இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வந்தேன் உந்தன் இல்லம் இறைவா ***

வந்தேன் உந்தன் இல்லம் இறைவா - இன்று
தந்தேன் எந்தன் உள்ளம் தலைவா
உள்ளதை எல்லாம் எடுத்து வந்தேன் - அதில்
நல்லவை அனைத்தையும் உவந்து தந்தேன்
எனை ஏற்றிடுவாய் இறைவா
உந்தன் கருவியாய் மாற்றிடுவாய்

1. கோதுமை மணியென மடிந்து பலன் தரவே
எரியும் மெழுகென உருகி ஒளி தரவே
என்னையே முழுவதும் தருகின்றேன்

2. உரிமைகள் கடமைகள் இழந்து தவித்தவரே
நலிவுறும் வாழ்வினில் வளமை நிலைத்திடவே
என்னையே முழுவதும் தருகின்றேன்