இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம் ***

காணிக்கை கரம் ஏந்தி நான் வரும் நேரம்
காலத்தின் தலைவா நீர் கரம் நீட்ட வேண்டும்
காரணத்தோடு எனைப் படைத்தவரே
காணிக்கையாய் எனை ஏற்றுக் கொள்வீரே

1. உள்ளத்தை உமக்கே தர வந்தேன்
உகந்தது அதுவே என நினைத்தேன்
உலகத்தை அன்பால் மீட்டவரே
உமக்கென எனை நான் தருகின்றேன்

2. என்னகம் படைத்து எனைக் காத்தீர்
என்னை நான் தருவேன் உமக்கெனவே
எனக்கென்று ஒன்றில்லை இவ்வுலகில்
என்னையே அளிக்கின்றேன் உமக்குடனே