இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

லேவியராகமம் - அதிகாரம் 21

ஆசாரியர்களுடய பரிசுத்த அநுசாரங்கள்

1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி: நீ ஆரோனுடைய குமாரர்களாகிய குருக்களிடத்திற் சொல்ல வேண்டியதேதெனில் குருவானவன் தன் ஊராரில் யாராவது மரணித்தால் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.

* 1-ம் வசனம். குருவாய் ஏற்படுத்தப்பட்டவர் உலகத்துக்கடுத்த காரியங்களில் உட்படாமல் தேவனுக்கும் அவரைச் சார்ந்த அலுவலுக்குமே தன்னை முழுவதும் ஒப்புக் கொடுத்தல் வேண்டும்.

2. ஆனால் அவனுடைய உறவின் முறையாரும் இனத்தாருமாகிய தகப்பனும் தாயும், குமாரனும், குமாரத்தியும், சகோதரனும்,

3. விவாகஞ் செய்யாத தம்மிடத்திலிருக்கிற கன்னிப் பெண்ணாகிய தமது சகோதரியும் (மரணித்தால் அவர்களுடைய சாவுக்காக அவன் தன்னைத் தீட்டுப் படுத்தலாகாது.

4. அவன் சனத்தாரில் பெரிய மனுஷனுடைய சாவுக்காக அவன் தன்னைத் தீட்டுப் படுத்தலாகாது.

5. அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியைச் சிரைக்காமலும், தங்கள் சதையைக் கீறிக் கொள்ளாமலும்,

6. தங்கள் தேவனுக்கு முன் சுத்தர்களாயிருந்து அவருடைய நாமத்தைப் பங்கப்படுத்தாதிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய தகனப்பலிகளையும செலுத்துகிறவர்களாகையால் பரிசுத்தர்களாயிருக்கக் கடவார்கள்.

7. அவர்கள் கற்பழிக்கப் பட்ட பெண்களையாவது விலைமகளையாவது புருஷனால் தள்ளப்பட்டவளையாவது விவாகஞ் செய்யாதிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் தேவனுக்கு அபிஷேகமானவர்களாயும், 

8. காணிக்கை அப்பங்களைச் செலுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால் அவர்களைப் பரிசுத்தப் படுத்துகிற கர்த்தராகிய நாம் பரிசுத்தராயிருக்கின்றமையால் அவர்களும் பரிசுத்தராயிருக்கக் கடவார்கள்.

9. குருவுடைய குமாரத்தி வேசித்தனம் பண்ணும்போதே அகப்பட்டுக்கொண்டு தன் தந்தையின் பெயரைப் பங்கப்படுத்தினாளானால் அவள் சாம்பலாய்ச் சுட்டெரிக்கப் படக் கடவள்.

* 9-ம் வசனம். பழைய ஏற்பாட்டிலே குருத்துவஞ் செலுத்தினவர்கள் விவாகம் செய்வதற்கு விக்கினமில்லாதிருந்தும் அவர்கள் குருவுக்கடுத்த உத்தியோகத்தை எந்நாளில் நடத்தி வருவார்களோ அந்த நாளிலே தங்கள் ஸ்திரீ சம்போகம் விலக வேண்டியவர்களாவார்கள். மீளவும் அவர்களுடைய குடும்பஸ்தர் முதலாய் விசேஷ பரிசுத்ததனத்திற்கும் கடனாளியாயிருப்பார்கள். அவர்கள் ஒரு குற்றஞ் செய்தால் சாதாரண சனங்கள் செய்யும் குற்றத்தை விட அதி கனமுள்ளதாக எண்ணவும் படும். அதிகமாய்ச் சிட்சிக்கவும் படும்.

10. பிரதான குரு, அதாவது தன் சகோதரருக்குள்ளே எவன் சிரசிலும் கைகளிலும் பரிசுத்த தைலத்தால் குரு அபிஷேகம் பெற்று அதற்குரிய திரு வஸ்திரங்களைத் தரிக்கின்றானோ அவன் தன் தலைப்பாகையை எடுத்துப் போடவுந் தன் வஸ்திரங்களைக் கிழித்துப் போடவும் ஒண்ணாது.

