இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அர்ப்பணமாகிடும் நேரமிது அர்ப்பணிக்கின்றோம் இறைவா ***

அர்ப்பணமாகிடும் நேரமிது அர்ப்பணிக்கின்றோம் இறைவா

1. இறையாய் குருவாய் பலிப்பொருளாய்
இயங்கிடும் திருப்பலி தனிமுதலே
அரும்பலி தனைத்தரும் எங்களையும்
அர்ப்பணம் தந்தோம் ஏற்றிடுவாய்

2. திருப்பலிச் சுடராய் ஒளிர்பவனே
திரித்துவ இணைப்பாய் கலந்தவனே
திருமறைப் பயிர் வளர் பலிப்பொருளாய்
திகழ்ந்திடும் தியாகப் பலி ஏற்பாய்