இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.

எண்ணாகமம் - அதிகாரம் 19

 செங்கிடாரிச் சாம்பலும்--தீட்டுக் கழிக்கும் தீர்த்தமும்.

1. பின்னுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:

* தேவபிரசைக்குக் கற்பிக்கப் பட்ட பலிகளும் இரீதிகளும் சேசுகிறீஸ்துநாதருடைய பலிக்கு அடையாளமாயிருந்தது பற்றித்தானே பலனடைந்தனவொழிய மற்றபடியல்லவென்று பலமுறையுஞ் சொல்லப் பட்டது அல்லவா? அந்தச் செங்கிடாரி பாவ நிவாரணப் பலியாகக் கர்த்தருக்குப் பலியிடப் பட்ட பிறகு பாளையத்திற்குப் புறம்பே சுட்டெரிக்கப் படும். அதன் சாம்பல் தண்ணீரிலே கலந்து போட்டால் அது தீட்டுள்ளவர்களுடைய அசுசியத்தைக் கழித்து விடும். அந்தச் செங்கிடாரிப் பலியும் தீர்த்தமும் சேசுநாதர் சுவாமி செந்நீராகிய தமது திரு இரத்தத்தைச் சிந்திய சிலுவைப்பலிக்கு அடையாளமாயிருந்தது பற்றி மாத்திரமே பலனுள்ளதாயிருந்தது. அன்றியும் திவ்விய இரட்சகர் உண்டாக்கின தேவத்திரவிய அனுமானங்களை எந்தக் கிறீஸ்துவன் பெறுகிறானோ அவன் திவ்விய இரத்தத்தின் பலனை அடைவதற்கு முன் அடையாளமாக இஸ்றாயேல் புத்திரர் செங்கிடாரிச் சாம்பலின் தீர்த்தத்தினாலே தங்கள் தீட்டுக்களைக் கழித்துப் போட்டார்கள்.

2. கர்த்தர் நியமிததிருக்கிற பலியின் இரீதிமுறை என்னவென்றால் இஸ்றாயேல் புத்திரர் பழுதற்றதும் மாசில்லாததும் நுகத்தடி சுமராததுமாகிய செந்நிறத்தையுடைய நல்ல பிராயமான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டு வர வேண்டுமென்று சொல்லு.

3. அதை ஆசாரியனாகிய எலெயஸாருக்கு ஒப்புக்கொடுங்கள். அவன் அதைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய் எல்லோருக்கும் முன்பாகச் சாகடிக்கக் கடவான்.

4. பிறகவன் அதின் இரத்தத்தில் விரலைத் தோய்த்துத் திரு வாசஸ்தலத்துக்கெதிராக ஏழு முறை தெளித்து, பின்பு

5. எல்லாரும் பார்க்க அதைச் சுட்டெரித்துப் போடுவான். அதின் தோலையும் அதின் மாமிசத்தையும் அதின் இரத்தத்தையும் அதின் சாணியையும் கூடவே சுட்டெரிக்கக் கடவான்.

6. அன்றியும் கிடாரியைச் சுட்டெரிக்கிற நெருப்பிலே அவன் கேதுருக் கட்டையையும் இஸோப்பையும் இருமுறை தோய்த்த இரத்தாம்பர நூலையும் போடக் கடவான்.

7. கடைசியில் ஆசாரியன் தமது வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம் பண்ணிப் பாளையத்தில் பிரவேசித்துச் சாயுங்காலமட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.

9. சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளையத்திற்குப் புறம்பே அதிசுத்தமான ஓரிடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்றாயேல் புத்திரரின் சபையார் காவலிலேயிருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரில் கலந்து தெளிக்குந் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். உள்ளபடி பாவ நிவாரணமாகவே அந்தக் கிடாரி சுட்டெரிக்கப் பட்டது.

10. கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சாயுங்காலமட்டுந் தீட்டுப்பட்டவனாயிருப்பான். இந்தப் பிரமாணம் பரிசுத்தப் பிரமாணமென்று இஸ்றாயேல் புத்திரர்களும் அவர்களிடத்தில் தங்குகிற அந்நியர்களும் நித்திய கட்டளையாக அனுசரிக்கக் கடவார்கள்.

11. செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள்மட்டுந் தீட்டுப் பட்டிருப்பான்.

12. அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அந்தத் தீர்த்தத்தினாலே தெளிக்கப் பட்டால் அவனுடைய தீட்டு கழிக்கப் படும். அவன் மூன்றாம் நாளிலே தெளிக்கப் படாமல் இருந்தால் ஏழாம் நாளிலே தெளிக்கப் பட்டாலும் அவன் தீட்டு கழியாது.

13. செத்துப் போனவனுடைய பிரேதத்தைத் தொட்டபின்பு எவன் மேற்படிச் சாம்பலைக் கலந்த தீர்த்தத்தினாலே தெளிக்கப் படாமலிருந்து திருக்கூடாரத்தை ஸ்பரிசிக்கத் துணிந்திருப்பானோ அவன் இஸ்றாயேலில் இராதபடிக்குச் சாவான். தீட்டுக் கழிக்குந் தீர்த்தத்தினாலே தெளிக்கப் படாமல் இருந்தமையால் அவன் தீட்டுப் பட்டிருப்பான். அந்தத் தீட்டும் அவன் மேலிருக்கும்.

14. ஒரு கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால் அதற்கடுத்தப் பிரமாணமாவது: அவனுடைய கூடாரத்திலே பிரவேசிக்கிற யாவரும் அங்கேயிருக்கிற எல்லாத் தட்டுமுட்டுகளும் ஏழுநாள் வரைக்குந் தீட்டுப்பட்டிருக்கிறதாம்.

15. மூடியில்லாமல் அல்லது மூடிக் கட்டாமலிருக்னும் பாத்திரங்கள் தீட்டுப் பட்டிருக்கும்.

16. வயல்வெளியிலே கொலையுண்டவனையாவது, தானாகச் செத்தவனையாவது, அவன் எலும்பையாவது, அவனுடைய சமாதியையாவது எவன் தொட்டானோ அவன் ஏழுநாள் தீட்டுப் பட்டிருப்பான்.

17. பாவநிவாரணமாகச் சுட்டெரிக்கப் பட்ட கிடாரியின் சாம்பலிலே கொஞ்சமெடுத்து ஒரு பாத்திரத்திலே போட்டு அதன் மேலே ஊற்றுச்சலம் வார்க்க வேண்டும்.

18. பிறகு சுத்தனான ஒரு மனிதன் அந்தத் தீர்த்தத்தில் இஸோப்பைத் தோய்த்துக் கூடாரத்தின் மேலும் பணிமுட்டுக்களின் மேலும் ஸ்பரிசத்தால் அசுத்தங் கொண்ட சகல மனிதர்களின் மேலும் தெளிப்பான்.

19. இவ்விதமே, சுத்தனானவன் மூன்றாம், ஏழாம் நாட்களில் தீட்டுப்பட்டவனைத் தெளித்துச் சுத்திகரப் படுத்துவான். இப்படி ஏழாம் நாளில் சுத்திகரத்தை அடைந்தவனோ தண்ணீரிலே ஸ்நானம் பண்ணித் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சாயந்தரமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.

20. இப்படிப்பட்ட ரீதிப்படி தீட்டுப் பட்டிருக்கிறவன் சுத்திகரிக்கப் படாவிடில் அவன் கர்த்தருடைய திருவாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினானென்றும், சுத்திகரிக்கிற தீர்த்தத்தால் தெளிக்கப் படவில்லையென்றும் சபையிலிராதபடிக்குக் கொலையுண்ணக் கடவான்.

21. இக்கற்பனை நித்தியப் பிரமாணமாயிருக்கும். மேற்படி தீர்த்தத்தைத் தெளித்தவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக் கடவான். சுத்திகரித்தத் தீர்த்தத்தைத் தொடுவனும் சாயந்தரமட்டும் அசுத்தனாகவிருப்பான்.

22. தீட்டுப் பட்டிருக்கிறவன் எதைத் தொடுவானோ அதுவும் தீட்டுப் படும். இப்படித் தீட்டுப்பட்டகைளைத் தொட்டவனும் சாயந்தர மட்டும் தீட்டு; பட்டவனாயிருப்பான் என்றருளினார்.