“ மரியாயைப் பின்சென்றால் பாதை தவற மாட்டாய். மரியாயிடம் மன்றாடினால் அவ நம்பிக்கைப்பட மாட்டாய்.. மரியாயை நினைத்தால் தப்பறையில் விழ மாட்டாய். அவர்கள் உன்னைப் பிடித்திருக்கையில் நீ விழ மாட்டாய். அவர்கள் உன்னைப் பாதுகாக்கையில் நீ பயப்பட மாட்டாய். அவர்கள் வழி நடத்துகையில் நீ களைப்படைய மாட்டாய். அவர்கள் உனக்கு சகாயம் செய்யும் போது நீ பத்திரமாக வந்து சேருவாய் “ என்கிறார் புனித பெர்னார்ட்..
மேலும் அவர் கூறுகிறார், “ தன் திருக்குமாரன நம்மை அடிக்காதபடி தடுக்கிறார்கள். சாத்தான் நமக்குத் தீங்கு செய்யாதபடி தடுக்கிறார்கள். புண்ணியங்கள் நம்மை விட்டு நீங்காதபடி தடுக்கிறார்கள். வரப்பிரசாதங்களை இழந்து போகாதபடி தடுக்கிறார்கள் “
நன்றி : புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் எழுதிய மரியாயின் இரகசியம் நூல்., மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. போன் : 0461-2361989, 9487609983, 9894398144, 9487257479
ஆகையால் மாதாவின் பக்தியும் அன்பும் அதிகமாக கொண்டுள்ளதிற்காக பெருமைப்படுவோம். தைரியமாக வாழ்வோம்.
இயேசுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !