இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே ***

அருள்நிறை மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே
பெண்களுள் சிறந்தவள் நீயே மாமரியே நீ வாழ்க
அன்னையே வாழ்க வாழ்க
லூர்தன்னையே வாழ்க வாழ்க

1. வாழ்வில் கருணையாய் வந்திடுவாய்
வறியவர் துயரம் தீர்த்திடுவாய்
உரிமையை இழந்து உழல்வோர்க்கு
உலகம் காண வழிசெய்வாய்
உள்ளங்கள் இணைந்தே போராடும்
மனிதர்க்குத் துணையாய் நின்றிடுவாய்
உறவில் மலரும் வாழ்வாக
உண்மை வழியைக் காட்டிடுவாய்

2. மனதினில் நம்பிக்கை வளர்த்திடுவாய்
மனிதம் காத்திடத் துணை செய்வாய்
உரிமைக் குரலாய் எழும்போது
அடிமை சிறையைத் தகர்த்திடுவாய்
விடியலுக்காக வாழ்ந்திடவே
விடுதலைத் தாயாய் அருகிருப்பாய்
மண்ணில் மகத்துவம் கண்டிடவே
மாண்புடன் வாழ்ந்திட அருள் புரிவாய்