11. பிரேதங் கிடக்குமிடத்தில் அவன் பரிச்சேதம் போகலாகாது. தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவுமே அவன் தன்னைத் தீட்டுப் படுத்திக் கொள்ளல் ஆகாது.

12. அபிஷேகத் தைலம் அவன்மேல் வார்க்கப் பட்டதினாலே அவன் கர்த்தருடைய ஸ்தானத்தைத் தீட்டுப் படுத்தாதபடிக்குப் பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து வெளியே போகாமல் இருக்கக் கடவான். நாம் ஆண்டவர்.

13. இவன் கன்னிப் பெண்ணை மனைவியாகக் கொள்ளுவானொழிய, விதவையையானாலும் தள்ளப் பட்டவளையானாலும் கற்பு குலைந்தவளையானாலும் விலைமகளையானாலும் விவாகம் பண்ணலாகாது. அன்றியும் அவன் தன் சனத்துப் பெண்ணைத்தானே விவாகம் பண்ணக் கடவான்.

15. அவன் தன் வம்சத்தின் இரத்தத்தை இஸ்றாயேலியரில் சாமானிய சனங்களுடைய இரத்தத்தோடு கலக்க வேண்டாம். ஏனெனில் நாம் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் என்றருளினார்.

16. மறுபடியுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:

17. நீ ஆரோனுடன் சொல்ல வேண்டியதாவது: உன் குடும்பத்துச் சந்ததியாருக்குள்ளே அங்கவீனம் எவனுக்குண்டோ அவன் தன் தேவனுக்கு அப்பங்களைச் செலுத்தலாகாது.

18. அவன் குருடனானாலும், சப்பாணியானாலும், அதி சிறிய அதி பெரிய அல்ல கோணலான நாசியை உடையவனானாலும்,

* 18-ம் வசனம். பலி எப்படி மகிமையுள்ளதோ அப்படியே பலியிடுபவனும் யோக்கியதையுள்ளவனாயிருக்கத் தகும். சுவாமி தமக்குப் பழுது மாசு கறையற்ற பலிகளைச் செலுத்த வேண்டுமென்று கட்டளையிட்ட போது, அவைகளைச் செலுத்தும் குருக்களும் குறை குற்றமற்றவர்களாய் இருக்க வேண்டுமென்று கற்பித்திருக்கிறார் அல்லவா?

19. கால் ஒடிந்தவனானாலும், கை முறிந்தவனானாலும்,

20. கூனனானாலும், பீளைக் கணணனானாலும், பூ விழுந்த கண்ணனானாலும், எச்சில் தழும்புள்ளவனானாலும், விரைவாதமுள்ளவனானாலும், குருவுக்கடுத்த ஊழியங்ளை நடத்தலாகாது.

21. குருவாகிய ஆரோனுடைய சந்ததியாரில் அங்கவீனமுள்ளவனெவனோ அவன் கர்த்தருக்குப் பலிகளையும் தன் தேவனுக்கு அப்பங்களையும் செலுத்தி வரலாகாது.

22. ஆயினும் அவன் பரிசுத்த ஸ்தலத்திலே செலுத்தப் படும் அப்பங்களைப் புசிக்கலாம்.

23. புசிக்கலாம் என்றாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால் நமது பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு அவன் திரைக்குட்புறத்தில் பிரவேசிக்கவும், பலிபீடத்தண்டையிற் சேரவும் கூடாது. உங்களைப் பரிசுத்தமாக்குகிற ஆண்டவர் நாமேயென்று திருவுளம் பற்றினார்.

24. ஆகையால் மோயீசன் தனக்குக் கற்பிக்கப் பட்டிருந்ததெல்லாவற்றையும் ஆரோனோடும் அவனுடைய குமாரரோடும் இஸ்றாயேலியர் அனைவரோடும் சொன்னான்.