இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

புது நாளில் புது நினைவில் நாம் கூடுவோம் ***

புது நாளில் புது நினைவில் நாம் கூடுவோம்
புது வானம் புது பூமி நாம் காணுவோம்

1. இறைவனின் ஆலயங்கள் நாம்
இணைந்தே பலி செய்வோம்
இனிமை பொங்கும் நேரம்
இங்கும் எங்கும் தேவன் - அவர்
கரத்தில் தவழ்ந்து நாளும்
களிப்பில் நாமும் வாழ்வோம்

2. இறைவனின் ஆட்சியிலே நாம்
இயேசுவின் சாட்சிகளாய்
அன்பெனும் மொழியில் பேசி
அருளொளி எங்கும் வீசி - அவர்
அன்பராய் என்றும் நாமும்
ஆனந்த நிறைவில் வாழ்வோம்