இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அனைவருமே இறைபணி புரிய கடமை பட்டுள்ளோம்


ஒரு சில பங்குதந்தையரின் செயல்பாடுகள் சரியில்லாததால் திருப்பலிக்கு  வருவதை தவர்த்து, அப்படியே  ஆலயத்துக்கு  செல்வதையே மறந்து  அதன் தொடர்ச்சியாக திருச்சபையை  குறை கூறி  கொண்டிருக்கும்  ஒரு சிலரை நான்  அறிவேன்.

நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

  போப் முதல்  நேற்று திருமுழுக்கு பெற்ற ஓர் புதிய விசுவாசி வரை அனைத்து   உறுப்பினர்களும் இணைந்தது தான்  இயேசுவின் உடலான திருச்சபையாகும்..  திருச்சபையின் வளர்ச்சியில் குருக்கள்,ஆயர்கள் துறவறத்தார்களுக்கு இருக்கிற அதே பொறுப்பு ஒவ்வொரு சாதாரண கத்தோலிக்க விசுவாசிகளுக்கும் இருக்கிறது.

குருக்களை குறை கூறி கொண்டிருப்பதை விட்டுவிட்டு அவர்கள் செய்ய தவறுகின்ற,இறைபணியை,பொதுநிலையினரான   நாமே  அன்பியங்கள் மூலமாகவோ,பக்தசபைகள் மூலமாகவோ அல்லது பங்குபேரவை மூலமாகவோ முன்னெடுத்து மிக சிறப்பாக செய்யவேண்டும்

 திருப்பலிக்கு நாம் செல்கின்ற போது அங்கே திருப்பலி நிறைவேற்றுகின்ற குருவின் அந்தரங்கத்தை ஆராய வேண்டியதில்லை.குருவையல்ல மாறாக  ஆண்டவராம் இயேசுவையே நாம் சந்திக்க போகிறோம் என்ற உணர்வோடு செல்வோம். 

ஒரு தவறான குரு நிறைவேற்றுகின்ற திருப்பலியில் பங்கு பெறுகின்ற  நாம் திருப்பலியின்  எல்லா செபங்களையும் பக்தியோடு செபித்து,தூய உள்ளத்தோடு அந்த திருப்பலியை கடவுளுக்கு ஒப்புகொடுத்தால்  கண்டிப்பாக அந்த திருப்பலியின் வழியாக  இறை நலன்களை நிறைவாக பெற்று கொள்வோம்... 

இறைவரம் பெற்ற   குரு நிறைவேற்றுகின்ற அற்புதமான திருப்பலியில் கலந்து கொள்ளும் நாம்,,அந்த திருப்பலியில் ஒன்றிக்காமல் எந்த செபங்களையும் செபிக்காமல் பராக்கு பார்த்து,பிறரை வேடிக்கை பார்த்து,குறை கூறி,விளையாடி விட்டு வந்தால்   அந்த அற்புத  திருப்பலியால்  உங்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்க போவதில்லை.நீங்கள் வெறுமனே  தான் திரும்புவீர்கள்.

திருப்பலியின் பலன்களை பெற்று கொள்வது உங்கள் நம்பிக்கையை பொறுத்தது தானே தவிர, குரு உட்பட மற்றவர்களின் நம்பிக்கையை பொறுத்து அல்ல. 

திருப்பலி நிறைவேற்றுவது குரு மட்டுமல்ல,பாடகர்கள்,வாசகம் வசிப்பவர்,முன்னுரை படிப்பவர்,மன்றாட்டு சொல்பவர்,உபதேசியார்,பீட சிறார்கள்,மணி அடிப்பவர்  மற்றும் அந்த திருப்பலியில் பதில் செபம்  சொல்லி,இணைந்து பாட்டு  பாடி செபித்து கொண்டிருக்கும் இறைமக்க,ள்  அனைவரும்  இணைந்து தான் திருப்பலி ஒப்புகொடுக்கிறோம் .

அதேபோன்று ஒரு பங்கை வழிநடத்துவது குரு  மட்டுமல்ல,பங்கு பேரவை,அன்பியங்கள்,பக்த சபைகள் மற்றும் அனைத்து பங்கு இறைமக்களும் இணைந்து அந்த பங்கில் இறைபணியை மிக சிறப்பாக திட்டமிட்டு செய்யவேண்டும். 

இதில் ஒருவர், அவர் குருவாக இருந்தாலும் தனது அவிசுவாசத்தால் மந்தையை சிதறடித்து கொண்டிருந்தால்,கடவுளிடம் ஒருநாள் அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும்.கண்டிப்பாக யாரும் தப்ப முடியாது.ஆகவே  நாம்  யாரையும் தீர்ப்பிட வேண்டாம்.நம்மால் முடிந்த இறைபணியை தொடர்ந்து செய்வோம்.விண்ணகத்திலிருந்தே நிச்சயமாக நமக்கு கைம்மாறு கிடைக்கும்.   

‘’மலாக்கி 3:17,’நான் செயலாற்றும் அந்நாளில் அவர்கள் என் தனிப்பெரும் சொத்தாக இருப்பார்கள்’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.ஒரு தந்தை தமக்கு பணிவுடை செய்யும் மகன் மீது கருணை காட்டுவது போல நான் அவர்கள் மீது கருணை காட்டுவேன்.

18,அப்பொழுது நீங்கள் நேர்மையாளர்க்கும் கொடியோர்க்கும் கடவுளுக்கு ஊழியம் செய்வோர்க்கும் அவருக்கு ஊழியம் செய்யாதோர்க்கும் உள்ள வேற்றுமையை கண்டுகொள்வீர்கள்’’

ஆமென்.