இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் ***

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே

1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம்
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம்
உள்ளம் எந்தன் உள்ளம் அது
எந்நாளும் உன் இல்லமே

2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில்
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே
தந்தேன் என்னைத் தந்தேன் என்றும்
என் வாழ்வு உன்னோடு தான்