இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

வாழ்வை பலியாய் மாற்றிட வந்தேன் என்னையே ஏற்றிடுவாய் ***

வாழ்வை பலியாய் மாற்றிட வந்தேன் என்னையே ஏற்றிடுவாய்
முழுமனதுடனே கையளிக்கின்றேன் காணிக்கை ஏற்றிடுவாய்

1. கோதுமை மணியும் திராட்சைக் கனியும்
புது உரு பெறுவது போல்
அன்பும் அமைதியும் நீதியுமே
மனிதனில் மலர்ந்திட உயிர் தருவோம்

2. நான் வாழப் பிறரும் பிறர் வாழ நானும்
தேவை என்றுணர்ந்தேன்
சமத்துவ சோதர நோக்குடனே
புதுயுகம் காண்போம் அகத்தினிலே