் தந்தேன் திருப்பீடம் வைத்தேன்
உனக்கது சுவையில்லையோ
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
எளிய என் இதயம் தந்தேன்
அது ஏற்றதாய் இருக்குமோ இறைவா

2. பொருள் கோடி தந்தேன் பொன்னோடு வந்தேன்
உனக்கது ஈடில்லையே
உள்ளதைத் தந்தேன் கடன் வாங்கித் தந்தேன்
உனக்கது இணையில்லையே
எதை நான் தருவேன் தலைவா
நீ விரும்புவதென்னவோ இறைவா
சின்ன என் இதயம் தந்தேன்
அது சிறப்பாய் இருக்குமோ இறைவா