இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

318 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், புதுக்கிராமம்


தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்.

இடம் : புதுக்கிராமம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
மறை வட்டம் : கன்னியாகுமரி

நிலை : பங்குத்தளம்
கிளை : தூய திருச்சிலுவை ஆலயம், சிலுவைநகர்.

பங்குத்தந்தை : அருட்பணி L. கிறிஸ்டோ டாபின்

குடும்பங்கள் : 232
அன்பியங்கள் : 9

திருத்தூது கழகங்கள் : 7
பணிக்குழுக்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 06.00 மணிக்கு

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு தூய மிக்கேல் அதிதூதர் நவநாள், திருப்பலி, நற்கருணை ஆராதனை.

மண்ணின் மைந்தர்கள் :
அருட்பணியாளர்கள்:
1. Fr ஆரோக்கிய ஆன்றோ மிக்கேல் ராஜ்
2. Fr சகாய ஜெரோம்
3. Fr வில்சன்

அருட்சகோதரிகள் :
1. Sis சகாய ஜெனிஷா
2. Sis மேரி உதயா
3. Sis சகாய கனகம்
4. Sis சகாய அனுஷா
5. Sis எனஸ்ட் ரேன்சம் பிரீத்தி
6. Sis ஆன்றோ மெல்டா.

வழித்தடம் : கன்னியாகுமரி பேருந்து நிலையத்திற்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

முக்கடலும் சங்கமிக்கும் குமரியில், கடற்காற்றின் வருடலும், கார் மேகங்களின் குளுமையும், மரங்களின் பசுமையும் கொண்ட அழகிய புதுக்கிராமம் ஊரில் பார்போற்றும் தூதனாய் புனித அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது.

"கிழக்கில் உதிக்கும் சூரியன், மேற்கில் மறையும் சூரியன்" -என்னும் இறைவனின் அரிய நிகழ்வு நடக்கும் இடத்திற்கு இடையே, கன்னியாகுமரி பேருந்து நிலையத்தை ஒட்டிய இடத்தில் வீடுகட்டி பல குடும்பங்கள் வாழ ஆரம்பித்தனர். இவ்விடத்தில் ஒரு சிறு குருசடி கட்டப்பட்டது. காலப்போக்கில் இது கன்னியாகுமரி பங்கின் கிளைப் பங்கானது.

அருட்பணி லாரன்ஸ் அவர்களின் பணிக்காலத்தின் போது ஆலயம் கட்ட அடிக்கல் போடப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 30-01-1993 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

11-07-2001 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அவ்வாண்டு முதல் பங்கு அருட்பணிப் பேரவை அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அருட்பணி ஜோசப் அவர்களின் முயற்சியால் ஆலய பீடம் 29-10-2010 புதுப்பிக்கப்பட்டது.

2007 ல் தூய மிக்கேல் சமூக நலக்கூடம் கட்டப்பட்டது.

அருட்பணி கோல்ட்ரிஜ் ஜிம் அவர்களின் முயற்சியால் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் ஆலய கோபுரம் கட்டப்பட்டு 24-09-2013 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2014 -ல் அருட்பணியாளர் இல்லம் கட்டப்பட்டு மேதகு ஆயரால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி ஆண்ட்ரூஸ் அவர்களின் முயற்சியால் கொடிமரம் வைக்கப்பட்டு 23-09-2017 -ல் மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2018 மே மாதத்தில் இருந்து அருட்பணி L.கிறிஸ்டோ டாபின் அவர்கள் பங்கின் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்தி வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்.

உலக சுற்றுலாத் தலமாக விளங்கும் கன்னியாகுமரிக்கு வருகின்றவர்கள், தவறாமல் கன்னியாகுமரி பேருந்து நிலைத்திற்கருகில் உள்ள இவ் அழகிய அருள் நிறைந்த ஆலயத்திற்கு வந்து தூய மிக்கேல் அதிதூதரின் பரிந்துரையால் இறைவனின் அருள் வளங்களை பெற்றுச் செல்ல அனைவரையும், பங்குமக்கள், பங்குத்தந்தை பங்கின் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்..!

புதுக்கிராமம்..! இது புதுமைகள் பல புரியும் தூய மிக்கேல் அதிதூதர் வாழும் புண்ணிய கிராமம்..!