இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

341 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பொன்னப்பநாடார் காலனி, நாகர்கோவில்


அற்புத குழந்தை இயேசு ஆலயம்.

இடம் : பொன்னப்பநாடார் காலனி, நாகர்கோவில் 4.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்தந்தை மைக்கேல் ஏஞ்சல்

குடும்பங்கள் : 425
அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

மாதத்தின் முதல் ஞாயிறு காலை 06.30 மணிக்கு திருப்பலி நற்கருணை ஆசீர்.

வியாழன் மாலை 05.30 மணிக்கு ஜெபமாலை, குழந்தை இயேசு நவநாள் திருப்பலி

திங்கள் முதல் சனிக்கிழமை வரை திருப்பலி : காலை 06.15 மணிக்கு.

திருவிழா : ஜனவரி மாதத்தில்.

வரலாறு :

நாகர்கோவில் நகரில் எழில் நிறைந்த பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

துவக்கத்தில் தற்போதைய ஆலயத்திற்கு முன்பு ஒரு சிறு கூராரம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.

இவ்வாலயம் வட்டக்கரை புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. பின்னர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

அருட்பணி ததேயுஸ் பணிக்காலத்தில் புதிய ஆலயத்திற்கு 16-01-2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டது.

அருட்பணி ததேயுஸ் பணிக்காலத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 10-05-2013 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பல்வேறு சபைகள் இயக்கங்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மிகக் குறுகிய காலத்திலேயே நல்ல வளர்ச்சி பெற்று சிறந்த விளங்குகிறது இத்தலத் திருச்சபை.

நாகர்கோவில் - இராஜாக்கமங்கலம் வழி பேருந்தில் பயணித்து கார்மல் பள்ளிக்கூட பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் இவ்வாலயத்தை அடையலாம்.

பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்

மின்னஞ்சல் : joseeye1@gmail.com

https://www.facebook.com/permalink.php?story_fbid=2474048299496481&id=2287910631443583