இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

என் ஆன்மாவின் சுரங்களை ***

என் ஆன்மாவின் சுரங்களை - இறைவா
உன் பாதம் படைக்கின்றேன் - அவை
விண்ணில் தவழும் சங்கீதமல்ல - என்
வாழ்க்கை சோக (இனிய) இராகங்களே

1. காலையில் பூபாளம் இசைத்தேனே
மாலையில் முகாரி தவழ்கின்றதே
அலையில் தவழும் இராகமாய் ஆ
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன்

2. என் வாழ்க்கைப் பயணத்தில்
இசைக்கும் சிந்து இராகங்களை
இதயம் பாடும் சங்கீதமாய் ஆ
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன்