இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா ***

அன்னையே ஆரோக்கியத்தாயே அருட்கடலே அம்மா
அலைகடல் வற்றலாம் பெருவெளியாகலாம்
அழியாத அறமோடு நிலையான உமதன்பு
அழியாத கருணையம்மா
ஆரோக்கிய மாதாவே அம்மா
தீராத பிணி தீர்க்கும் திருத்தாயே வேளைநகர்
ஆரோக்கிய மாதாவே அம்மா

1. வாடாத மலரல்லவா நீ வாடாத மலரல்லவா
இறைமகனுக்கும் வீடல்லவா
அந்த வீடெங்கள் நிழலல்லவா
இது வேளைநகர் செய்த தவமல்லவா

2. அலைகடல் ஓசை உன் பாமாலை
தவழ்ந்த உன் அன்புமொழி பூமாலை
இயற்கை எழில் சிந்தும் சோலை
வணங்கி மகிழ்வோம் உத்தமியின் தாளை